செவ்வாய் 25 2014

சவுதி மனிதரும் தமிழ்நாட்டு மனிதர்களும்......

தமிழ் மணத்துல சூடான இடுகையும் வாசகர்கள் ஓட்டு போட்டு பரிந்துரைத்த இடுகையும் ஆக இரண்டு பதிவுகளை படித்தேன்

முதல் பதிவில் சவுதியில்  இறை அச்சத்தால்   ஆட்டை விற்க  மறுத்த ஆடு மேய்ப்பரின் நேர்மையைப பாராட்டி நாற்பது இலட்சம் பணம் குவிகிறது என்று பதிவிட்டு இருந்தார்.

இரண்டாவது பதிவில் சவுதிக்கு ஏன்? போறீங்க ,தமிழ்நாட்டுல.....மதுரையைச் சேர்ந்த இருவர் தங்களிடம் கிடைத்த தங்க நகைகளை  போலீசிடம் ஒப்படைத்த நேர்மையைால் பாராட்டுகளும் வாழ்த்துகளும் கிடைப்பதாக பதிவிட்டு இருந்தார்.

இப்படியான இரண்டு பதிவுகளை படித்திலிருந்து எனக்கு தோன்றியவை,

அய்யா,
                ஆட்டை மேய்த்த சவுதிக்காரு..ஏன்? ஆட்டையை போட வில்லை என்றால்.... தன் முதலாளியே ஆட்களை நியமித்து தன்னை பரிசோதிக்கிறார் என்று சந்தேகம் வந்திருக்கும். அப்படியே ஆட்டை வித்து பணத்தை பெற்றுக் கொண்டால் இதுநாள் வரை நேர்மையாக இருந்தவிட்டு,பண சபலத்தால் ஆட்டை விற்று மாட்டிக்கிட்டால் என்ன தண்டனை என்பதும் அவருக்கு தெரிந்திருக்கிற காரணத்தால் வலியுறுத்தி கேட்டும் இறை அச்சத்தை பிரேயோகித்தார் ஆடு மேய்ப்பர்..... இந்த பதிவிலிருந்து தெரிவது என்னவென்றால் சவுதியில் நல்லவர்களே இல்லை என்பதுதான். அல்லா  இறை அச்சத்தின் காரணகாரியம் மூட பழக்கத்தை அறிந்து கொள்ள செங்கொடி,பறையோசை தளத்திற்கு சென்று படித்தால் அல்லாவின் புரட்டுகளையும் சவுதி மனிதர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்து தமிழ்நாட்டு மனிதர்கள் இருவர் தங்களிடம் கிடைத்த தங்கத்தை இறை அச்சம் இன்றி நேர்மையாக போலீசிடம் ஒப்படைத்த அவர்கள். வசதி வாய்ப்பும்,பணபலம்,ஆள்பலம் இருந்திருந்தால் நேர்மையாக நடந்திருக்க வாய்ப்பும் இருந்திருக்காது.

இந்த தங்க நகைகள், அரசியல் வாதியிடமோ,அமைச்சர்களிடமோ, தொழில் முறை கொள்ளையர்களிடமே்ா, ஊழல் பெருச்சாளியிடமோ, தொழில் அதிபர்களிடமோ கிடைத்திருந்தால்......தங்கத்தின் மதிப்பு அதிகமாக இருந்திருந்தால்  செய்யும் தொழிலிலோ,பேசும் வார்த்தையிலோ உண்மையாக நடக்காதவர்கள்.அவர்கள்  எந்த இறைவனுக்கும் பயப்படாமல் தங்களின் பொக்கிஷத்திலே சேர்த்திருப்பார்கள். அந்த தங்கத்தின் மதிப்பு குறைந்திருந்தால்   நேர்மையாளராக அவதரித்து இருப்பார்கள்.

தங்கமோ பணமோ வறியவர்களிடம் கிடைத்தால்.அதை அவர்கள் பதுக்கவோ, பயன்படுத்தவோ வழி தெரியாதவர்கள், பின்புலமும், பணபலமும் இல்லாதவர்கள். அப்படியே தப்பித்தவறி ஆசையால் உந்தப்பட்டு பதுக்கினால் இண்டர்போல் பெருமை வாய்ந்த போலீசிடம் மாட்டாமல் தப்பித்திருக்கவே முடியாது.அவர்களின் நடவடிக்கையே காட்டிக் கொடுத்துவிடும்.

ஆசையால் உந்தப்பட்டு,தெரியாத்தனமாக  சாதாரண  ஒரு திருட்டில் மாட்டிக் கொண்ட ஒருவனை, செய்யாத திருட்டையெல்லாம் சுமத்தி  அவனை வாழ்நாள் முழுவதும் விடாமல் துரத்தும் இண்டர்போல் பெருமை வாய்ந்த போலீசு.

இந்த இண்டர்போல் போலீசு.வசதி படைத்த திருடனையோ, ஊழலில் திளைக்கும் அதிகாரிகளையோ, ஆட்சியாளர்களேயோ, அவர்கள் இருக்கும் திசைகளின் பக்கம்கூட நெருங்குவதில்லை. அப்படியே நெருங்கினாலும்
 பவ்யமாக பல்லைக்காட்டி தலை வணங்கும். இந்த இண்டர்போல் போலீசின் அருமை பெருமைகளை தெரிந்து கொள்ள வினவு தளத்தை பாருங்கள்.

சவுதியில் ஆடு மேய்ப்பவருக்கும், தமிழ்நாட்டில் ஆட்டோ ஒட்டுபவர்க்கும்  பணபலம் ஆள்பலம் பின்புலமும்  இருந்திருந்தால், அவர்கள் நேர்மையாக நடந்திருக்க வாய்ப்பும் இருந்திருக்காது. அவை இல்லாததால்தான் அவர்கள் நமக்கு எதுக்கு  வம்பு என்று ஒதுங்கி கொண்டார்கள். இன்றைய சமூக சூழ்நிலையில் அதுதான் நிலைமை.


மதவாத ஆட்சியிலோ,போலி ஜனநாயக்திலோ ,நல்லவராக வாழ்வதும் நேர்மையாளராக இருப்பதும் அரிதிலும் அரிது..... பத்தில் ஒன்பது மோசம், மீதி.ஒன்றில் பாதி ரெண்டுங்கெட்டான். பாதியிலும் பாதி ஊமை, மீதி ,தான் நேர்மையாக இருப்பதோடு நேர்மைக்காக போராடுகிறார்கள். சிறு துளி பெருவெள்ளமாக...........











7 கருத்துகள்:

  1. நேர்மைக்கு மதச் சாயம் பூசுவது எந்த வகையிலும் நியாயம் ஆகாது !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. நேர்மைக்கு மதச் சாயம் பூசுவது எந்த வகையிலும் நியாயம் ஆகாது !
    த ம 1

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்று
    தங்கள் தளத்தை http://tamilsites.doomby.com/ என்ற Directory இல் இணைத்துத் தமிழுக்கு உதவுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. ஐயா நான் உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன், இதுவரை உங்கள் பதிவுகளை பார்த்தவரையில், இந்த உலகத்தில் எந்த நல்லதும் உங்கள் பார்வையில் படவில்லை என்பது தெரிகிறது. போக சவுதியில் நல்லவர்கள் இல்லை என்பது உங்கள் பார்வையில் இருந்து விட்டு போகட்டும், பிச்சை கிடைக்காத பிச்சைக்காரன் வீட்டுக்காரனை திட்டத்தான் செய்வான், அதையெல்லாம் ஒரு குறையாக எடுக்க முடியாது, ஆன்னல் குறிபிட்டமதத்தை ஏன் சாடுகிறீகள் என்பதுதான் புரியவில்லை, செங்கொடி என்பவை சொல்வதெல்லாம் உண்மையாகி விடாது, அவர் ஆர்ராச்சி பண்ணவில்லை கங்கணம் கட்டி வேலை செய்கிறார் உங்களைப் போல், அவராவது பரவாயில்லை ஒரு மதத்தை மட்டும் குறி வைக்கிறார். ஆனால் நீங்கள் உங்கள் பதிவுகளை திரும்பி பாருங்கள் எங்கையாவது ஒரு நல்ல விடயம் அல்லது நீங்கள் திருப்தி அடைந்ததாக ஒரு விடயம் இருக்கிறாதா, உங்கள் இயல்பு இதுவென்றால் உங்கள் குடும்பத்தினருக்கு கோயில் கட்டி கும்பிட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. எந்த மதமும் நேர்மையாக இருந்ததில்லை. அதற்கு எதற்கு சாயம் வேறு பூச வேண்டும் பகவான்ஜி

    பதிலளிநீக்கு
  6. Jeevalingam Kasirajalingam அப்படியே ! செய்கிறேன் நன்றி!

    பதிலளிநீக்கு
  7. அய்யா, என் பதிவகளை தொடர்ந்து படித்து வருவதற்கு நன்றி! இந்த உலகத்தில் அநியாயங்கள் பெரும் போர்வையாக மூடி இருக்கிறது. அதில் சிறு துளி அளவேயான நல்லதுகள் எம்பார்வைக்கு படுவதில்லை.......என் பதிவுகள் அணைத்தும் இட்டுகட்டபட்டவையோ கற்பனையோ எதுவுமில்லை...... என்ஆனுபவத்தில் ஏற்பட்ட வலிகளே...... குறிப்பிட்ட மதத்தை மட்டும் குறிப்பிடவில்லை. எல்லா மதமும் அப்படித்தான் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....