பக்கங்கள்

Thursday, August 29, 2013

பொய்ப்புகார் கொடுப்பது எப்படி??? காவல் உதவி ஆய்வாளரின் வழிகாட்டல்!!!

 

மாநகராட்சியை சேர்ந்த பகுதி அந்தத்தெரு, அந்தப் பகுதியில் பாதாள சாக்கடை இணைப்பு கொடுப்பது சம்பந்தமாக  கணேசன் என்பவருக்கும், அந்தத்தெருவில் நாட்டாமையாக இருக்கும் குருசாமி என்பவருக்கும் இடத்து பிரச்சனை ஏற்பட்டு, அப்பகுதி காவல்நிலையத்தில் இருவரும் புகார் கொடுத்தனர்.


குருசாமி என்பவர். கணேசனுக்கு பாத்தியமான இடத்தை  தன் வாடகைக்கு விட்டுள்ள வீட்டிற்கு பாதையாக பயன்படுத்துவ தோடு அந்த இடத்தின் வழியே கணேசன் இல்லாத நேரத்தில்  பாதாள சாக்கடை இணைப்பும் கொடுத்துவிட்டார்.


கணேசனும் தன்வீட்டிற்கு பாதாளசாக்கடை குழாய் இணைப்புக்காக பலமுறை முயன்று கடைசியாக மாநகராட்சியிலிருந்து வேலை உத்தரவு பெற்று இணைப்பு கொடுப்பதற்க்காக பொது பாதையை தோண்டினார்


அப்போது குருசாமி என்பவர் தன் படை பட்டாளங்களுடன் வந்து, கணேசனுக்கு பாதாள சாக்கடை குழாய் இணைப்பு கொடுக்க்க்கூடாதுஇந்தப் பாதை பொது பாதையல்ல


இது எனது சொந்தப்பாதை கிழக்கு பக்கதில் உள்ள நான் 5அடியும், மேற்கு பக்கத்தில் உள்ளவர் 5அடியும் விட்டு 10 அடி பாதையாக எங்கள் இருவர்க்கு மட்டுமேயான சொந்தப்பாதை இது. இந்தப்பாதையில் கணேசன் பாதாள சாக்கடை குழாய்க்கு தோண்டக்கூடாது   போடக்கூடாது என்று தடுத்தார். 


குருசாமியுடன் வந்திருந்த பெண்கள் பட்டாளமும் கணேசனுக்கு  குழாய் போட தோண்டக்கூடாது என்று சத்தம் போட்டது.

பெண்கள் பட்டாளத்தின் சத்தத்தால் பயந்துபோன மாநகராட்சி உரிமம் பெற்ற பிளம்பர், குருசாமியிடம் கணேசன் பெற்ற வேலை உத்தரவு நகலை காண்பித்தார். எந்த உத்தரவு வைத்திருந்தாலும் அவனுக்கு குழாய்போடக்கூடாது என்றார் குருசாமி


பிளம்பர்,போடக்கூடாதுன்னு சொல்றதுக்கு  நீதிமன்ற உத்தரவு வாங்கி இருக்கீங்களா என்றபோது.......


பெண்கள் பட்டாளம், “யோவ், போடக்கூடாதுன்னா பேசாம போய்யாஅது, இது,வச்சுயிருக்கியான்னு கேட்டுகிட்டு என்று சவுண்டு கொடுத்ததுகள்.காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். தடையானை பற்றி பிறகு பாத்துக்கிரலாம் குருசாமி.


குருசாமியும் பிளம்பரும் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது., இரண்டு போலீஸ்காரர்கள் வந்து ,“கணேசன் என்பவரு யாரு? என்றபோது


கணேசன் அவர்கள் முன் ஆஜர் ஆகி, விபரத்தை சொன்னார். இரண்டு போலீஸ்காரர்களும் மாநகராட்சி வழங்கிய வேலை உத்தரவு நகலை வாங்கிப்பார்த்துவிட்டு, எதுவாயிருந்தாலும் ஸ்டேசனில் வந்து பேசிக்குங்க,  என்று கூறிவிட்டு கணெசனை காவல்நிலையத்துக்கு வருமாறு அழைத்தனர்.


பிளம்பர், நீங்க காவல்நிலையம் சென்று விட்டு வாருங்கள்.முடிவு தெரிஞ்ச பின் வேலையை தொடங்கலாம் என்று சொல்லிவிட்டு தன் வேலையாட்களுடன் பொம்பளைகளின் கத்தலுக்கு பதில் சொல்லியபடி வெளியேறிவிட்டார்.


கணேசனும், தனக்குரிய எல்லா சான்றுகளையும் எடுத்துக் கொண்டு வந்திருந்த இரண்டு போலீசுடன் காவல்நிலையம் சென்றார்.


காவல்நிலையம் சென்றபோது, காவல் ஆய்வாளர் வெளியில் சென்று விட்டதால் இரண்டு மணிவரை காத்திருந்தார். பின்பு. விசாரனை முடியும் வரை எந்த வேலையும் செய்யக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டு மாலை 7 மணிக்கு வருமாறு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


கணேசன்.7 மணிக்கு சென்றபோது,“ இன்ஸபெக்டர்,பாராவுக்கு போயி இருக்கார். அதனால் காலையில் வருமாறு திருப்பி அனுப்பப்பட்டார்.


மறுநாள் காலையில் உதவி ஆய்வாளர் சிவன்  என்பவரால் விசாரிக்கப்பட்டார். 


உதவி ஆய்வாளர் கணேசனுடைய ஆதாரங்களின் நகல்களை வாங்கி பார்த்து அதற்க்கான விபரங்களை கேட்டார். கணேசன், தன்னுடைய வீட்டுவரி, மாநகராட்சி வழங்கிய பாதாளசாக்கடை குழாய் உத்தரவு  நகல் குருசாமி சொல்லும் பாதையானது.பொதுப்பாதைக்கான வரைபடம்முதலாவற்றைக்  காட்டினார்.


இடையிடையே, குருசாமியும்.அவரின் மூத்த மகனும் விடுதலை சிறுத்தை யின்  பொருளாருமான செல்லமணி சொல்வதையும் கேட்டார். 


கணேசனிடம் திரும்பி, “நான் வந்து இடத்தை பார்வையிடும்வரை  மீறி எந்த வேலையும் செய்யக்கூடாது என்றார்.


நீங்கள் பார்வையிடும்வரை எந்த வேலையும் செய்யமாட்டேன். நீங்கள் எப்போது வந்து பார்ப்பீர்கள் என்று கணேசன் கேட்டபோது.


உடனே, சொல்லனுமா, வருவேன்ய்யா.......பேசா..ம போய்யா  என்றார் உதவி ஆய்வாளர்.


தினசரி வீட்டீற்கும் காவ்ல்நிலையத்திற்கும் அலைந்ததன் பலானாக மூன்று நாட்களுக்குப்பின் உதவி ஆய்வாளர் இடத்தை பார்வையிட்டார்...


தன் இடத்தை குருசாமி என்பவர் பாதையாக பயன்புடுத்துவதையும், தன் இடத்திற்குள் பாதாள சாக்கடை குழாய் பதித்துள்ளதையும் சுட்டிக் காண்பித்த போது.,


இவ்வளவு.விவரமா.பேசுற....ஏன்ய்...யா விட்ட........ என்று பரிந்து பேசுவது போல் பேசினார். இடத்தை பார்வையிட்ட அன்றே இன்ஸ்பெக்டரிடம் சந்தித்து ஆவணங்களை காண்பித்து பேசினார்


இன்ஸ்பெக்டர், எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, மெதுவாக 
உதவி ஆய்வாளருக்கு கேட்கும்படியாக,எல்லாம் பக்காவா இருக்கு இதில் நான் தலையிடமுடியாது . நீங்கள் பார்ட்டீயிடம் பேசி முடிவு எடுங்கள். என்றார் 


உதவி ஆய்வாளரும், குருசாமியின் மகன் செல்லமணியும் தனியாக நீண்ட நேரமாக பேசினார்கள். பிறகு   கணேசனை கூப்பிட்டு, உதவி ஆய்வாளர் சொன்னார்,


 நீ.......இவங்க பயன்படுத்துற பாதையை விட்டுக் கொடுத்தா.......... இந்த வழியா உன்னை குழாய் போட விடுவாங்க.........என்றார்.


சார், இவுங்க, பாதாள சாக்கடை குழாய் போட்டு இருக்கிறது என்னோட இடத்துல, நான் போடப்போறது மாநகராட்சிப் பாதையில்...... இவுங்க சொந்த இடமா இருந்தா....... நான்விட்டுக்கொடுப்பேன்.. இவங்க..சொந்த இட மில்லையே..........என்றார் கணேசன்.


ஒரே சாதிக்காரங்கரங்கதானே,விட்டுக் கொடுக்லாமில்ல  என்றார் உதவி ஆய்வாளர்.

அதற்கு கணேசன் சொன்னார்.இவர்கள் பயன்படுத்தும் இடம், 29 அடி நீளமும்,10அடி அகலமும் கொண்டது, ஒரு சதுரஅடி மதிப்பு 800ரூபாய் கணக்கு போட்டு அதுக்குள்ள பணத்தை கொடுத்தா நான்......விட்டுக்கொடுத்துடறேன்.


உதவி ஆய்வாளர். கணேசனை முறைத்துப்பார்த்துவிட்டு சொன்னார்.


அப்பிடின்னா...... நீ கோர்ட்லதான் பாத்துக்கனும்.


 சரி சார், அப்படியே கோர்ட்டிலே பாத்துக்கிறேன்.


சரிசரி...போ... அதுவரை நீ .......பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கக் கூடாது என்றார் 


சரி. என்றுவிட்டு கணேசன் வீடு திரும்பி விட்டார்..


மறுநாள் காலையில், கணேசன், வேலை நிமித்தமாக ரோட்டு வழியில் சென்ற போது,  நண்பர் ஒருவர்  பெயரைச் சொல்லி  கூப்பிட்டார்.


டேய்.........கணேசா..........டேய்..கணே...சா. டேய் .நாங்கூப்பிடுறது காதுல விழலயா  .......... இங்கவாடா......என்றார்.


கூப்பிட்டு திரும்பி பாக்கலேன்ன ,கைய தட்டி கூப்பிடுவதுதானே என்றுவிட்டு ,என்ன விசயம் என்றார் கணேசன்


கணேசனும்  குருசாமியும் இடத்து பிரச்சனை காரணமாக போலிஸ. ஸ்டேசன் வருவது தெரியுமாதலால் அதன் விபரத்தை கேட்டறிந்தார். பிறகு,திடீரென்று ரகசியமாக பேசினார்.செல்லமணியும் சிவனும் என்ன பேசினாங்கன்னு தெரியுமா..?


தெரியாதே..........செல்ல மணியும், சிவனும், ஒரே பள்ளிக்கூடத்துல படிச்சவங்கே.... ஒனக்கு தெரியுமா


தெரியாதே”?


 சிவனத் தெரியுமா?  தெரியலைய்யா..அடப்....போடா...சிவன், நைனாடா.... நாம பள்ளிக்கூட  போற ..ஒத்தக்கடை காம்பவுண்டல  குடியிருந்தது தெரியாதா............


சரியா.....ஞாபகமில்ல, அவன தெரிஞ்சிருக்கும்போதுசிவனுக்கு என்னய தெரிஞ்சிருக்கனுமில்ல................


சரி விடு அத,  இப்ப நா....சொல்றத கேளு.......... ஏற்கனவே, இன்ஸ்பெக்டருக்கு சிவன் மூலமா கனிசமா தொகை போயிருச்சு.......அதுல வேற....நீ பக்காவா ஆதாரம் வச்சிருக்கியா...... அதனால ஒன்னும் செய்ய முடியல...... இன்ஸபெக்டருக்கும் ஒன்ன பத்தி தெரிஞ்சிருக்கு...........


இந்த நைனா..  செல்லமணிக்கு சொல்லிக் கொடுத்திருக்கிற ஐடியாவ   பாரு.....நீய்யி.......... பாதாள சாக்கடை குழாய் வேலை தொடங்கும்போது


ஆம்பிளைங்க யாரும் போகா..ம... பொம்பளைங்களா வந்து உன்னிடம் சண்டையிட்டு, சாக்கெட்டுகளை கிழித்துக்கொண்டு, போலீஸ் ஸ்டேசனில நீ.......மானபங்கம் செய்ததாக புகார் கொடுக்கச் சொல்லிருக்காண்டா......... 


அந்த புகார் கொடுத்தா மூனு மாசம் ரிமாண்ட்.. ஒன்ன மூனு மாசம் உள்ளே பிடுச்சு போட பிளாண் பண்ணியிருக்காங்க.. கவனமாக இருந்துக்க்கோடா.. என்றார்...


நான் சொன்னேன்னு எவன்கிட்டேயும் சொல்லிடாத.......... கவனம்........


 நீ... வேற..... அந்த ஏரியா பொம்பளிங்க, என்ன உண்டு இல்ல என்று பன்ற சாக்கில்  வீராப்ப இந்த விசயத்த கொட்டிட போறாள்க............  


சரி....சரி....... கவனமாக இருந்துக்க.......... என்றார்.கணேசன் தன்நிலையையும் குருசாமி செய்யும் அநியாயத்தையும் சொல்லிவிட்டு.......... நான் பாதாள சாக்கடை இணைப்பே கொடுக்கல சாமி........


மானபங்க வழக்கு போட்டாலும், நான் அப்படி  செய்யவில்லை என்ற உண்மை  இவிங்க விசாரிக்கிற விசாரிப்புல  ஜெயிலுக்கு போயி வெளயே வந்துஅப்புறம் பத்து வருசத்துக்கு பின்னாடிதானே  தெரியும்..


அதுக்கு செலவழிக்கிற காச வச்சு, பாதாள சாக்கடை இணைப்பு வழங்க கேட்டு  நான் தனியா..ஒரு வழக்கு நடத்துக்கிறேன்டா சாமி என்று  கூறிவிட்டு


அவருக்கு   பொய்வழக்கு போட முயலும் செய்தியை சொன்னதற்கு நன்றியை தெரிவித்து விட்டு..........................  அடுத்து என்ன செய்யலாம் என்ற சிந்தனையுடன் வீட்டை நோக்கி நகர்ந்தான்.

4 comments :

 1. 100 % True. I agree. This is happening nowadays everywhere.

  ReplyDelete
 2. தங்களின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 3. கணேசனுக்கு பிள்ளையா? குட்டியா? பிற்பாடு அபகரித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் குருசாமிக்கு. ஒரே ஜாதிக்காரர்கள் மற்றும் உறவினர்கள் என்பதால் இப்போதைக்கு இந்த பிரச்சினை தீராது போலிருக்கிறது. (உங்கள் பழைய பதிவு “ மாதத்தில் ஒரு நாளேனும் காவல் நிலையம் செல்லாத நாள் இல்லை...???” ஞாபகம் வந்தது. )

  ReplyDelete
 4. தங்களின் ஞாபகத்திற்கும். கருத்துரைக்கும் நன்றி!!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com