மாமதுரை போற்றுவோம்னு
கொண்டாடிய கூட்டத்தாரே!
மண்ணில் மாமதுரை வாழ
வேண்டுமென்றால் வான்மழை
பொழிய வேண்டும் என்பது
தெரியமால் போகுமோ................
மாமதுரையை போற்றி
ஆடலாம்,பாடலாம், பேசலாம்
தண்ணிரின்றி வறண்டு கிடக்கும்
வைகையில் மாதிரி அனையும்
கட்டி மகிழலாம்...........
குடிநீர் கேட்டு பல இடங்களில்
காலி குடங்களுடன் மாமதுரை
மக்கள் மறியல் செய்யலாம்
மக்கள் மறியல் செய்யலாம்
மறியலில் மாமதுரையின்
அமைதியை கெடுப்பதாக
குண்டர்களின் குண்டாந்தடியின்
வலியையும் பெறலாம்........
மாமதுரையில் பிறந்த சங்கப்
புலவன் ஒருவன் பாடினான்
நீதி வழுவா நீதியரசர்களும்
நேர்மையை நெஞ்சிலே கொண்ட
ஆட்சியாளர்களும்,கற்பில்
சிறந்தவர்கள நிறைந்த மதுரையில்
மாதம்மும்முறை வான்மழை
பொழிந்து செழித்ததாம்.....
அப்பேர்ப்பட்ட மாமதுரையில்
கிரானைட் கொள்ளையர்களும்
கொள்ளையர்களுக்கு ஆதரவா
ஆட்சியாளர்களும், கொள்ளையர்க்கு
எதிரான நீதிக்கு சமாதி கட்டிய
நீதி அரசர்களும்., நமக்கேன்
வம்பு என்று ஒதுங்கி சாதிப்
பெருமை பேசும் வீணர்கள்
நிறைந்த மாமதுரையில் மாதம்
மும்மாரி பொழிய வேண்டாம்
மும்மாதத்துக்கு ஒரு முறையாவது
வான்மழை பொழியுமா? ??
மாமதுரையை போற்றுபவர்களே!!!!!!!................
மாதம் மும்மாரி பொழிகிறதா என்று அந்த கால மன்னர்கள் கேட்டது வரி அதிகமா விதிக்க தானே?
பதிலளிநீக்குவரி போட்டு கஜனாவை நிரப்பத்தான் அந்த அக்கறை............
பதிலளிநீக்கு