பக்கங்கள்

Saturday, April 20, 2013

கொள்ளைக்காரர்களை பயமுறுத்த பூச்சாணடி வேஷம் காட்டும் வருமான வரித்துறைஇந்திய நாட்டில் பல்வேறு துறைகளில் உள்ளவர்கள் பலர் வருமானவரி கட்டாமல் இருப்பதும்,அவர்களை வரி கட்டச்சொல்லி நோட்டீஸ் அனுப்புவதும்,  அந்த நோட்டீஸை கொள்ளைக்காரர்கள் குண்டி துடைக்க பயன்படுத்துவதும் ஆண்டு தோறும் செய்துவரும் வேலைகளில் வருமானவரித்துறைக்கு ஒரு வேலையாக இருந்து வந்துள்ளது. இந்த வேலையில்  சலிப்படைந்துள்ள வருமானவரித்துறை.

பல்வேறு துறைகளில் உள்ள கொள்ளையர்கள் வருமானவரி கட்டாமல் இருப்பதும், கட்டாமல் இருக்க பலப்பல புதிய உத்திகளை கையாண்டு வருமானத்தைக் குறைத்து காட்டுவதும் அதற்கு தோதாக ஆளுங்கட்சியும் ஆளாத கட்சியும் கொள்ளையர்களுக்கு வெண்சாமரம் வீசுவதும் இதுவும் தொடர்கதையாகவே தொடர்ந்து வருகின்றன.

இந்த நிலையை நீடிக்க விரும்பாத வருமானவரித்துறை. வருமானவரி கட்டாதவர்களை, பயமுறுத்துவதற்க்காக ஒரு பூச்சாண்டி வேஷத்தை காட்ட முடிவு எடுத்துள்ளது. வருமாணவரி கட்டாதவர்களின் விபரங்களை முதலில் வருமானவரித்துறையின் இணையதளத்திலும், அதன்பின் காவல்துறை,சி.பி.ஐ. உள்ளிட்ட விசாரனை அமைப்புகளிடமும் தேடுதல் வேட்டை பட்டியலிலும், வெளியிட்டு இறுதியாக நாளேடுகளில் வெளியிடப்படும் என்று முடிவு எடுத்துள்ளது.

2012-13-ன் நிதியாண்டில் வருமானவரியாக 41.115 கோடி கிடைக்கும் என்று வாய்பொளந்து  காத்திருந்த எதிர்பார்ப்பில் மண்விழுந்து 13.423 கோடிதான் வசூலானதால் புதிய பூச்சாண்டி வேஷம் காட்டுவதின் காரணமாகும்.

வாய்யா...வா.... வந்து அள்ளிட்டுப்போ.......... வாங்க சார்......வாங்க... வந்து அள்ளிட்டு போங்க சார்......... எதித்து கேட்டா ஒருபயலும் இருக்க மாட்டானுக, போலீசும்,இராணுவமும் தீனி போட்டு வளத்து வச்சுருக்கோம். எங்களுக்கு ஒங்க கையில கண்டத கொடுத்துங்க போங்கன்னு................

உள்ளுர் கொள்ளைக்காரனுக்கும்,பன்னாட்டு கொள்ளைக்காரனுக்கும் வரியைக் குறைத்து ஏகப்பட்ட சலுகைகளையும் அளித்துவிட்டு வருமானவரியை எதிர்ப்பது என்ன எழவோ........

அண்டாக்கசம் அபுக்காகசம்  போன்ற எல்லாத்தையும் பார்த்த கொள்ளைக்காரர்கள் வருமானவரித்துறை காட்டும் பூச்சாண்டி வேஷத்துக்காக பயந்துவிடப்போகிறார்கள்.


,

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com