செவ்வாய் 26 2013

பத்து ரூபாயில் முடிந்த திருமணம்........!!!


பிரபலமான தலைவராக இருந்தும் தமிழ்நாட்டின் எம்.எல்.ஏவாக இருந்தபோதிலும் வாடகை குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

இவருடைய திருமணம் .சென்னை யில் கட்சி ஊழியர்கள்
தங்கியிருந்த சிறிய விடுதியில் இரண்டு மாலைகளை ஒருவர்
கழுத்தில் ஒருவர் அணிந்தவுடன் திருமணம் முடிந்தது.

திருமண விருந்தாக பத்து லட்டுகளை வாங்கி துாளாக்கி
திருமணத்தில் கலந்து கொண்ட 30 பேர்களுக்கு பங்கிட்டு
கொடுத்து கூடவே தேநீரும் வழங்கப்பட்டது.

 வாழ்த்துரைகளோ, நன்றியுரைகளோ, எதுவும் இல்லாது
நான்கைந்து நிமிடத்தில் பத்து ரூபாய் செலவில் முடிந்தது.

இவரின் கவிதையில் ஒன்று.................

நல்லாரை உழைப்போரை பறையென்றார்
நயவஞ்சக முடையோரை மேல் ஜாதியென்றார்
பொல்லாத கொடியவரை மன்னரென்றார்
பொய்யுரைத்த கொடியவரை குறுக்களரென்றார்
                                         --ப.ஜீவானந்தம்

4 கருத்துகள்:

  1. 39 ஆண்டுகளுக்கு முன் மாலையோ, புது ஆடைகளோகூட இல்லாமல் வெறும் 20 ரூபாய் செலவில் எங்கள் திருமணம் பதிவாளர் அலுவலகத்தில் ரெண்டு கையெழுத்தோடு முடிஞ்சது.

    இந்த இருபதில் எங்கள் இருவரின் கல்யாண சாப்பாடு ஆறு ரூபாயும் சேர்த்தி!

    அப்பெல்லாம் லஞ்சமோ அன்பளிப்போ கேட்கும் அலுவலகர்கள் இல்லை!!!!!

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துரைக்கும், செய்திகளுக்கும்,துளசி கோபால் அவர்களுக்கும் மற்றும் Prem s அவர்களுக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. இந்த இருபதில் எங்கள் இருவரின் கல்யாண சாப்பாடு ஆறு ரூபாயும் சேர்த்தி!

    அப்பெல்லாம் லஞ்சமோ அன்பளிப்போ கேட்கும் அலுவலகர்கள் இல்லை!!!!!

    well said.eager to know about you.

    Nalina

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....