ஞாயிறு 09 2015

பொய்களையே சரித்திரமாக்கிய பொய்யர் போய் சேர்ந்தார்

படம்-கலையரசன்.





Kalaiy Arasan

Shared publicly  -  17:27
சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்" பற்றிய பொய்களை பரப்புரை செய்த, மேற்குலக "சரித்திர" ஆசிரியர் காலமானார். ஆங்கில-அமெரிக்க பெற்றோருக்கு பிறந்த Robert Conquest, பனிப்போர் காலத்தில் டாலர்களை அள்ளிக் கொடுத்த, எஜமானர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக, "ஸ்டாலினின் பயங்கரம்" என்ற நூலை எழுதினார்.


"கம்யூனிச எதிர்ப்பாளர்களின் பைபிள்" என்று கருதப் படும் அந்த நூலை மேற்கோள் காட்டியே, இன்று வரையில் ஸ்டாலினுக்கு எதிரான அவதூறுகள் பரப்பப் பட்டு வருகின்றன. ஸ்டாலின் இருபது மில்லியன் பேரை கொலை செய்ததாக தெரிவிக்கப்படும் "புள்ளி விபரம்(?)", அந்த நூலில் இருந்து தான் பெறப் பட்டது. (அதற்கு எந்த ஆதாரமும் இல்லாமலே எழுதி இருந்தார்.)



திருஞான சம்பந்தர் தனது ஞானக்கண்ணால் கோயிலைப் பார்த்து தேவாரம் பாடியதைப் போல, இந்த "சரித்திர" ஆசிரியரும், சோவியத் யூனியனுக்கு செல்லாமலே, கற்பனையில் கண்ட காட்சிகளை புத்தமாக எழுதினார். அந்த ஆதாரமற்ற பொய்களை இன்றும் பலர் இரை மீட்டுக் கொண்டிருக்கிறார்கள்.



பிரச்சார நோக்கில், வேண்டுமென்றே எண்ணிக்கைகளை மிகைப் படுத்தி எழுதுவதாக, அப்போதே இவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. சோவியத் யூனியன் கலைக்கப் பட்ட பின்னர் வெளிச்சத்திற்கு வந்த இரகசிய ஆவணங்கள், இவரது "தகவல்கள்" யாவும் மிகைப் படுத்தல்கள் என்பதை நிரூபித்து இருந்தன.



மேற்குலகின் தீவிர முதலாளித்துவ ஆட்சியாளர்களான, ரொனால்ட் ரீகன், மார்க்கிரட் தாட்சர் போன்றோரால் கௌரவிக்கப் பட்டார். அண்மையில் கூட, இனப்படுகொளையாளி ஜோர்ஜ் புஷ் இவருக்கு விருது வழங்கி இருந்தார்.



மேற்குலக முதலாளிய எஜமானர்களின் அடியாளாக, வரலாறு என்ற பெயரில் புனைகதைகளை எழுதி வந்த Robert Conquest, தனது 98 வது வயதில் கலிபோர்னியாவில் காலமானார்.


நன்றி!    Kalaiy Arasan

28 கருத்துகள்:

  1. இப்படியும் இருக்கிறார்கள் என்பதைநினைக்கும்போது வேதனையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரைவிட நம்நாட்டிலும் பொய்யுரைக்கும் கில்லாடிகள் எண்ணிக்கையில் நிறையவே இருக்கிறார்கள் அய்யா...

      நீக்கு
  2. நம் நாட்டவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்..நண்பரே.... நம் நாட்டவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லைதான்.

      நீக்கு
  3. மேற்குலக முதலாளிய எஜமானர்களின் அடியாளாக, வரலாறு என்ற பெயரில் புனைகதைகளை எழுதி வந்த Robert Conquest, தனது 98 வது வயதில் கலிபோர்னியாவில் காலமானார்.
    ஆதாரமற்ற பொய்களை சொன்னாலும் அவரது இறப்பு என்பது மெய்தானே? தோழரே!
    த ம 3
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால்தான் நண்பரே... போய் சேர்ந்தார் என்று குறிப்பிட்டு உள்ளேன் நண்பரே....

      நீக்கு
  4. பதில்கள்
    1. எழுதிய சனியன் தொலைந்தாலும் எழுதி வைத்த பொய்யுரை ஒழியாமல் இருக்கிறதே நண்பரே....

      நீக்கு
  5. இவரைப்பற்றி இப்போதுதான் அறிகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. தளம் திறக்க அதிக நேரம் ஆகிறது... (waiting for tamilmanam.net) காரணம் தமிழ்மணம் வேலை செய்யவில்லை... சரியாகும் வரை நம் தளத்தில் சரி செய்யலாம்... வாசகர்களுக்கு பதிவை வாசிக்க, கருத்துரை இட உதவும்...

    வழிமுறை : http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Speed-Wisdom-1.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்துப்பார்த்தேன்... அவசர வேலை இருப்பதால்... உடன் செயல்பட முடியவில்லை..தங்கள் வழிகாட்டலுக்கு என்றென்றும் நன்றிகள் பல....

      நீக்கு
  7. பதில்கள்
    1. பல்வேறு கூலிகளில்...இவரு கைக்கூலியாக இருந்திருக்காரு.....

      நீக்கு
  8. உங்கள் மூலம்தான் இவரைப் பற்றி தெரிந்து கொள்கின்றோம் நண்பரே!

    பதிலளிநீக்கு
  9. பதில்கள்
    1. கைக்கூலிதான்..பொசுங்கி இருக்கிறது... பொய்மை இன்னும் பொசுங்கவில்லை நண்பரே.....

      நீக்கு
  10. கைக்கூலிகள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். ஆனால், ஒரே ஒரு வேறுபாடு, மற்ற நாடுகளில் இத்தகைய கைக்கூலிகளுக்கு ஆட்சியாளர்களிடமும் அரசியலாளர்களிடமும் மட்டுமே இருக்கிற நன்மதிப்பும் செல்வாக்கும் இந்தியாவில் மக்களிடமும் உள்ளது என்பதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே.... இந்திய மக்களும் இந்த பொய்யர்களிடம்தான் மயங்கி கிடக்கிறார்கள் ...

      நீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....