திங்கள் 28 2013

காணமல் போன நண்ப(ர்)ன்......................



 

முப்பது வருடத்துக்கு முன்னால் நடந்தது..
அந்த மாநகரில் அதிக கூட்டம் கூடும் விழா எதுவென்றால் அது சித்திரை திருவிழாதான் அந்த விழாவுக்காக தற்காலிமாக அமைக்கப்பட்டுஇருந்த புறக் காவல் நியைத்தில் அறும்பு மீசை முளைத்த சிறுவன் ஒருவன்..........பேலீசிடம் அடிவாங்கியபடி, தன் தரப்பு ஞாயத்தைசொல்லிக் கொண்டு இருந்தான்.

“சார், அந்தப் பொண்ண......நா...தள்ளி விடல சார்........அதா திடீரென்று விழந்திருச்சு சார்..... கீழே விழந்தபொண்ண.....தூக்ககித்தான் விட்டேன் சார்..நா..சொல்றத நம்புங்க....சா..ர்...,

“ கத்தாதடா.,கத்தமா உட்காரு டா வீனா..அடிவாங்கி சாகாத..... உட்காருடா.,ஒரு போலீஸ்.அதட்டலுடன் லத்தியால் அவன் காலில் அடித்தார்.

அவன்.லத்தி அடியை வாங்கிக்கொண்டும், விழும் அடியைதடுத்துக்கொணடும் அமரால் நின்று கொண்டு இருந்தான்.

இன்னொரு போலீஸ். அவன் தோள்பட்டையுடன இணைந்து கைகளை இறுக்கி பிடித்தபடி., உட்காரவைக்கப்பட்டவர்களுடன் வலுக்கட்டாயமாக உட்கார வைக்கப்பட்டான்.

சிலர் தப்பித்து ஓட முடியாதவாறு துண்டால் ரெண்டு கைகளும் பின்புறமாக கட்டப்பட்டும் சிலர் சட்டடையை கழற்றி விடப்பட்டும்.அமர வைக்கப்பட்டு இருந்தனர். சிறுவர்களும் ஓரத்தில் உட்காரவைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் தப்பித்து ஓட முடியாதவாறு அய்ந்தாறு போலீஸ் சுற்றி பாதுகாப்புடன் கண்காணித்தபடி நின்று கொண்டு இருந்தனர்.

போலீஸ் வண்டி வந்தவுடன் ஏற்றி செல்வதற்கு வண்டியை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர்

போலீஸ்காரர்களால். பிடித்து வைக்கப்பட்டவர்களில் தாய் தந்தையர்களும் உறவினர்களும் சிலரை மீட்டுக்கொண்டும் சிலர் மீட்க வழி தெரியாமல் போலீஸ்காரர்களின் தயவையும் அவர்களின் இரக்கத்தையும் எதிர்பார்த்துக்கொண்டு காத்துக்கிடந்தனர்.
  
 சம்பவம். இதுதான்.. சித்தரைத் திருவிழாவில்  குதிரைச்சிலையை ஆற்றில் இறக்கும் நிகழ்ச்சிக்குப்பின். ஆற்றுக்குள்  நடக்கும் நிகழ்ச்சிகளான தசவதாரம் என்று சொல்லப்படுகிற லீலைகள்  அந்த லீலைகளை காண்பதற்க்காக குதிரைச்சிலையை ஆற்றில இறக்கும் நிகழ்ச்சியுடன் லீலைகளையும் கண்டு வணங்குவதற்க்காக கூட்டம் அலைமோததும்,   அந்த

லீலைகள் நிகழ்ச்சியை கண்டுவிட்டு  ஆற்றுக்கு தெற்கே இருக்கும் மாரியம்மன் கோயிலின் தெப்பக்குளத்தை காண்பதற்க்காக நண்பர்கள் இருவரும் கைகோர்த்தபடி ஆற்றில் வரிசையாக சென்று கொண்டு இருப்பவர்களின் பின்னே  இவர்களும் வரிசையாக சென்றனர்.

ஆற்றிலே வந்தத்தண்ணீர் கூடுதலாகவும் தண்ணீரின் இழுவை அதிகமாக இருந்ததாலும் வரிசையாக ஒருவருக்கு பின் ஒருவராக மெதுவாக சென்று கொண்டு இருந்தனர்.

திடீரென்று இவனுக்குப்பின் வந்த கூட்டத்திலிருந்து வரிசையாக வந்த  இளம் பெண்னோருத்தி முன்னெ சென்ற தோழியிடம் சென்று சேர வேண்டும் என்ற ஆவலில் இவனை முந்திச் சென்றாள். சென்றவள் இவனருகே தண்ணீரில் விழுந்துவிட்டாள். இவனுக்கு பின்னே வந்தவர்கள் ஆ....ஆ..........அ....ஊ......ஊ....உ என்று கத்த,  சத்தமிட்ட பதட்டத்தில் எப்படி தூக்கவேண்டும் என்ற முறை தெரியாமல் கட்டிப்பிடித்து தூக்கிவிட்டான்.

“எழுந்த பெண்னோ, தன்னைப் பிடித்திருந்த இவனது கையை தட்டிவிட்டு  நணைந்துவிட்ட தன் ஆடைகளை பார்த்தவாறு அழுதுவிட்டாள்,

இவள் அழுவதையும் இவன் அவள் கையை பற்றியிருப்பதையும் பின்னால்வந்த அவளின் தாய் தந்தை வந்து கொண்டு இருந்த கூட்டம் இவனை நையப்புடைத்து கொண்டு இருக்க.,இதை  கண்டு மறுகரையில் இருந்த போலீஸ்காரர்கள் வர.,அந்தப் பெண் அழுகையை நிறுத்தாமல் அழ......

 “எதுக்கு அடிக்கிறார்கள் என்று இவன் புரியாமல் திணற. வந்த பொலீஸ்கார்ர்களும்  சேர்ந்து அவனை அப்பி இங்கே கொண்டு வந்துவிட்டார்கள்....

 இந்த சம்பவத்தின் உண்மை நிலையைத்தான் ஆரம்பத்தில் லத்தியடி வாங்கி கத்தி சொல்லிக்கொண்டு இருந்தான்.“

உடன் வந்த நண்பனையும் காணவில்லை,தகவலுமில்லாததால்.......

ஒவ்வொரு பத்து நிமிடம் கழித்து வரும், இருக்கும் போலீஸ்காரர்களிடம் தன் உண்மையை நிலையைச்சொல்லிய போதும் எந்த போலீஸ்காரனும் அவன் சொல்வதை கேட்பதாக இல்லை. அவர்கள் வைத்திருந்த லத்தியால்தான் அவனிடம் பேசினார்கள்.

“அடி வாங்கி முனங்கியபடி அமர்ந்திருந்தபோது.,கைகளால் விலங்கிடப்பட்ட ஒருவன் சொன்னான்.

“அடேய்,பேசாம...இருடா. நீ ....நீ .பேசப்பேச அடி..தாண்டா விழும்,ஒருத்தரும் கேட்க மாட்டாங்கடா, ஒன்னய......... அடிக்கிற போது என்னையும் சேத்து அடிக்கிறாங்கடா, கொஞ்சம் அமைதியா.... இறேண்டா...

என்ன செய்வதென்று புரியாம லத்தி விழுந்ததால் வீங்கிப்போன இடங்களை பார்த்துக் கொண்டு இருந்தான்......

இன்னொருவன், நாக்கில் ஊரும் எச்சியை தொட்டு வீங்கிய இடத்தை தடவச் சொன்னதால் கையால் நாக்கு எச்சிலைக் தொட்டு வீங்கிப்போன இடத்தை  தடவிக் கொண்டு இருந்தான்.

வந்த அழகையை அடக்கிக் கொண்டு திருவிழாக்கூட்டத்திலே யாராவது தெரிந்தவர்கள் வரமாட்டார்களா? என்று ஏக்கத்தடன் திருவிழாக்கூட்டத்தை பார்த்துக்கொண்டு இருந்தான்.....

தன்னைப்போல் பிடித்து வைத்திருப்பவர்களின் உறவினர்கள் போலீஸ்காரர்களிடம்  பேசுவதும், ஒருசிலர் அவர்களிடமிருந்து விடுபட்டு செல்வதையும் ஏக்கமும் பரிதாபமும் நிறைந்த பார்வையுடன் கவனித்துக்கொண்டு இருந்தான்.

நேரமும் மாலையை கடந்து இரவை நெருங்கிக் கொண்டு இருந்தது.வயிறு பசித்த போதும் செய்வதறியாது இருந்தான்

திடிரென்று. தன் பெயரைச் சொல்லி நண்பன் அழைத்த குரல் கேட்டு ஆவலுடன் எழுந்து நின்றான். நண்பன்உடன் நண்பனின் மாமாவும் வேறு சிலரும் வந்திருந்தனர்.

உட்கார்ந்திருந்த போலீஸ்காரரிடம் நண்பனின் மாமா எழுந்து நின்ற அவனை சுட்டிக்காட்டிப் பேசினார். போலீஸ்காரர் ஏதோ சொல்ல, மாமாவுடன் வந்த இருவரும் வந்து பேச

போலீஸ்காரர் அவனை அருகில் அழைக்க.,திரும்பவும் அவனை உட்காரச்சொல்ல  தண்ணீரில் விழுந்தப்பெண்ணும் பெண்ணின் தாய் தந்தையரும் போலீசிடம் பேச தன் கண்களை நம்ப முடியாமல் திணறிக்கொண்டு தன் நண்பனைப் பார்த்தான்

லத்தியால் அடி வாங்கிய வலியெல்லாம் மறந்தவனாக  அவன் வெளியே வந்தவுடன்.....  நண்பன் அவனின் தோள்மேல் கையைப்  போட்டு கொண்டு..கேட்டான்.

“ரெம்ப அடிச்சுட்டாய்..ய்ங்களா..டா. என்று ஆதரவாய்கேட்டான் நண்பன்.
 
ஆமா..டா.......எந்த போலீஸ்காரணுமே, நா.......சொன்னதையே கேட்க..மாட்டேன்டாங்கடா.அவிங்க சொல்றத்தான் நானு கேட்கனுமாம்..டா  நா.....ங்..கேட்காததலே.காலயும் கயையும் விலாசித் தள்ளிட்டாங்கிடா,

நண்பர்கள் இருவரும் போலீஸ்காரன்களை “டாபோட்டு பேசியதை இரு போலீஸ்காரன்கள் கவனிப்பதைக் கண்டதும் அமைதியானார்கள்..

நண்பனின் மாமா, ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது சொன்னார்.

“அந்தப்பொண்ணு, ரெம்ப நல்ல பொண்ணுடா, உண்மையைச் சொல்லுச்சுடா அந்தப் பிள்ளையைப்போலவே,தாயும் தகப்பனும் ரெம்ப நல்லவங்கங்கடா.வேற ஒருத்தங்கன்னா வருவாங்கலடா,

ஒன்னய காப்பத்திடமுன்னு “ஒ...நண்பனும் பம்பரமாக சுத்தியிருக்காண்டா, எங்க போனாலும் கவனமாக இருக்கனும்..டா

அப்பேர்ட்ட நண்பனுக்கு நண்பன் அய்ம்பத்து மூன்று வயது வரை உயிருடன் இருக்க. பம்பராக சுத்தின அந்த  நண்பன் மட்டும்  காணாமல் போய்விட்டா(ர்)ன். . .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....