பக்கங்கள்

Sunday, February 24, 2013

ஆடுகளைப்பற்றி கவலைப்படும் ஓநாய்கள்........தமிழ் நாட்டில் சாதி வெறி சங்கங்களை இணைத்து அதன்மூலம் சாதித்தீயை வளர்த்து அதன்மூலமாகவாவது ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கு ஒரு  பிளான்போட்டு காயை நகர்த்தி வருபவர் கொய்யா என்ற கிழம்.

இந்தக் கொய்யா . தமிழ்நாட்டிலுள்ள  அடக்கப்பட்டவர்களை அடக்கி வைக்க வேண்டும் என்றும், ஒதுக்கப்பட்டவர்களை ஒதுக்கியே வைக்க வேண்டும் என்றும் மூச்சுக்கு முன்னூறுதடவை பேசி வருபவர்.

இவரு, இலங்கையின் கொலைகார அரசால் அடக்கப்பட்ட.,ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்தை கொன்றதற்க்காக “போர் குற்ற விசாரனை நடத்தக்கோரிஅதுவும் இந்திய அரசே நடத்த வேண்டி 26மதேதி போர் ஆட்டம் நடத்தப்போறாராம்.

கொய்யா நட்த்தும் போராட்டம் “ஆடு நனைகிறதே என்று,ஓநாய் கவலைப்படுகிற மாதிரி இருக்கிறது.

கொலைகாரனிடமே கொலையை விசாரிக்க வேண்டி 
போராட்டமாம்.ஒருபக்கம் சாதிவெறி வளர்ப்பு  பிற்போக்கு
போராட்டம், மறுபக்கம்  அடக்கப்பட்ட இனத்திற்க்காக  
முற்போக்கு போரட்டம்.இதைத்தான் பச்சோந்தி பேராட்டம் 
என்று சொல்வார்கள்.இப்படி பச்சோந்தி போராட்டம் 
நடத்துபவர்களை பச்சோந்தி என்று அழைக்காமல் வேறு 
எப்படி அழைப்பார்கள்..............

3 comments :

 1. // //“போர் குற்ற விசாரனை நடத்தக்கோரி” அதுவும் இந்திய அரசே நடத்த வேண்டி// //

  "தோழர் வலிப்போக்கன்" எனும் முகமற்ற தலைமறைவு வாசியே - செய்தி அறிக்கைகளை முழுமையாக படித்து புரிந்துகொள்ள முயலுங்கள்.

  இந்தியா விசாரணை நடத்த வேண்டி அல்ல.

  ஐநா மனித உரிமைகள் அவையில் பன்னாட்டு விசாரண கோரி இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று கோரிதான் போராட்டம் நடத்தப்படுகிறது.

  http://arulgreen.blogspot.com/2013/02/SriLanka-NoFireZone-KillingFields.html

  ReplyDelete
 2. பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

  இனப்படுகொலை : ராஜபக்சேவை கூண்டிலேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம்

  மனிதகுலம் இதுவரை கண்டிராத வகையில் மிகக் கொடூரமான இனப்படுகொலைகளை இலங்கை அரசு நடத்தியிருப்பதற்கான ஆதாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவை அனைத்தும் தமிழர்களின் இதயங்களை பிழியும் வகையில் உள்ளன.

  விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகனான பாலச்சந்திரன் இலங்கைப் படையினரால் பதுங்கு குழியில் பிடித்து வைக்கப்பட்டு, சிறிதும் இரக்கமில்லாமல், காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு ஆதாரமான புகைப்படங்களை சேனல்-4 தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்டது. காண்போர் அனைவரின் கண்களில் இருந்தும் கண்ணீர் அருவியை பெருக்கெடுக்கவைத்த அந்த புகைப்படங்கள் மட்டுமே , இராஜபக்சே மற்றும் அவனது கூட்டாளிகள் மீதான போர்க்குற்றச்சாற்றுகளை நிரூபிப்பதற்கு போதுமானவை ஆகும்.

  விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களும், போருக்கு பின்னர் சிங்களப்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட போராளிகளும் எவ்வளவு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்;போருக்கு முன்பும், போருக்கு பின்பும் தமிழ் சகோதரிகள் எப்படியெல்லாம் இரக்கமில்லாமல் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதற்கும் பல்வேறு ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இலங்கை அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை என்பதுடன், பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான புகைப்படங்களே போலியானவை என்றும், அவை வெட்டி ஒட்டப்பட்டவை என்றும் தில்லியில் அமர்ந்து கொண்டு இலங்கை தூதர் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார். மிகக் கொடுமையான இந்த மனித உரிமை மீறலை கண்டிக்கவேண்டிய இந்திய அரசோ, அந்தப் புகைப்படங்களின் உண்மைத்தன்மை பற்றி எதுவும் தெரியவில்லை என்று கூறிவிட்டு மவுனம் காக்கிறது. இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் அந்நாட்டை காப்பாற்றுவதையே கடமையாக கொண்டிருக்கும் இந்தியா, அதன் போக்கை இன்னும் மாற்றிக்கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. இத்தகைய சூழலில், ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படும்போது இந்திய அரசு எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கும் என்பதை கணிக்க முடியவில்லை.

  கொடுங்குற்றம் செய்த இராஜபக்சே சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துவிடாமல் தடுக்கும் பொறுப்பு தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு உள்ளது. எனவே, இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்காக இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் - அந்நாட்டு அதிபர் இராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றி விசாரித்து தண்டிக்க வேண்டும் - இதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசே மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு சென்னையிலும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர்முழக்க போராட்டம் நடத்தப்படவுள்ளது. சென்னையில் நடைபெறும் போராட்டத்திற்கு நான் தலைமையேற்கிறேன். மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு கட்சியின்மாநில நிர்வாகிகள் தலைமையேற்பார்கள். இப்போராட்டங்களில் பா.ம.க.வினரும், தமிழ் உணர்வாளர்களும் பெருமளவில் பங்கேற்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
 3. - ஏற்கனவே ஒங்க நிறுவனரு, தலித் பசங்களெல்லாம் கூலீங் கிளாசும் ஜீன்ஸ்பேன்ட்டும் போட்டு வன்னிய பொன்னுகள மயக்குறாங்குராங்கேன்னு ஊர் முழுக்க டமாரம் அடிச்சாரு.

  தலைவன் எவ்வழியோ,அவ் வழியே நீங்களும்-தோழர் வலிப்"போக்கன்" எனும் முகமற்ற தலைமறைவு வாசியே - என்று டமாரம் அடிங்க.........

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com