பக்கங்கள்

Monday, February 25, 2013

இல்லாத ஊருக்கு வழி சொல்லும். இடது சொரிக்கட்சி.........


இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் பிரச்சினையையும் தமிழகத்தில் நடக்கவிருக்கும் ஆசிய தடகள விளையாட்டுப்
போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை வீரர்களின் 
வருகையையும் ஒன்றாக இணைத்து பார்க்கக்கூடாது 
என்று புர்ச்சி தலவி ஆளும் தமிழக அரசைக் தமிழகத்து 
இடது சொரிக்கடசி யின் செயலர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்து இடது சொரிக்கட்சியின் செயலரின் கூற்றுப்படி.இந்தியாவில்1991ல் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 
புதிய பொருளாதாரக் கொள்கையால் ஏழை எளிய மக்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்..வேலை வாய்ப்பின் வளர்ச்சி 
விகிதம் குறைந்துகொண்டே செல்கிறது. வறுமை அதிகரித்து 
கொண்டே வருகிறது. நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு 
உற்ப்பத்தி குறைந்து வண்ணம் உள்ளது. இதற்கு காரணம் தனியார்மயம்.தாராளமயம்,உலகமயம், புதிய பொருளாதாரக் கொள்கைகள்தான் காரணம் . சரி என்றாலும்
 
வறுமை பெருகிபெருகி வரும் நாட்டிற்கு ஆசிய தடகள 
விளையாட்டு போட்டி ஒரு கேடா? என்று  கேள்வி கேட்க 
தமிழக இடதுசொரிக்கட்சி முதுகெலும்பு இல்லை.. அப்படியான 
திட்டமும் கொள்கையுமில்லை. அரசியல் பார்வையும் இல்லை அதனால்தான் மனித உரிமையை மீறி படுபாதக கொலைகள் 
செய்த இலங்கை நாட்டு  தடகள  விளையாட்டு வீரர்கள் 
பங்கு கொள்ளும் ஆசிய தடகள விளையாட்டை தடை செய்வதாக  
புர்ச்சி தலவியின் உதாரைக்கூட புரிந்து கொள்ளமுடியாமல் 
தடை செய்யாதீர்கள் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

புதிய பொருளாதாரக் கொள்கையின் பாதிப்பை விளக்கியும்,
மாற்றுப் பாதைக்கான வழியை வலியுறுத்தியும். தேசிய 
அளவில் பிரச்சார பயணம் மேற்க்கொள்ளப்பட உள்ளதாகவும் 
இடது சொரிக்கட்சியின் செயலர் கூறுகிறார்.

புதிய பொருளாதாரப் பாதிப்பகளை விளக்கி தேசிய அளவில் 
பிரச்சார பயணம் மேற்க்கொண்டாலும் பாதிப்பகளை களைய 
இவர்கள் சொல்லும் மாற்றுப்பாதை என்ன?

இவர்களின் மாற்றப்பாதை என்னவென்றால், இடது சொரிக்கட்சிக்கு
ஓட்டு போட்டு  தேர்ந்தெடுத்தால் இவர்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவுடன் புதிய பொருளாதார பாதிப்புகளை 
போக்கிவிடுவார்களாம்.

கூரை ஏறி கோழியை பிடிக்க முடியாதவன், வானம் ஏறி 
வையகத்தை புடிப்பானாம் – இந்த சொல்வடையே 
இவர்களுக்குதான் படைக்கப்பட்டது இந்த இடது சொரிக்கடசி 
ஆண்ட இரு மாநிலத்திலும் புதிய பொருளாதாரத்தை எதிர்க்க துப்பில்லாமல் அமுல்படுத்தி அதற்கு வியாக்கினமும் 
சொன்னவர்கள் இவர்கள்.இவர்களின் மூதாயைர்களின் 
கட்சியான காங்கிரஸ்.பாரதிய ஜனதா. கட்சிகளை மாதிரியே 
மாநிலத்துக்கு ஒரு கொள்கையும் கோட்பாடும் கொண்டவர்கள். 
இவர்கள் பிரச்சார பயணம் மேற்க்கொண்டு புதிய பொருளாதார பாதிப்புகளை போக்கப் போகிறார்களாம்


உள்ளங்கையில் நெய் என்று எழுதி. அதை நாக்கால் நக்கி 
பார்த்து அது இனித்தால் இடது சொரிக்கட்சி சொல்லும் 
மாற்றுப்பாதையை நம்பலாம்.

இந்த இடது சொரிக்கட்சி ஆட்சிக்கட்டிலில் அமர ஒரு வழி 
இருக்கு,அந்த வழியை விட்டால் வேறு எந்த வழியிலும் 
ஆட்சிக்கட்டில் அமர வாய்ப்பே இல்லை. அந்த ஒரே வழி  
கொள்கைக்கும் நடைமுறைக்கும் ஒத்து இல்லாத 
மாமேதையின் பெயரையும் அவர்கள் சொன்ன 
கோட்பாட்டிலுள்ள பெயரையும் நீக்கி விட்டு ,நவீன 
அறிவியலின் வாஸ்து சாஸ்திரப்படி வேறு பெயரை 
கட்சிக்கு சூட்டிக்கொண்டால் .. அடுத்த தேர்தலில் 
ஆட்சிக்கட்டிலில் அமரலாம்.

பிறகு தங்களது ஆட்சியில் தேனாறும் பாலாறும் ஓடுகிறதென்று, மே.வங்கத்தைப்பார், கேரளாவைப்பார் என்று சொல்லத்
தேவையில்லாமல் இந்தியாவைப்பார் என்று ஒலக நாடுகளிடம் 
மார்தட்டி சொல்லலாம்.


No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com