பக்கங்கள்

Wednesday, April 17, 2013

மரியாதை தெரியாத புண்ணாக்குக்கு முதல் மரியாதையாம்...!!!


என் இனிய தமிழ் வலைத்தள மக்களே!!
கிராமத்தின் தெருக்களையே சுத்தி சுத்தி வந்த இந்த பாரதிராஜா,சென்னை பட்டணத்து தெருக்களையும் பலமுறை சுத்தி சுத்தி வந்ததினால் இயக்குநரான இந்த பாரதிராஜா,கிராமத்தின் நிகழ்வுகளை ஒரு பக்க சார்பாக படம்பிடித்து தமிழ்நாட்டு தியேட்டர்களில் ஓடவிட்டு காசு பார்த்த இந்த பாரதிராஜா, காலவேகத்தில் சொந்தமாக படம்பிடித்தும் போணியாகமல் ஓய்வெடுத்த இந்த பாரதிராஜா,

 திடீரென்று கஞைரின் சின்னத்திரையில் முகம்பதிக்க எத்தணித்து காணாமல் போன இந்த பாரதிராஜா ..

நீண்ட இடைவெளிக்குப்பின் கைக்காசைப்போட்டு“ அன்னக்கொடியும் மின்னல் இடையும்என்ற படத்தை எடுத்துஇயக்கிய இந்த பாரதிராஜா,“அன்னக்கொடியும் மின்னல்இடையும்படத்தின் பாடல் இசை வெளியீட்டு விழாவை படம்பிடித்து,அதை விஜய் டாக்ஸின் சின்னத்திரையில் “ மரியாதை தந்த இமயத்துக்கு முதல் மரியாதைஎன்று வெளியிட்டு காசு பார்த்த  இந்த பாரதிராஜா,

“அன்னக்கொடியும் மின்னல் இடையும்படத்தில் நடித்த இளஞ்சிட்டு நடிகையை அவள் நன்றாக நடித்திருக்கிறாள் என்று விளித்தும்( இந்த நடிகையின் அம்மாவை இவர்தான் முதன்முதலாக தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தினராம்)

இசையமைத்த இளம் இசையமைப்பாளரை “அவன் நன்றாக இசையமைத்துள்ளான்என்றும் விளித்தும்,அவள்,அவன் என்று மரியாதைக்குறைவாக பேட்டி அளித்த இந்த மரியாதை தெரியாத புண்ணாக்குக்கா முதல் மரியாதை!!!!!!!!.

மதுரையில் நடந்தாக கூறப்படும் திருவிளையாடல் பட புராண புரட்டில்கூட,

“ இந்தப் புலவன் கொண்டுவந்த பாட்டில் குற்றம் சொன்னவன் எவன் அவன்? என்று சிவன் கேட்க..,

சிவனின் பக்தரான நக்கீரன்,“ அவன் இவன், என்று ஏக வசனம் வேண்டாம். அவை அடக்கத்துடன் கேட்டால், பதில் சொல்லப்படும்“ என்பார்.

கோபத்துடன் வந்த சிவனுக்கே ,பக்தனால் அந்த எதிர்ப்பு .....இருந்தது.

அப்பேர்பட்ட மாமதுரையில் இசை வெளியீட்டு விழாவில், தனக்கு கீழ் உள்ளவர்களிடம் மரியாதைக்காட்டி பேசத்தெரியாத இந்த இமயத்துக்கா முதல் மரியாதை.???

வயதாகி கிழடு தட்டிவிட்டதினால் ,அவள்,இவன் என்று பேசி விட்டாரென்று ஒதுக்கி தள்ளிவிடமுடியுமா,?ஃ? இயக்குநர் இமயமாச்சே...!!!!

இந்த இமய புண்ணாக்குக்கு அவரது ஒடம்பில் ஓடுவது, மண்ணோடு கலந்த ஆதிக்கச்சாதிவெறி இரத்தம். அந்த ஆதிக்க சாதிவெறியின் இரத்த்ததின் வடிவம்தான். தனக்கு கீழ் உள்ளவர்களை, “அவள்,அவன் என்று ஏக வசனத்தில் கூறுவது. புரட்டிப் பாருங்கள் ஒருமுறை, ஆதிக்கசாதிவெறியின் வரலாற்றை

3 comments :

  1. சபை நாகரீகம், பொது நாகரீகம் என்பது வேண்டும். பாரதி ராஜாவிற்கு அது பற்றாக்குறைதான்.

    ReplyDelete
  2. வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி! திரு sree krishnan அவர்களே!

    ReplyDelete
  3. kaval nilayathil kai naddu vaitha pothu vankiya varthaikalin velippadu than ithu

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com