திங்கள் 01 2013

போராட்டத்தை படமெடுத்து காசு பார்க்கும் முன்னால் காம்ரேட்டு



1994ல் என் பொண்டாட்டி தாலியை வித்து அமைதிப்படையைஎடுத்ததாக முன்னால் காம்ரேட்டும் சாதி வெறியை மறைத்து கிராமத்தின் அழகை கொட்டகையில் காட்டிய இமயத்தின் சீடர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அது உண்மையோ,பொய்யோ நமக்கு தெரிந்து எதுவும் ஆகப் போவதில்லை. ஆனால் 2013ல் அமைதிப்படையின் இரண்டாம் பாகமான நாகராஜன் சோழன் எம்.ஏ.,எம்,எல்,ஏ., படமெடுக்கும் கதைப்பற்றி ....

மழைவாழ் மக்களின் போராட்டத்தை படமெடுத்து வித்து காசக்கப் புறப்பட்டுள்ளார். 

ஏற்கனவே,பரதேசி பாலா “தேயிலைத தோட்டத்தின் வலிகளைபடமெடுத்து காசும் புகழும் பெற்றுவிட்டார். 

எந்தச் சினிமாக்காரனும் உள்ளதை உள்ளவாறு படமெடுத்தாக வரலாறு கிடையாது. அப்படியே ஒரு சில படங்கள் வந்ததாக  சொன்னாலும் அன்று நடந்த கொடுமைக்கும் இன்று நடக்கும் அநியாயத்துக்கும் என்னடா வழி என்று ஒரு பயலும் சொல்றது கிடையாது.

“ரோஜா,வனயுத்தம், இப்படிபட்ட பல வகையான  பல படங்களில் உண்மைச் சம்பவத்தை மறைத்தும் வியாபார உத்தியான “செண்டிமெண்டை”  புகுத்தியும் படமெடுத்து  இதுதான் உண்மைச்சம்பவம்  ரசிகனை கேனையாக்கி இருக்கிற சிந்தனையும் மழங்கடிக்கும் வேலையை அணைத்து சினிமாக்காரனும் செய்து வரும் வேலையை  முன்னால் காம்ரேட்டும் செய்து வருகிறார்.

அந்த வகையில் முன்னால் காம்ரெட்டுக்கு 50வது படமாகவும்,புருட்டு தமிழனுக்கு 200வது படமாகவும் இருந்தாலும் இதனால் போராடும் மலைவாழ் மக்களுக்கு பெருமையையோ, அவர்கள் போராடுவதற்கு புதுத் தெம்மையோ தரப்போவதில்லை.




1 கருத்து:

  1. வேணும்னா நீ போயி ஒரு படம் பிடி. நீ 100% சதம் அக்மார்க் காம்ரேட் தானே.

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...