திங்கள் 07 2015

சரவணன்...என்பவன்....வித்யாவானாள்....

நான்,வித்யா.jpg

                                                          இது சரவணன் அல்ல வித்யா
ஆணாக பிறந்த அவன்
தன்னை ஆணாக உணரவில்ல

மனதளவில் அவன் தன்னை
பெண்ணாகவே கருதி கொண்டான்

ஆணுக்கு உரிய அடையாளம்
அவன் உடலில் தெரிந்தாலும்

அதை மறைக்க வருந்தாமல்
பால்  மாற்று  அறுவை
சிகிச்சை மேற் கொண்டான்.

அந்த சிகிச்சைன் போது
வலியை  கடக்க  வழி
தெரியாமல் அரற்றி கொண்டான்

வயிற்றுக்கு உள்ளே கம்பியை
விட்டு  குடலை  உறுவும்
அப்படியான வலியை உணர்ந்தா(ன்)ள்

சரவணன் என்ற ஆணாக இருந்து
வித்யா என்ற  பெண்ணாக
மாறிய அந்த வித்யாவுக்கு
சமூகம் வழங்கிய பெயர்
9...........9.............9.......................


நன்றி! “நான்வித்யா”என்ற நூலை எழுதிய  சரவணனாக இருந்து மாறிய  ,லிவிங். ஸ்மைல் வித்யாவுக்கு....

20 கருத்துகள்:

  1. இதென்ன இயற்கையின் சதியா ?ஆணாய் பிறந்தவன் எதற்கு பெண்ணாய் மாற வேண்டும் ?எதற்கு இந்த துன்பத்தை வரவழைத்துக் கொள்ளவேண்டும் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலோனர் இயற்கையின் சதி என்கிறார்கள்... நடப்புகளை பொருத்தவரை இதுவும் சமூகத்தின் சதி என்றே தோன்றச் செய்கிறது

      நீக்கு
  2. முழுக்க உண்மைதான் நண்பரே!! அவரவர் வீட்டில் இருந்தால் இப்படி சொல்ல மனது வருமா?? முட்டாள் சமுகம்!! முட்டாள் மனிதர்கள்!! முட்டாள் எண்ணங்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முட்டாள் சமுகம்!! முட்டாள் மனிதர்கள்!! முட்டாள் எண்ணங்கள்!! அதற்க்கும் நிலவும் சமூகம் தான் முதற் அடிப்படை காரணம் நண்பரே...

      நீக்கு
  3. இகழ்ச்சி செய்வதில் நம்சமூகம் இன்னும் திருந்தவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உன்னதம் இல்லைாத சமூகம் திருந்துவதற்கு மறுக்கிறது நண்பரே..........

      நீக்கு
  4. கேள்விப்பட்டிருக்கிறேன். படிக்க வேண்டிய லிஸ்ட்டில் உள்ள புத்தகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் ஒருநண்பர் சொல்லித்தான் தெரியும் நண்பரே......

      நீக்கு
  5. இதென்ன புதிய கண்டுபிடிப்பு.
    எனக்கோ தலையிடிக்கிறது.
    இதெல்லாம்
    எந்த நாட்டில நிகழ்கிறது?

    பதிலளிநீக்கு
  6. அந்த வலியை மிகச் சுருக்கமாக உணர வைத்து விட்டீர்கள்.ஆனால் மனவலிகள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த புத்தகத்தை படித்தால் மனவலிகளை தெரிந்த கொள்ளலாம் அய்யா...

      நீக்கு
  7. இது மாற்ற முடியாத விடயமாக போய் விட்டது நண்பரே இயற்கையை மாற்றுவது முடியாததே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கையை மனிதர்க்கு சாதகமாக மாற்றியதுதான் மனித குலத்தின் வெற்றி வரலாறு நண்பரே.....

      நீக்கு
  8. நான் கேள்விப்பட்டேன்,,,,, வலியின் கொடுமையை விட சமூகம் தரும் பட்டங்கள்,,,,,,,,,,,
    நன்றி வலிப்போக்கரே,

    பதிலளிநீக்கு
  9. இயற்கையின் சதியே...பெற்றோர்களின் ஆதரவு இருந்தால் எந்த ஒரு வலியும் இல்லை...அது இல்லாததால்தான் இத்தனை அவலங்கள்...புத்தகம் வாசிக்க வேண்டும்...சமூகத்தின் பார்வை இன்னும் மாற வேண்டும் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பெற்றோர்களுக்கும் சமூகத்தின் ஆதரவு கிடைக்கவில்லையே நண்பரே.........

      நீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....