புதன் 15 2014

ஓட்டு மட்டுமே போடும் ஜனநாயக உரிமையால் என்ன பயன்.......???

படம் இன்று காம்











முதலாளிகளின் சுரண்டலை ஒத்துக்கொள் என்ற நிபந்தனையின் அடிப்படையில்  ஒட்டு போடும் மக்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்தான் முதலாளித்துவ ஜனநாயகத்தின்  உரிமைகள்.

இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தின்  உரிமைகளான..................

மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு ,எழுத்தறிவே இல்லாதபோது  எழுத்துரிமையால் என்ன பயன் ?

அந்த பாதி மக்கள் தொகையில் ஒரு சிலர் கல்வியறிவு பெற்று இருந்தாலும் இலட்சகணக்கில் முதலீடு செய்ய பணமின்றி பத்திரிக்கையோ, தொலைகாட்சியோ  நடத்த முடியாதபோது கருத்துரிமையால் என்ன பயன் ?

வேலை வாய்ப்பே இல்லாதபோது.இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை செய்யும் உரிமையால் என்ன பயன் ?

அன்றும் இன்றும் இருக்கும் தொழில்களே! நசிந்து, காணாமல் போய் கொண்டு இருக்கும் பொழுது எங்கு வேண்டுமானாலும் தொழில் நடத்தும் உரிமையால் என்ன பயன் ?

விலையில்லா அரிசி கிடைத்தும் உண்ண முடியாமல். பட்டினியால் சுருண்டு கிடப்பவருக்கு வாழ்வுரிமையால் என்ன பயன் ?

உணவு.தண்ணீர், மின்சாரம், சாலை,கல்வி, மருத்துவம்,வேலை போன்றவற்றை வழங்க முடியாத வாக்குரிமையால் என்ன பயன் ?

இந்த ஜனநாயகத்தில்....................

சொத்து சேர்ப்பவன்தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றவன். சொத்து உள்ள தனி நபரின் மகிழ்ச்சிதான் உயர்ந்த இலட்சியம். திறமையற்றவர்கள்தான் ஏழைகள். சொத்து உள்ளவன்தான் இந்த உலகத்தை ஆள்கிறான்.

இந்த  முதலாளித்துவ சொத்துடமையின் பரிணாம வளர்ச்சிதான். மறுகாலனியாக்கமான தனியார்மயம்,தாராளமயம், உலகமயம்.

இந்த முதலாளிகளின் ஜனநாயகத்தின் ஒரு வழிமுறைதான்  தேர்தல்.ஒரு பயனுமில்லாத இந்தத் தேர்தலில் காசு வாங்கியோ.வாங்காமலோ, தெரிந்தோ,தெரியாமலோ, எந்தக் கட்சிக்கும்  ஓட்டு போட்டாலும்

அது எல்லா அடக்கு முறையின் முழு வடிவமான பாசிசத்திற்கு ஓட்டு போட்டதாகவே பொருள்..................
                                                               
 நன்றி!  புதிய கலாச்சாரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...