திங்கள் 08 2013

ஏமாந்த போலீஸ் உதவி ஆணையரின் ரைட்டரும், ஏமாற்றிய போலீஸ் உதவி ஆணையரும்



மதுரை திடீர் நகர காவல் சரகத்தில்  போலீஸ் உதவி ஆணையாளராக பணிபுரிந்தவர் பேச்சிமுத்து பாண்டியன். அவரிடம் ரைட்டராக பணிபுரிந்தவர்  ஏட்டு முகம்மது அம்ஜத்.

போலீஸ் ஏட்டு அம்ஜத் தன் மகனுக்கு சென்னையில் உள்ள தனியார் பல்கலை கழகத்தில் பி.டெக் படிப்பதற்கு சீட் வாங்கி கொடுப்பதற்க்காக தன் மேலதிகாரியான  போலீஸ் உதவி ஆணையாளரை அணுகியிருக்கிறார்.

போலீஸ் உதவி ஆணையாளரோ, தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் பணிபுரியும் செல்வம் என்பவர் மூலம் ஏற்ப்பாடு செய்வதாகவும், அதற்கு 
7 லட்சம் செலவாகும் என்றும் முன்பணமாக தன்னிடம் ரூ50 ஆயிரத்தையும் மீதியை செல்வத்தின் வங்கி கணக்கில் செலுத்துமாறும்  கூறி செல்வத்தின் வங்கி கணக்கையும் கொடுத்துள்ளார்.

உதவி ஆணையாளரின் எல்லைக்குள்ள போலீஸ நிலையத்தின் பிரச்சனை மற்றும் வழக்குகளையெல்லாம் தீர்த்து வைக்கும் பணிகளை கூடவே இருந்து பணி புரிந்து வந்த  ரைட்டர்அம்ஜத்

தன் மகனக்கு பி.டெக் சீட் கிடைக்க வேண்டுமென்ற ஆசையில் உண்மை நிலையை அறியாமல் ரூ50 ஆயிரத்தை போலீஸ் உதவி ஆணையாளர் பேச்சிமுத்து பாண்டியனிடம் கொடுத்துவிட்டு, மீதி பணத்தை செல்வத்தின் வங்கிக் கணக்கில் செலுத்த முயன்ற போது.

முதல்வரின் தனிப்பிரிவு செல்வத்தின் வங்கிக் கணக்கும் போலீஸ் உதவி ஆணையரின் வங்கிக் கணக்கும் ஒரே எண்ணாக இருந்ததை, போலீஸ் உதவி ஆணையரிடம் ரைட்டராக பணி புரிந்து குப்பை கொட்டிய அம்ஜத்துக்கு அப்போதுதான் லேசாக பொறி தட்டியது.. ஆகா... தான் சேவகம் புரிந்த போலீஸ் அதிகாரியே தன்னை ஏமாற்றியது அவருக்கு தெரிந்தது.

யானை வாய்க்குள் போன பழாப்பழம் திரும்ப கிடைக்கவா போகிறது. என்ற அனுபவம் இருந்தாலும் ,ரைட்டர் அம்ஜத்  தன் அதிகாரிதானே என்ற மிதப்பில்  தான் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டுள்ளார்.

முன்பெல்லாம் வாங்கிய பணத்துக்கு வஞ்சகம்இல்லாமல் வேலையை செய்து முடிக்கும் நேர்மை ஓழிந்து போய் , வாங்கிய லஞ்சப் பணத்தையே க்வா செய்யும் திறமை அதிகரித்து விட்ட காரணத்தால்...

போலீஸ் உதவி ஆணையாளரும். தன் பங்க்குக்கு, மகா ஜனங்களிடம் பேசும் முறையில், எல்லா ஏற்ப்பாடும் செய்துவிட்டேன். பணத்தை திருப்பி தர முடியாது. பேசியபடி மீதிப் பணத்தை செட்டில் செய்து விடும்படியும். தன் ரைட்டரையே,ஏமாற்றினால் நடப்பதே வேறு என்று மிரட்டியுள்ளார்.

போலீஸ் ரைட்டரோ, ஒரு முறை ஏமாந்ததே போதுமய்யா, இனியும் ஏமாற மாட்டேன் என்று போலீஸ் உதவி ஆணையாளர் மீது மதுரை போலீஸ் கமிஷனர், தென் மண்ட ஐ.ஜி , டி.ஜி.பி. என ஒவ்வொருக்கும் புகார் மனு கொடுத்தார். அவர்களும்  உதவி ஆணையர் வருங்கால போலீஸ் உயர் அதிகாரி என்ற பார்வையாலும் அதிகாரி என்ற பாசத்தாலும் நாளைக்கு நமக்கும் பிரச்சினை வந்தால் என்ன செய்வது என்ற ரீதியில் பகைத்து கொள்ள விரும்பததால் ரைட்டர் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. சோர்வடையாத ஏட்டு அம்ஜத்
. கடைசியாக  வாய்ப்பாக மதுரை உயர்நீதி மன்றத்தை அணுகி வழக்கை தாக்கல் செய்துள்ளார். மதுரை உயர் நீதீ மன்றமும். இதென்னடா . வில்லங்கமா இரக்குன்னு நெனச்சு, அந்த அதிகாரிக்கு மனு கொடு, இந்த அதிகாரிக்கு மனு கொடுன்னு  ஏட்டு அம்ஜத்தை சுத்த வைக்க முடியாமல்... ரைட்டர் ஏல்லாவற்றையும் மனு கொடுத்து சுற்றி வந்துள்ளதால். வேறு வழியின்றி கழித்து கட்ட முடியாததால்லும் அதிகாரிகளை பகைத்து கொள்ள விரும்பததாலும் மதுரை உயர்மன்ற நீதிபதி வாசுகி அம்மையார். கழுத்தை சுற்றி மூக்கை தொடும் கதையாக, போலீஸ் ஏட்டுவான ரைட்டரின் மனுவை விசாரித்து...

உதவி ஆணையரின் சரகத்துக்குள்ள எஸ்.எஸ் காலனி போலீஸ நிலைய  ஆய்வாளரிடம் வழக்கை தள்ளிவிட்ட்டார்.  ஒரு மாத்தத்துக்குள்ன்னு சொல்லாமல் நாலு வாரத்துக்குள் விசாரித்து முடித்து. அதன் முடிவைப் பொறுத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டார்.
இதையே, போலீஸ் ரைட்டர்  போலீஸ் உயர்  ஆணையாளரை ஏமாற்றி இருந்து வாங்கிய பணத்தை மொங்கா போட்டு இருந்தால் உடனே அனைத்து மட்டத்திலும்  நடவடிக்கையே வேறு மாதிரியாக இருந்திருக்கும்  புதுப்புது கண்டுபிடிப்பகளை புகுத்தி பரப்பரபாக்கி சட்டம் தன் கடமையை செய்திருக்கும்.ஏமாந்தது  ஏட்டு அம்ஜத் ஆச்சே........
இந்த விபரங்களை தினத்தந்தியிலும் தினகரனிலும் படித்த மகா ஜனங்கள்   சூடான டீத்தண்ணிய மடக்மடகென  வேகமாக குடித்துவிட்டு மிக ஆவலாக படித்தனர். இத்தகைய அரும் பெரும் விபரங்கள் அய் கிளாஸ் பத்திரிக்கையான தினமணியில் வரவே இல்லை.  தினமணியின் வாடிக்கையாளர்கள் இந்த லோ கிளாஸ் செய்திகள் எல்லாம்  திணமணியில வாரதுப்பா  அவுக எல்லாம் அய் கிளாஸ்ப்பா என்றார்கள்

ஓவர்............ ஓவர்...........

குறிப்பு......ஒவர் என்பதை முடிந்தது என்றும், ரெம்ப ஓவராகீது என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்........ஓவர்.

1 கருத்து:

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...