பக்கங்கள்

Friday, January 25, 2013

கொண்ட கொள்கைக்காக பதவி துறந்தவர்...........
கொள்கைக்காக போட்ட கருப்பு துண்டை மாற்றி, 
மஞ்சள் துண்டைபோட்டுக்கொண்டு “ நானும் 
கம்யூனிஸ்டுதான் என்று வித்தாரம் பேசும்
வித்தகர்கள் நிறைந்த கூட்டத்திலே.......

தினந்தோறும் பெண்கள் மீது நடைபெறும் கொடுரமான 
முறையில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு முடிவு கட்டுவதற்க்காக,மரணதண்டனை,ஆயுள் தண்டனை,
தனிமைச்சிறை, குண்டர்தடுப்பு சட்டம், ஆண்மை நீக்கம்,
விரைவானநீதி என்றுவிவாவதம் நடத்தும் தொலைக்
காட்சிகள்,பத்திரிக்கைகள், ஓட்டுக்கடசிகள்,அமைப்புக்கள்,
பிரபலங்கள், அரசு அதிகாரிகள்,சாதிவெறித்தலைவர்கள் 
போன்றவர்கள் நாளும் ஒரு கொள்கையும் நிமிடத்திற்கு
 ஒரு வேஷமாக போட்டு ஏமாற்றித்திரியும் சமூக 
பொருப்பில்லாத சுயநலவெறிபிடித்த, பணத்திற்க்காக 
மேடை போட்டுகொண்டு கொள்கைகளையும் நாட்டையும் 
விற்கும்அரசியல் வாதிகள் நிறைந்த  நாட்டிலே ............

பெண்களின் விடுதலைக்காக.பதவியை துறந்தவர் 
அண்ணல் அம்பேத்கார் அவர்கள்

போலி சோசலிச சிற்பி பிரதமராக இருந்த 
அமைச்சரவையில் சட்டஅமைச்சராக இருந்த 
அம்பேத்கர். பெண்களுக்கு உரிமை வழங்கும்
மசோதா  ஒன்றை அறிமுகப்படுத்தினார். அந்த 
மசோதாவை ஆதிக்கசாதிவெறிபிடித்த சாதி 
இந்துக்கள்.ஒரே அணியில் திரண்டு கடுமையாக
எதிர்த்தனர்.இப்பொது தீ கொளுத்தி ராமதாசு 
தலைமையில் ஆதிக்கசாதிவெறியர்கள் 
அணிதிரண்ட மாதிரி...........

பெண்களின் விடுதலைக்காக இந்த மசோதாவை 
ஆதரிப்பதாக கூறிவந்த போலி சோசலிச சிற்பியும் 
கடைசி நேரத்தில் கைகழுவிவிட்டு துரோகத்தனமாக 
நடந்து கொண்டார். இதனால்..............

பெண்களின் பிரச்சனைகளுக்காக,உரிமைக்களுக்காக,
அவர்களின் விடுதலைக்காக கொண்டுவந்த 
மசோதாவை நிறைவேற்ற முடியாத்தால் அன்றே 
தன் அமைச்சர் பதவியை துறந்தார்.


இன்று அவரால் மேல்நிலை வர்க்கமாக நிலைநிறுத்திக்
கொள்ளும் தலித்துகளும்,நாட்டுப்பற்று,கொள்கைப்பற்று, 
புடலங்காய்பற்று என்று வாய்ப்பந்தல் போடும் எல்லா 
வகையான கூட்டமும் இன்று கொண்ட கொள்கைக்காக 
பதவியைத் துறக்குமா?........ 

2 comments :

  1. அதெல்லாம் ஒரு காலம்.துறப்பதற்காகவா பதவி என்பது இந்த காலம்.எல்லோருக்கும் இனிப்பு விருப்பமாகவே இருக்கிறது.சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கும் கூட.தேர்வாளர்களாகிய நாம் உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்து வரிசையில் காத்திருக்கும் பொறுமையுடன் ஓட்டளிக்கும் வரை இது தொடரத்தான் செய்யும்.

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! சேக்காளி அவர்களே!

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com