செவ்வாய் 16 2013

பன்றிகளின் கூச்சல் கூக்குரலினால் சலனமற்றுப்போன மரங்கள்..... உருவகக் கதை..



மனிதர்களை தவிர்த்து மற்ற எல்லா விதமான விஷஜந்துகள் நிறைந்த காடு அது. அந்தக் காட்டிலே. சிறிய உருவமான கொசுவிலிருந்து பெரிய உருவமான யானை வரை அதிகாரம் செய்வதில் பஞ்சமே இருந்ததில்லை.

தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அந்தக் காட்டில் ஒரே கூச்சலும் குழப்பமுமாய் இருந்தது. அந்த காடு தோன்றியதிலிருந்து அமைதியாக இருந்ததாக வரலாறே கிடையாது.

அப்பேர்பட்ட பெருமையுடைத்த கூச்சலும் கூக்குரலும் குழப்பமும் உள்ள அந்தக் காட்டில் வாழும் பன்றிகூட்டத்திலுள்ள ஒரு பன்னிக்கு கல்யாண ஆசை ஊற்றேடுக்க.. அந்தப் பன்னிக்கு ஏற்ற ஜோடி பார்க்கப்பட்டது.

பன்னியின் கல்யாண நாளைப் பற்றி கூச்சலிட்ட பன்னிகள்,தீடிரென்று வேறு ஒரு பிரச்சனையில் கூச்சலிட்டன.

அந்தக் கூச்சலுக்கு காரணகர்த்தாவான பன்னியின் கூட்டாளி குள்ள நரி ஒனறு.  கல்யாணத்துக்கு முந்தி பன்னியின் ஜோடி முகத்தை ஒருவாட்டி பார்த்த பிறகுதான். நான் மாப்பிள்ளை பன்னிக்குதோழனாக இருப்பேன்.னு சொல்லிச்சு.......

உடனே, பன்னியின் குடும்ப தலைவராக இருக்கும் இன்னொரு பன்னி கூக்குரலும்,கூச்சலுமாய் இருந்த நேரத்திலும் புதிய ஜோடி பன்னியை காட்டும் முடிவை காட்டிலுள்ள ஆட்சி மன்ற குழு முடிவு செய்யும் என்று அறிவித்தது.

பன்றியின் கூட்டாளி குள்ளநரியும்,மற்றும் காட்டிலுள்ள மற்ற விஷஜந்துகளும் தனித்தனியாக கூட்டம் அமைத்து கூச்சலும் கூக்குரலும் குழப்பமாய் ஓலமிட்டன. காடும்,காட்டிலுள்ள மரங்களும் இந்த பன்னிமற்றும் விஷஜந்துகளின் கூச்சல் குழப்பங்களை கண்டு அசராமல் எனக்கென்ன என்று சலனமற்று இருந்தன.

நகைச்சுவை,அரசியல்,சமூகம்,அனுபவம்,சிறுகதை,பொது,செய்திகள்,உருவகக்கதை,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...