செவ்வாய்
வெள்ளி கிழமைகளில் கோயிலுக்கு செல்வது மாதிரி. அவனுக்கு மாதத்தில் ஒரு நாளாவது
காவல்நிலையம் செல்வது..........
இத்தனைக்கும்
அவன் காவல்நிலையத்தாரால் அங்கீகரிக்கப்பட்ட தாதாவோ. குரு நில மன்னரோ.தெரு நில
மன்னரோ அல்ல,
போக்கிரியோ, திருடனோ, அல்லது அடிக்கடி தேடப்படும் குற்றவாளியோ, பொய்
வழக்குக்காக பயன் படுத்தும் குற்றவாளியும் அல்ல,
ஏதாவது ஒரு வழக்கில்
சிறையிலிருந்து நிபந்தனை ஜாமினில் வந்து காவல்நிலையத்தில் கையெழுத்து போடும்
விசாரனை குற்றவாளியும் அல்ல............
ஆனாலும் மாதத்தில் ஒரு நாள் காவல் நிலையம்
செல்லாமல் இருக்க விடமாட்டார்கள் அவன் வசிக்கும் தெரு வாசிகள்..தெருக்காரர்களுக்கும்
அவனுக்கும் அப்படி ஒரு பாச பினைப்பு.
தெரு வாசிகள் அவன் மீது அப்படியான அன்பு வைத்திருக்கிறார்கள் அதுவும் அந்தத் தெருவின் நாட்டாமையும், தெருவின் முகப்பில்
உள்ள கோயிலின் பூசாரியும் ஆன. தெரு நிலமன்னனுக்கும் அவனுக்கும் அப்படியோரு பாசப்
பினைப்பு,
அதுவும் அவனின் குடும்பத்தில் மூன்று தலைமுறையாக அப்படியோரு பாசம
அவனின்
இடத்தை தெரு நில மன்ன்ன் ஆக்கிரமிப்பு செய்து வீட்டைக் கட்டிய தோடு இல்லாமல்
மீண்டும் கட்டிய வீட்டுக்கு பாதை வேண்டி மீண்டும் அவன் இடத்தை ஆக்கிரமிப்பு
செய்வதால் உண்டான பாசம் பினைப்பு.
இரண்டு
தலைமுறையாக தெரு நில மன்னனின் குடும்பத்தின் ஆள் பலத்தினாலும் பணபலத்தினாலும், அவனின் தந்தை குடும்பம் அடிவாங்கியதால்,எந்த எதிர்ப்பும் காட்டாமல், பின்வாங்கி
அமைதியாகிவிட்டது.
மூன்றாவது
தலைமுறையான அவன் காலத்தில்தான், ஆள்பலமும், பணபலமும் இல்லாதபோதும் தெரு நில
மன்ன்னை எதிர்த்து தனது இடத்தை மீட்க போராடி வருகிறான். அவன் தந்தை வழி சொத்து என்பதற்கும் தனக்கும் அது ஒன்றுதான்.
சரியான,முறையான
தன் இடத்துக்கான ஆதாரங்களை அலைந்து தேடிபிடித்து கைவசம் இருந்தும் .தெரு நில மன்னனிடம் பலமுறை தோல்வி அடைந்தான் . விடாப்பிடியாக தெரு நில மன்ன்னை எதிர்த்து வருகிறான். இந்தப் போராட்டமத்தோடு அவனோடு அவன் தலைமுறையும் முடிவுக்கு வருகிறது.
அவனின்
தலைமுறை தொடர்வதற்கு மனைவி,
குடும்பம்,வாரிசு எதுவும் அவனுக்குஇல்லை. அவன்வாழ்நாளில் பெரும்பகுதி இடம், தெருவாசிகளை எதிர்த்த போராட்டத்திலே கழிந்துவிட்டன.
இத்தனைக்கும் அவன் எதிர்க்கும் தெருநிலமன்னன் மற்றும் தெரு வாசிகள் அனைவரும் இந்தியாவின் தந்தை என்று போற்றப்படும் காந்தியி னால் அரிசனங்கள் என்று அழைக்கப்படுபவர்கள்.
இத்தனைக்கும் அவன் எதிர்க்கும் தெருநிலமன்னன் மற்றும் தெரு வாசிகள் அனைவரும் இந்தியாவின் தந்தை என்று போற்றப்படும் காந்தியி னால் அரிசனங்கள் என்று அழைக்கப்படுபவர்கள்.
சின்னமீனை
தின்னும் பெரிய மீனைப்போல தெருவின் நாட்டாமையான தெரு நில மன்னன். நடந்து வருகிறான்.
பன்னி
ஒரு ஈத்துக்கு பல குட்டி போட்டது மாதிரி தெரு நிலமன்னனும் ரெண்டு
பொண்ணும்,நான்கு ஆணுமாக சட்டபூர்வ வாரிசாக பெற்றான். சட்டப்பூர்வம் இல்லாமல் சின்னவீடு,வைப்பாட்டிகளுக்கும்
ரெண்டு மூணுமாக............சேர்த்து தெரு நில மன்னனின் குடும்பமே ஒரு படையாக
பட்டாளமாக அந்தத் தெருவில் இருக்கிறது.
இது
போதாக்குறைக்கு, தெரு நிலமன்னனின் மாமன் மருமகன் உறவு முறைகளோட,. அவனின் தந்தைவழி
உறவுமுறைகளான சித்தப்பன்களும் தெரு நில மன்னன் பக்கம் சேர்ந்துள்ளதால் அந்தத் தெருவில் அவன்
மட்டும் தனி.
ஒண்டிக் கட்டையான அவன் மீது தெரு நில மன்னனான தெரு நாட்டாமையும்
அவனின் உறவுகளும் அடுத்தடுத்து இவன் மீது அந்தக் காவல்நிலையத்தில் பொய்ப்புகார்
கூறுவதால். அவன்.
” மாதத்தில் ஒரு நாளேனும் காவல்நிலையம் செல்லாத
நாள் இல்லை.
சென்ற மாதத்தில் அவன் மீது யாரும் புகார் எதுவும் கொடுக்கவில்லை .இ தனால் காவல் நிலையம் செல்ல வேண்டிய
நிலை இல்லை என்று நிணைப்பில் ஓய்ந்திருந்த நிலையில்............
அவன் புகாருடன் காவல்நிலையம் செல்ல வேண்டிய நிலை
ஏற்ப்பட்டது.
இவன்
வீட்டிலிருந்த 5கிலோ பெருமானமுள்ள பித்தளை அண்டா, 2கிலோ சருவப்பானை, சில்வரான இட்லி சட்டி,2கிலோ அரிசி
வேக வைக்கும் அளவிலான சோத்துப்பானை ஆகிய பொருட்கள் மொத்தமாக திருடு போனது..
உண்மை சம்பவங்கள் உள்ளதை உள்ளது போல் எழுதி பகிர்ந்தால் அவைகளை அறிந்து அதற்கு தேவையான கருத்துக்கள் பரிமாற்றம் செய்து தகுந்த நடவடிக்கைகளையும் எடுக்கலாம். ஆனால், இங்கு கற்பனையில் உருவான கதை என்கிற பெயரில் கூட எளிவர்கள் அடி வாங்கி அழிவதற்கென்றே பிறந்தவர்கள் போன்ற கருத்தை பரப்புவது தவறென்றே படுகிறது. இந்த கருத்தைத்தான் இந்து மதம் இதுகாலும் பரப்பி வருகிறது என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டிய அவசியமில்லை.
பதிலளிநீக்குகதி விதி என்கிற மூட நம்பிக்கை எதுவும் இல்லை எனவும் மன தைரியத்துடன் தன்நம்பிக்கையுடன் தீரமாக எழுச்சி பெற்று போராடினால் தமது வாழ்க்கையை தாம் நினைத்தபடி மாற்றி அமைக்கலாம்என்கிற கருத்தை ஊட்டி வளர்க்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
எழுத படிக்க தெரிந்த பலகலைக்கழக பட்டங்கள் பெற்ற புதிய தலைமுறையினரே இது போன்ற கருப்பு சிந்தனைகள் கொண்ட கதை கட்டுரைகளை எழுதி பரப்பினால் படிக்காத ஏழை எளியவர்கள் இனவகைகளை வேத வாக்காகத்தான் ஏற்றுக்கொள்வார்கள்.
எனவே உங்கள் சிறுகதை இங்கு கற்பிக்க வரும் பாடத்தில் எனக்கு எந்த ஈடுபாடும் இல்லை.
கொஞ்சம் காத்திருந்தால் கூலிக்கு மாரடித்து உங்களுடன் ஒப்பாரி வைக்க சிலர் வருவர்.
Good luck!
அன்பர் மாசிலா அவர்களுக்கு,நான் பதிவிடும் ஒவ்வொரு கதையும் கற்பனை அல்ல. நடந்தவற்றை , அறிந்தவற்றை.அனுபவபட்டதை.நேரில் கண்டவற்றையே கதை வடிவில் பதிவிடுகிறேன். ஒரு சாதரண மக்கள் எப்படி ஒரு அயோக்கனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அந்த அயோக்கின் ஒரு தாழ்த்தபட்டவனாக இருந்தாலும் தனக்கு கீழ் இருக்கிறவர்களின் சொத்துக்களை சேர்த்துக் கொள்கிறான். அதற்கு உடந்தையாக தனது உறவினர்களை பயன்படுத்திக் கொள்கிறான் என்பதை காண தவறிவிட்டீர்கள்என்றே கருதுகிறேன்.
பதிலளிநீக்கு