வெள்ளி 01 2013

விட்டு விலகாத மூடநம்பிக்கைகள்..........


தற்போது நிலவரப்படி
தமிழகத்தில் மழை
பெய்ய வாய்ப்பு
குறைவு.....................

அதனால் காற்று
அழுத்த தாழ்வு
மண்டலம் ஒன்று
உருவாகி அது
கடற்கரையை நோக்கி
வந்தால்தான் மழை
பெய்ய வாய்ப்பு......

இதனால் வடகிழக்கு
பருவ மழையும்
இந்தத் தடவையும்
பொய்த்து விட்டது.

ஆகையினால். இந்த
குறைகளை போக்கிட
பத்தாயிரம் மரங்களை
வெட்டியதை கண்டு
கொள்ளமால இரு
பதாயிரம் மரக்கன்றுகளை
நடச் சொல்லும்
அரிய விஞ்ஙானிகளின்
பேச்சை ஊதா
சீனப்படுத்தாமல்...

மழை வரவழைப்பதற்க்கு
இரத்தத்தோடு ஊறிப்
போன பரம்பரை
வழக்கமான சடங்கு
சாத்திரங்களை மண்
ணோடு புதைக்காமல்

இல்லாத ஒன்றிடம்
வேண்டி நின்று
அது,கேட்டதாக
ஆடுகளை
கோழிகளை
வெட்டி அறுத்து
பலி கொடுத்து
பொங்கல் இட்டு
வணங்கியும் மழை
வராததால்.............

அடுத்த படியாக........
கழுதைக்கும் கழுதைக்கும்
மணமுடித்து பார்த்து
மொய்யெழுதி திண்ட
சோறு செமிக்க
வானத்த வாய்
பொளந்து பாத்த
போது மழை
தடுக்கப்பட்டதை
கண்டு............................

மாற்றாக..............
மழையை தடுக்கும்
அரக்கன் பொம்மையை
தயார் செய்து.........
தெருத்தெருவாக
இழுத்து வந்து
பழைய வௌக்குமாறு
பிஞ்ச செருப்பால்
அடிஅடியென்று
அடித்து துவைத்து
தடையை நீக்கியும்
மழை பொழியவில்லை.

பெய்தால் நாசம்
பெய்யாவிட்டால்
மோசம் என்ற
நிலையை மாற்ற
பெய்த மழையை
சேமிக்க வழிகான
இருக்கும் ஒன்றிக்கு
வக்கும் மனமும்
இல்லாத போது.

அந்த இருக்கும்
ஒன்றிடம் மனு
கொடுக்க ஊர்
வலம் வந்த போது
லத்தி அடிகள்
மழையா பொழிந்தது
மறந்தா போயிற்று..

ஆளுகின்ற கூட்டம்
செய்கின்ற போக்கால்
மழை பொழியவில்லை
என்ற துப்பு புரியாமல்

பரம்பரை வழக்கம்
அய்தீகம் என்று
சொல்லி நாளும்
ஒரு மூட தனத்தை
விட்டு விலகி............

மழை வராதிருக்கும்
காரணத்தை அறிய
முயலுவீர் மக்காள்!!!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....