பக்கங்கள்

Tuesday, January 14, 2014

குழந்தையை கொன்றது ..வீட்டுக்காரியான பேய்தான்!????????????

அனுஜா~2.jpg ஐக் காட்டுகிறது

நடக்கும் வயதுள்ள பெண் குழந்தை ஒன்று.ஆங்கில புத்தாண்டு அன்று தீடிரென்று இறந்துவிட்டது.

குழந்தையின் தாய் இரவில் சீட்டு விளையாடிய களைப்பால் பகலில் தூங்கிவிட்டதால்,வீட்டிற்குள் விளையாடிய குழந்தை தவழந்து வந்து அருகில் இருந்த தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் வட்டையில்  தலை கீழாய் விழுந்து மூச்சு திணறி இறந்து விட்டது.

அருகிலுள்ள சிலர் பெரிய (அரசு) ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகச் சொல்லி 108க்கு போன் செய்ய சொன்னபோது சின்ன குழந்தையை அறுத்து சின்னா படுத்தி விடுவார்கள் என்ற காரணத்தை சொல்லி தவிர்க்கப்பட்டது.

இறந்த குழந்தையை புதைப்பதற்க்காக மாநகராட்சி மாயனத்தை அனுகியவர்கள், மருத்துவ சான்று இல்லாமல் புதைக்க முடியாது என்று மயான ஊழியர்கள் மறுத்து விட்டனர்.( அவர்கள் கேட்ட பணத்தை கொடுக்க முடியததால்)

அருகிலுள்ள தனியார் மருத்துவ மனையில் குழந்தை இறந்த காரணத்தை சொல்லி, இறந்தற்க்கான சான்று கேட்டபோது.அந்த மருத்துவரும் இறந்த சான்று தர மறுத்துவிட்டு பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினார்.

சிறு குழந்தை என்ற காரணத்தால் பெரிய ஆஸ்பத்திரிக்கு செல்வதை தவிர்ப்பதாக மீண்டும்  சொல்லப்பட்டது.

ஒருவழியாக அருகில் வசித்த  குழந்தையின் தாய்மாமன் முயற்சியில்.ரெண்டு ஆட்டோ பிடித்து தொலைவிலுள்ள மயானத்தில் குழந்தையை அடக்கம் செய்துவிட்டார்கள்.

இரண்டு நாள் கழித்து, குழந்தையின் தாயானவள் துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம். கதை சொன்னாள்.

அவள் குடியிருக்கும் வீட்டின் ஓனர் பொம்பளை.ஒரு வருடத்துக்கு முன் மண்ணணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டாள். அவள்தான் பேயாக வந்து தன் குழந்தையை கொன்றதாக சொன்னாள்.

 அந்த வீட்டுக்காரியும் இவளும் இணைபிரியாதவர்க்ள் ஆச்சே, எனப்து பற்றி தெரிந்தவர்கள்  “நீயும் அவளும் இணைபிரியாத தோழிகளே” அவள் எப்படி உன் குழந்தையை கொள்வாள் என்று கேட்டபோது.............

அதற்கும் ஒரு கதை சொன்னாள். அந்த பாசத்தால்தான் என்னை தூக்கதில் எழுந்திருக்கவிடாமல் அமுக்கவிட்டு என் குழந்தையை தண்ணிரீல் முக்கி கொண்று விட்டாள் என்றாள்.

இதற்கு ஆதரவாக.. செத்துப்போன வீட்டுக்காரியின் இன்னொரு வீட்டில் குடியிருந்து வந்த பெண்ணுக்கு குறை மாசத்திலேயே குழந்தை இறந்து பிறந்ததாக கூறினாள்.

துக்கம் விசாரிக்க வந்தவளில் ஒருத்தி கேட்டாள்,வீட்டுக்காரியின் மகளும்தான் குழந்தை பெத்து இருக்காளே! அவ குழந்ததை சாகலையே என்றாள்.

அதான் எனக்கும் தெரியல............ என்று மழுப்பினாள்.

ஒரு வாரம் கழித்து வீட்டுக்காரியின் மகளின் மூலம் கெட்டிக்காரியின் புளுகு வெளி வந்தது.

வீட்டுக்காரியின் மகள், குழந்தையின் தாய்.மற்றும் வீட்டுக்காரியின் மகளின்  சித்தி .இன்னொருவர் ஆக இவர்கள். இரவு முழுவதும் காசுக்கு சீட்டு விளையாடும் விளையாட்டு அதிகாலையில்தான முடிந்ததாம்.

அவளின் கனவனோ இரண்டு நாட்களுக்கு முன்னமே வெளியூரிருக்கு வேலை சென்று விட்டதால............  காலையில் வீட்டு வேலைகள் சிலவற்றை முடித்துவிட்டு படுத்து விட்டாள். தூங்கிக் கொண்டு  இருக்கும் பொழுது குழந்தை அழுததால்.............. குழந்தைக்கு சரமரியாக அடி கொடுத்துவிட்டு திரும்பவும் தூங்கிவிட்டாள்.

குழந்தையின் அழுகை சத்தம் கேட்டதால், வீட்டுக்காரியின் மகளானவள். அவள் வீட்டிற்க்குள் எட்டி பார்த்து இருக்கிறாள்.

அப்போது,குழந்தையின் அழுகையால் கோபமுற்ற தாயானவள். குழந்தையை தூக்கி தண்ணீர் நிரம்பியுள்ள பிளாஸ்டிக் வாழியில் தலைகீழாக முக்கு முக்கி தரையில் பொத்தென்று போட்டுவிட்டாள்.பிறகு  இதை கவனித்தக் கொண்டு இருந்த வீட்டுக்காரியின் மகளை வெளியே  அனுப்பிவிட்டு


பொத்தென்று போடப்பட்ட குழந்தையை பார்த்தாள். குழந்தை இறந்து விட்டது. தூக்கம் களைந்தவளாக, குழந்தை விளையாடும்போது  தண்ணீரில் முழ்கி மூச்சு திணறி இறந்துவிட்டதாக ஒப்பாரி வைத்துவிட்டாள்.

குழந்தை இறந்த செய்தி கேட்டு. நாலு வீடு தள்ளி குடியிருக்கும் தாயானவளின்  தம்பி, வந்து.“ இரவெல்லாம் சீட்டு விளையாடிததால் குழந்தையை கவனிக்காமல் கொன்றுவிட்டாய் என்று நாலு போடு போட்டான். அவனைத் தொடர்ந்து தாயானவளின் தாயும் அவளின் அக்காமார்களும் அடித்து துவைத்து திட்டினார்கள்.

உண்மை  இப்படி இருந்த போதிலும், தன் குற்றத்தை மறைக்க,........ தீ கொளுத்தியின் மகளானான தீயிட்டு செத்த வீட்டுக்காரிதான் பேயாக வந்து என் குழந்தையை கொன்றாள் என்று தான் சொல்லிக் கொண்டு திரிகிறாள்..

தெரியாதவர்களும் “நம்பிக்கை தானே வாழ்க்கை” என்ற ரீதியாக நம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

செத்தவர்களெல்லாம் பேயாக வந்து கொன்றால்......... எத்தனை பேர் உயிர் மிஞ்சுவார்கள். அப்படி செத்தவர்கள் பற்றி தெரிந்தவர்கள். ஒரு புள்ளி விபரம் சொல்லுங்களேன்.


No comments :

Post a Comment

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!