பக்கங்கள்

Friday, August 16, 2013

முதுகெலும்பு உள்ள மனிதர்களும்,,முதுகெலும்பு இல்லா பிராணிகளும்.

போஸ்டர்

இந்திய சுதந்திரத்தன்று...........“1947க்கு முன்பு ஆங்கிலேய காலனி எஜமானர்கள்   இந்தியாவை ஆண்டார்கள். இப்போது பல்வேறு நாடுகளை சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் தமது விசுவாசமான தரகர்கள் மூலம் இந்திய மக்கள் மீது அதிக்கம் செலுத்துகிறார்கள்.”

எனவே,ஆகஸ்டு15 போலி சுதந்திரம்,இதற்கென்ன கொண்டாட்டம்? தொடங்கு வோம் புதியதோர் விடுதலை போராட்டம்,”- என்று துண்டறிக்கை கொடுத்த தோழர் சிவாவையும், போஸ்டர் ஒட்டிய தோழர் இராமலிங்கத்தையும்

1947 க்கு முன் ஆங்கிலேயனுக்கும், தற்போது தரகர்களுக்கும் விசுவாசமாக  கருத்துரிமை,அரசியல் உரிமை ஆகியவற்றை பறித்து  போலி சுதந்திர தினத்தில் நெஞ்சை நிமிர்த்தி விறைப்பாக அணிவகுப்பில் சென்று சல்யூட் அடிக்கும் போலீசு.

பொது அமைதிக்கு குந்தகம், விளைவித்தாகவும்.அரசை கவிழ்க்க சதி செய்ததாகவும் தேச துரோக வழக்குகளில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்........போலி  சுதந்திர நாட்டின்.இவர்கள்......
--------------------------------------------------------------------


“ தலைவா” என்ற ஒரு பொழுது போக்கும் படம், அதில்  நடித்தவர் வருங்கால முதல்வர் பதவிக்காக ரெண்டு சைக்கிள்,மூன்று அயன்பாக்ஸ், நாலு தையல் மிஷின் அன்பளிப்பாக  முன்கூட்டியே  அச்சாரம் கொடுத்து வைத்திருக்கும். கதாநாயகன் விஜய்.

வருங்கால முதல்வருக்காக கதை,திரைக்கதை,வசனம் இயக்கம் எல்லாவற்றையும் முன்னெடுக்கடும்  விஜய்யின் தந்தை,

இந்த வருங்கால முதல்வருக்காக இப்பவே பரப்பபுரை செய்வதற்கு 50கோடி போட்டு  படமெடுத்த தயாரிப்பாளர்.

அய்யோ, தம் பதவிக்கு ஆபத்தென்று அஞ்சி இஞ்சி தின்று  ,தலைவாவை,
மடக்கி முடக்கி  தனியொரு ஆளாக பத்து பேரை பந்தாடும் வீராதி வீரரை பந்தாடு்ம் வில்லாதி வில்லிகள்.

சொந்த தொழில்  ஏற்ப்படும் பிரச்சினையை தீர்க்க வக்கற்று  பதினாறு அடி ஓடி எட்டி பார்ப்பவர்களை  சூராதி சூரன் என்று பிலீம் காட்டுபவர்கள்  எல்லாம் சுதந்திர இந்தியாவின்  .................................

No comments :

Post a Comment

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!