பக்கங்கள்

Friday, February 15, 2013

அறியாத வயதில்..........


நான் இடுப்பில்
டவுசர் கட்டிய
காலத்தில்

என்னை அறிந்தவர்கள்
கேட்பார்கள்-உன்
அப்பன் எங்கே?
என்று.........

என் அப்பனைப்பற்றி
தப்பாமல் சொல்வேன்

ஆகாயத்தில்
ஆகாயவிமானம்
அதில்லே என்
அப்பன் போறார்
என்று......

வினா தொடுத்தவரும்
சுற்றி நிற்பவரும்
சத்தம் கேட்க
சிரித்தனர்....

அந்தச் சிரிப்பு
கேலிச்சிரிப்பென்று
அப்போது தெரியவில்லை

அறும்பு மீசை
முளைப்பதற்கு
முன் தெரிந்தது

என் அப்பன்
நான் பிறந்து
மூச்சுவிட்ட
சில நாளில்
தன் மூச்சை
நிறுத்தினார்
என்று........

இப்போது
பார்க்கிறேன்
ஆகாயத்தை
விமானம்
பறந்து
செல்கிறது

என் அப்பன்
அதில் செல்ல
வில்லையென்று
யாரிடம்
சொல்வது..

கேள்வி கேட்டவரும்
இல்லை.
பதில் கேட்டு
சிரிப்பவரும்
இல்லை...

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com