பக்கங்கள்

Monday, August 26, 2013

பகவானும் சாமிகளும்..............ஒரு நாள் பகவான், ஆம்பிளை சாமிகளுடன் கள்ளன் போலீசு விளையாட்டு முடிந்தபின் கேரம் போர்டு விளையாடிக் கொண்டு இருந்தது.

பகவான் விளையாடிக்கொண்டு இருக்கும்பொழுது,பகவானுக்கு   அதன் மூளையில் திடீரென்று ஒரு சிந்தனை தோன்றியது.--- அதை

வெறுப்பு.விறுப்பு இல்லாமல் பகவான் சொல்லறதையே கேட்டுக் கொண்டு இருந்த சாமிகளிடம் சொன்னது.

சுவாமிகளா, பகவான் ஆகிய நான் உங்களையெல்லாம் ஈக்களாக மாற்றி விட்டால் என்ன செய்வீர்கள் என்றது.

இதைக் கேட்டவுடன் சுவாமிகளுக்கு கையும.காலும் ஆடவில்லை, என்னடா இது? “பகவான் சாமிகளையே சோதிக்கிறாரு என்று புலம்பியது.

அதிலொரு சாமி எழுந்து, பகவானை வணங்கி,  பகவானே,சாமிகளான 
எங்களை  ஈ க்கள் ஆக மாற்றி விட்டால் நாங்களெல்லாம், 
பகவானான உங்களைத்தான் மொய்த்துக் கொண்டு இருப்போம் என்றது..

அது கேட்ட பகவான், சிரித்துக்கொண்டே.. 'இப்ப என்ன வாழுது"! இப்பவும் என்னை மொய்த்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள் என்றது பகவான்.

பகவானும் சாமிகளும்  இப்படித்தான் கூத்தடித்து பொழுது போக்கிட்டு இருந்தன..2 comments :

  1. #பகவானும் சாமிகளும் இப்படித்தான் கூத்தடித்து பொழுது போக்கிட்டு இருந்தன..#
    இப்போதும் இருக்கின்றன ,தங்களை சுற்றிலும் ஈக்களை வளர்த்துக் கொண்டு !த.ம.i

    ReplyDelete
  2. பகவான்ஜி தங்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com