திங்கள் 24 2014

தேர்தலில் பேரம் பேசுவது ஓட்டு கட்சிகளின் பிறப்புரிமை......

தேர்தல் திருவிழா வந்துவிட்டால் ஒவ்வொருஒட்டு சீட்டு கட்சிகளும் தங்கள் தங்கள் தகுதிக்கேற்பவோ, அல்லது தகுதிக்கு மீறியோ பேரத்தில் ஈடுபடும்  இது.,அந்த ஓட்டு கட்சிகள் தொடங்கிய காலத்திலிருந்தே அதன் சதையோடும் இரத்தத்தோடும் கலந்தே இருந்து வந்துள்ளது.

தேர்தல் திருவிழா பற்றி நாள் கிழமை போன்ற விபரங்கள் அளிக்கும் முன்னரே  ஒவ்வொரு கட்சியும் தாங்கள் இதுகாரும் சொல்லி வந்த கொள்கை வெங்காயம் கோட்பாடு.கட்டுப்பாடு எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு

அம்மணத்துடன்  பெரிய கட்சியாகட்டும் நேற்று முளைத்த சிறிய கட்சியாகட்டும் அவைகள் தொகுதி பேரத்தில்  நாளோரும் மேனியுமாக பொழுதொரு வண்ணமுமாக  ஈடுபட்டு வருவது கண்கொள்ளாக் காட்சியாக தெரிந்து வரும்

எனவே, தேர்தலில் பேரம் பேசுவது எல்லாவகை ஓட்டு சீட்டு கட்சிகளின் பிறப்புரிமையாகவே அன்றும் இன்றும் என்றும் இருந்து வந்திரக்கின்றன.

இப்படிப்பட்ட கட்சிகளை நம்பி மோசம் போவதும் வாக்காளர்களின் தொன்று தொட்டு வரும்  பிறப்புரிமையாகவும் இருந்து வருகின்றன.

இப்படியோரு தேர்தல், இப்படிபட்ட கட்சிகள், அப்படிப்பட்ட வாக்காளர்கள்.   இவர்களால்   அணைவருக்குமான நீதியும் நேர்மையும் வாழ்வும் கிடைக்காவா செய்யும்.??????????????

2 கருத்துகள்:

  1. அரசியல் கட்சிகள் கூட்டு சேரக்கூடாது ,ஒவ்வொரு கட்சியும் பெறும் விகிதாச்சார வாக்குகளின் அடிப்படையில் உறுப்பினர்கள் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவந்தால் தவிர கட்சிகளின் பேரத்தை ஒழிக்கமுடியாது !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. நம்ம அரசியல்கட்சிக.....அந்த சட்டத்திலேயும் சந்து பொந்துகள கண்டுபிடிச்சுடுவாங்க...பகவான்ஜீ.

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...