புதன் 10 2013

ஆச்சரியம்!அதிசியம்!! ஆனால் அப்படி எதுவும் நடக்காது!!

போலீசு
வீடு புகுந்து தாக்க முற்படும் போலீசு



பேப்பரை படிக்கும்போது, சினிமா படத்தில் கதாநாயகன் வில்லன் போலீசை அடித்து துவம்சம் பண்ணி கொடுமையை எதிர்ப்பது மாதிரி ஆச்சரியமாக இருந்தது. ஆனா, செய்தியை படித்து முடித்த பிறகு அதிசியமாக இருந்தது. இந்தியாவில் அப்படி எதுவும் நடக்காது. நடக்கவும் நடக்காது. அப்படி எதுவும் நடக்கவும் விட மாட்டார்கள் அங்கீகாரம் பெற்ற கிரிமினல்கள்.

இந்தியாவில் முதன் முதலாக என் கவுன்டர்  நடத்திய போலீசார்க்கு மரணதன்டனை.யாம். உள்ளாங்கையில் சீனி என்று எழுதி வைத்துக் கொண்டு நாக்கால் நக்கிப் பார்த்து, எழுதியது ஒருவேளை இனித்தால்  என்கவுன்டர் நடத்திய போலீசாருக்கு முதன்முதலாக இந்தியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்படலாம் என்று நம்பலாம்.
இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் என்கவுன்டர் நடத்தும் போலீஸ் அதிகாரிகள் யாரும் நீதிமன்ற சட்டங்களை  சாதாரண போலீசுலிருந்து உயர் போலீசு அதிகாரிகள் வரைக்கும் யாரும் மதித்து நடப்பதே இல்லை.  சட்டத்தையே மதிக்காத இவர்கள்தான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டு கிறார்களாம்.

தமிழ்நாட்டில்  நீதி மன்ற சட்டத்தை மதிக்காமல் என்கவுன்டர் செய்யும் போலீஸ்காரர்களுக்கு வெகுமதியும் பதவி உயர்வும்  என்பது எழுதப்படாத ஒப்பந்தமாகவும் சட்டமாகவும் இருந்து வருகிறது. இதை நீதிமன்ற அரசர்களும்,நீதிமான்களும்  தட்டிக் கேட்பதுமில்லை.கண்டு கொள்வதுமில்லை.

இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் என்கவுன்டர் கில்லாடி இன்ஸ்பெக்டர் ஆர்.பி.சரோஷ் என்பவர். தன் மேலதிகாரியான துணை கண்காணிப்பாளரான (டிஎஸ்பி) கே.பி சிங்கை சக போலீசாருடன் கூட்டனி வைத்து கொண்டு போட்டு தள்ளியிருக்கார்கள். இந்த  என் கவுண்டர் கில்லாடிக்கு  உறுதுணையாகவும் இருந்த போலீஸ்காரர்களும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு என்கவுன்டர் நடக்கும் சம்பவத்தின் போது சொல்லப்படும் கதை.திரைக்கதை, வசனங்கள் சினிமாவையே தூக்கி சாப்பிட்டுவிடும் அளவுக்கு ரெம்ப திரில்லாக இருக்கும், இந்தக் திரில் கதையை  படிக்க டீக்கடையில் அன்று  ஒரே கூட்டமாக வேறு இருக்கும்

போலீஸ் துறையில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரிக்கே இந்த நிலை என்றால் இவர்களை எதிர்த்து நிற்கும் நக்சல்பாரி புரட்சியாளர்களுக்கும்  ஜனநாயக வாதிகளுக்கும் மனித உரிமை போராளிகளுக்கும் அநியாயத்தை எதிர்ப்பவர்களுக்கும் சாதாரான ஜனங்களுக்கும்  என்ன கதி ஏற்ப்படும்.  என்பது அனுபவப்பட்டவர்களுக்கு அதிகம் தெரியும்.

இதனால்தால்தான் போலீஸ் துறையில் நல்லவர்கள் இருக்க முடியாது அப்படியே இருந்தாலும் அவர்கள் செய்யும் நல்ல காரியங்கள், போலீஸ் துறையை புகழ்பாட பயன்படுமேயன்றி அவர்க்கு மட்டும்  தனிப்பட்ட புகழைத்தராது. அந்த நல்லவர்கள் பெரும்பாண்மையாக உள்ள தீயவர்களால் ஓரங்கட்டப்படுவார்கள். மீறினால் கில்லாடிகளால் போட்டுத்தள்ளப்படுவார்கள்.

இதற்க்கு ஒரு பதம்தான், உத்திர பிரதேச மாநிலம் கோண்ட மாவட்த்தில் போலீஸ் டிஎஸ்பி என்கவுன்டர் செய்யப்பட்ட சம்பவம். சட்டத்தின் நீதியை நிலை நாட்டும் நீதி மன்றமோ, அந்த வழக்கின் தீர்ப்பை 31 ஆண்டுகள் கழித்து வழங்கியிறுக்கிறது. இந்திய நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகளின் வேகமும் தீர்ப்பும் ஆமை வேகத்தைவிட மிகவும் மோசமாக இருக்கிறது.

சட்டத்தின் முன் அனைவரும் சம்முன்னு பேப்பரிலும் சட்ட புத்தகத்திலும்  பேசும் ஊத்த வாயிலும் இருக்கிறதேயொழிய செயல்களிலும் நடைமுறையிலும் எள்ளவுக்குகூட இல்லை.

சட்டத்தை மதிக்காத போலீசின் அராஜகம், கிரிமினல் வன்முறை அதிகாரமும் வரைமுறையின்றி இருப்பதும் அது தனி வகை சாதியாக இருப்பதினால்தான் தமிழ்நாட்டிலுள்ள ம.க.இ.க. பு.மா.இ.மு போன்ற புரட்சிகர அமைப்புகள், போலீசு அமைப்பை கலைக்க பேராடுவோம் என்று அறைகூவல் விடுத்து இருக்கிறது. (பார்க்க வினவு. போலீசு அமைப்பை கலைக்க போராடுவோம், புதிய ஜனநாயகம் ஆகஸ்டு 2012) இத்தகைய நக்சல்பாரி அமைப்புகள். ஜனநாயகஅமைப்புகள், மனித உரிமை அமைப்புகள். வளர்ந்து பலமாக இருக்கும்போதுதான். போலீசின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, அது செய்யும் அக்கிரமங்கள் அடாவடிகள் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு  தண்டிக்கப்படும்

என்கவுன்டர் செய்த போலீசுக்கு 31 ஆண்டுகள் கழித்து வந்துள்ள தீர்ப்பானது போலீசின் மீதான வெறுப்புக்கு கொடுக்கப்படும் குச்சி மிட்டாய் அவ்வளவே!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....