வியாழன் 27 2014

இருப்பவர்களுக்கு உடனேநடவடிக்கை..இல்லாதவர்களுக்கு ஏனோதானோ நடவடிக்கை..

“ ...... டிசிஎஸ்-ன் முதலாளியின் காரின் மீதோ.,அல்லது டிசிஎஸ் தொழிற்கூடத்தின் மீதோ... இன்னாரென்று தெரியாத போக்கிரிகள் கல்லெறிந்து விட்டு ஓடி விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம்

அடுத்த நிமிடத்தில் என்ன நடக்கும். பகுதி ஸ்டேசன் ஆய்வாளர்லிருந்து உள்ளுர் உயர் போலீசு அதிகாரி முதற்க்கொண்டு எல்லா வகையான உளவு பிரிவும் தாரை தப்பட்டையுடன் ஸ்பாட்டுக்கு வந்திருக்கும்.

வந்தவுடன் எறியப்பட்ட கல்லை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பிய கையோடு கல்லை எறிந்த கள்வனை உடனே பிடித்து இண்டர்போல் பெருமையை நிலை நாட்டியிருக்கும்.

ஆனால் டிசிஎஸ்-ல் வேலை செய்த உமா மகேஸ்வரி 13ந்தேதி காணாமல் போயி .அந்தத்தகவல் அவரது தந்தைக்கு தெரிந்து, அவர் வந்து பகுதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் ,உமாவின் உறவினர்கள் சிப்காட் சுற்றியுள்ள பகுதியை சோதனையிட  வற்புறுத்தியும் அசைந்து கொடுக்கவில்லை.

புகாரை பெற்ற இண்டர்போல் பெருமை பெற்ற போலீசு .“உம் மக எவன் கூடவாவது ஓடிப்போயிருப்பா..என்று தன் மேட்டிமை தனத்தை காட்டியிருக்கு.......

இந்த மாதிரியான பதிலை டிசிஎஸ் முதலாளி கொடுக்கும் புகாரில் தன் மேட்டினத்தை காட்டியிருக்குமா????

 காணமல் போன தகவல் தெரிந்து புகார் செய்தவுடனே ஓடிப்போயிருந்தாலும் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்காமல்  இடைப்பட்ட ஒரு வாரத்தில்  நடவடிக்கை எடுக்காமல் 22ந்தேதி உடலை கைப்பற்றி   இருக்கிறது.

இத்தகைய போலீசின் நடவடிக்கை “இருப்பவர்களுக்கு உடனே நடவடிக்கை, இல்லாதவர்களுக்கு ஏனோ தானோ நடவடிக்கை என்று இலட்சத்துசான்றுகளுடன்  உமா மகேஸ்வரியின் படு கொலையும்  அந்த எண்ணிக்கையில் சேறுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...