பக்கங்கள்

Sunday, August 18, 2013

தலைவா வும்.. தலைவி...யும்...........“ தலைவா” என்ற ஒரு பொழுது போக்கும் படம், அதில்  நடித்தவர் வருங்கால முதல்வர் பதவிக்காக ரெண்டு சைக்கிள்,மூன்று அயன்பாக்ஸ், நாலு தையல் மிஷின் அன்பளிப்பாக  முன்கூட்டியே  அச்சாரம் கொடுத்து வைத்திருக்கும். கதாநாயகன் விஜய்.

வருங்கால முதல்வருக்காக கதை,திரைக்கதை,வசனம் .இயக்கம்  என எல்லாவற்றையும் முன்னெடுப்பவர்  கதாநாயகனின் தந்தை,

இந்த வருங்கால முதல்வருக்காக இப்பவே பரப்புரை செய்வதற்கு 50கோடி போட்டு  படமெடுத்து நெஞ்சுவலிக்கு ஆளான தயாரிப்பாளர்.ஜெயின் 

தமிழ்நாட்டின் வருங்கால முதல்வரை உலகுக்கு காட்ட ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி போயி வருங்கால முதல்வரை ஆடவிட்டு  சுட்டுட்டு வந்த இயக்குநர் விஜெய்

அய்யோ,  அய்யயோ, வருங்கால முதல்வரால் தம் பதவிக்கும் ஆட்சிக்கும் ஆபத்தென்று அஞ்சி, இஞ்சி தின்ற குரங்காக,தலைவாவை,மடக்கி ,முடக்கி  தனியொரு ஆளாக, பத்து பேரை பந்தாடும் வீராதி வீரரை பந்தாடு்ம் வில்லாதி வில்லி.

சொந்த தொழிலில்  ஏற்ப்படும் பிரச்சினையை தீர்க்க வக்கற்று   எட்டு அடிதூரம் ஓடுபவர்களையெல்லாம் சூராதி சூரனாக,வீராதி வீரனாக பிலீம் காட்டினால் அவர்கள் பதினாறு அடி பாய்ந்து ஓடுவார்கள் என்பது  விஸ்வருபத்துக்கு பின்  தலைவாவில் தெரிந்த அனுபவ உண்மையாகும்.

No comments :

Post a Comment

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!