பக்கங்கள்

Wednesday, March 05, 2014

இருதலை கொள்ளி எறும்பாக தவிக்கும் மதுரை மக்கள்.!!!!!

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் கொசுக்களின் உற்பத்தியும் வளர்ச்சியும் அதிகரித்து உள்ளது.

அதிகரித்துள்ள அந்த கொசுக்களுக்கு ,சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த பெருமை உடையவர்கள் மதுரை மக்கள் என்ற அரும்பெருமைகளை உணராமல்..தெரியாமல்.........

மாலை 4 மணிக்கெல்லாம் தங்கள் பணியை.வேலையை காட்டத் தொடங்கி விடுகிறது. இதனால் தமிழ் வளர்த்த பெருமையுடைய  மதுரை மக்கள்.

மாலை 4மணிக்கே வீடுகளைின் கதவுகளையும் சன்னல்களையும் பூட்டிக் கொண்டு கொசுக்களின் வெலைகளிலிருந்து தற்காத்து கொள்ள வேண்டி இருக்கிறது.

கோடைகாலம் வருவதற்கு முன்பே கோடைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் தற்கப்புக்காக ஜன்னல்களை அடைத்து வைப்பதால்.காற்று தடுக்கப்பட்டு வெப்பம் அதிகரிக்கிறது.

காற்றுக்காக ஜன்னல்களை திறந்து வைத்தால் கொசுக்கள் தமிழ் வளர்த்த ,வளர்க்கும் மக்கள் என்றும் பாராமல் கடியோ, கடியென்று கடிக்கிறது.

இதனால் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த பெருமை உடைய மதுரை மக்கள் தமிழ் வளர்க்கும் பொது மக்கள் இருதலை கொள்ளி எறும்பாக தவியாய் தவிக்கிறார்கள்.

4 comments :

 1. கொசுக்களின் தலைநகராக மதுரை மாறி வருவது உண்மை !
  த ம 1

  ReplyDelete
 2. தலைநகரில்தானே! தலேவர்கள் இருப்பார்கள்.

  ReplyDelete
 3. சமீபத்தில் நான் மதுரையில் என் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தபோது தெருவில் நாய்களின் விரட்டல் அதிகம்...வீட்டில் இரவில் தூங்கும்போது கொசுத்தொல்லை...மங்கள்யான் போல் பறந்து வந்து தாக்கின....சாலமன் பாப்பையாவிடம்தான் கேட்க வேண்டும் மதுரையில் சிறந்தது கொசுவா? நாயா? என்று

  ReplyDelete
 4. கொசு நாயி இதுகளின் வாத பிரதிவாதகங்களை கேட்காமல் தீர்ப்பு கூற மாட்டார்!!! திரு.முருகேசன் அவர்களே!!!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com