சனி 30 2013

சாதி வெறிப்பிடித்த பெண்கள் !!!


ஆதிக்கச்சாதி வெறிப்பிடித்த வீரர்கள் தனியார்மயம்.தாராளமயம்,உலகமயமங்களின் 
வளர்ச்சிக்கு ஏற்றாற் போலவே தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு பற்பல வழிமுறைகளை 
கையாண்டு வருகிறார்கள்.

அவற்றில் ஒன்று தங்கள் சாதிப்பெண்களை ஆணாதிக்கத்தால் அடக்கி ஒடுக்குவதை மறைத்து தங்கள்  சாதிப்பெண்களுக்கு சாதிவெறியேற்றி பெருங்கூட்டமாக கூடச்செய்வதும் அவர்களை முன்னிலைப்படுத்தி தங்கள் காரியங்களை சாதித்துக்கொள்வதுமாக செயல்படுகிறார்கள்.

சாதி வெறியேற்றி கூட்டமாக திரட்டிய பெண்களை  கொண்டு, ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆண்கள் பெண்களை கீழ்த்தரமாக திட்டி வசைபாடுவதற்கும் ஒடுக்கப்பட்டவர்கள் வாழும் தெருவுக்குள் வீட்டிற்க்குள் புகுந்து அடிப்பதற்கும் தாக்குவதற்கும் சேதங்களை உண்டாக்குவதற்கும்  புதுப்புது வழிமுறைகளை பயன்படுத்து கின்றனர்.

ஆதிக்க சாதிவெறிக்கூட்டத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் ஆதிக்கச்சாதிப் பெண்களும்.சாதிவெறி ஆண்கள்  ஆணாதிக்கத்தால் தங்களை அடக்கி ஒடுக்கி வருவதை மறந்து சாதிவெறி தலைக்கேறி தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் களத்தில் குதித்து விடுகின்றனர்.

இப்படித்தான்,தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி நகரில் சங்கரலிங்கபுரத்தில் அடையாளம் தெரியாத சிலரால் சாதிவெறி குலதெய்வத்தின் சிலை உடைக்கப்பட்டது.

அதிகார வெறி கொண்ட போலீஸ் படையும், ஆதிக்க சாதிவெறிகொண்ட படையும் கைகோர்த்து குத்தாட்டம் போட்டது.

ஒரு வழியாக குத்தாட்டம் முடிந்து பிரச்சினை ஓய்ந்த இருந்த நேரத்தில் ஆதிக்க சாதிவெறிப்பிடித்த பெண்கள் கையில் கம்பு,செருப்பு,விளக்குமாறு சகிதமாக சென்று ஒடுக்கப்பட்ட சாதித் தெருவுக்குள் சென்று தாக்கத் தொடங்கினர். (பார்க்க..வினவு.- கோவில்பட்டி சிலை உடைப்பு.)

ஆணாதிக்கத்தால் செத்து மடியும் ஆதிக்கச்சாதி பெண்கள் படித்திருந்தாலும் படிக்காதிருந்தாலும் நிலவும் சமூக அமைப்பின் கொடுமையால், ஆதிக்கச் சாதிவெறிப்பிடித்த ஆண்களின் பகடைக்காய்களாக மாறி சாதிவெறிப்பிடித்த பெண்களாக வலம் வருகிறார்கள்.



2 கருத்துகள்:

  1. சாதிவெறிக்குஆண் பெண் பேதமில்லை

    பதிலளிநீக்கு
  2. சாதி என்ற வெறி பெண்கள் மனது வைத்தால் சில வருடங்களில் ஓடி விடும்.
    உண்ண உணவில்லா விட்டாலும் , மேற்குடியில் பிறந்தோம் என்ற பெருமிதம் வயிற்றுக்கு தெரியாது என்பதை பெண்கள் எளிதில் உணர்வார்கள் . ஆணாதிக்கத்தால் கட்டுண்டு உள்ளனர். அவர்கள் நினத்தால் இது உறுதியாக தமிழகத்தில் நடக்கும்.
    இருந்தாலும் பார்பான் விட வேண்டுமே.? இன்னும் என்ன என்ன சூழ்ச்சி பண்ணுவானோ.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....