பக்கங்கள்

Wednesday, May 14, 2014

புகைத்த சிகரெட்டை வைத்த இடம் மறந்த புகைக்க மறக்காதவர்

படம் தினமணிஅவர் உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது,எந்த முகாந்திரமும் இல்லாமல் அடித்த வாத்தியாரை திருப்பி அடித்ததால்...

அவர் படித்தது போதும் என்றும் அவர் படித்து முடித்துவிட்டார் என்றும்.அவருக்கு டீ.சி. கொடுத்து அனுப்பி விட்டார்கள்.

இதன் பயனாக இரண்டு வருடம் ஊர் சுற்றிக் கொண்டு இருந்தவர். ஊர் சுற்றுவதை நிறுத்தி வைத்துவிட்டு ஒரு அச்சகத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்.

இன்றைக்கு இருக்கிற செல்போன் பற்றி என்னவென்றே தெரியாத காலம் அது. தொல்லை தரும் தொலைபேசிதான் இருந்தது. ஒவ்வொரு எழுத்தாக எடுத்து அச்சுகோர்த்து.டெடில் மிஷினில் அச்சடித்தக் காலம். கம்யூட்டர் டைப்,பிலிம்,பிளேட்,பாலிமார், ஆப்செட் என்று வந்திடாத காலம். அதைப்பற்றி தெரியாத காலமும்கூட........

அப்படிப்ட்ட முன்னோர் காலத்தில் இருந்த ஒரு அச்சகத்தில் வேலை முடிந்து வேலை ஆட்கள் எல்லாம் சென்ற பிறகு. ,அவரும் அவரின் முதலாளியும் சேர்ந்து பைண்டிங்  வேலைகள் செய்வார்கள். அவர் கலிக்கோவுக்கு பசை தடவி தர,அவர் முதலாளி தைத்த பில்புக்குகளில் ஒட்டுவார்.

அவர் முதலாளிக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததால். சிகரெட்டை
புகைத்த வண்ணம் வேலை செய்வார். அன்று வழக்கம்போல் பைண்டிங் வேலை நடந்து கொண்டு இருக்கும்பொழுது......

சிகரெட்டை புகைப்பதும் ,புகையும்,சிகரெட்டை அருகில் வைத்துவிட்டு இழுத்த புகையை வாயி வழியாகவோ,மூக்கின் வழியாகவோ,சில நேரங்களில் இரண்டு வழியாகவோ புகையை விட்டபடி  பசை போட்ட கலிக்கோவை வாங்கி ஒட்டிக்கொண்டு இருந்தார்.

பாதி வேலை முடிந்திருந்த நேரத்தில் தொலைபேசி மணி அடித்தது. அவரை பசை போடுவதை நிறுத்தச் சொல்லிவிட்டு.வரவேற்பு அறையிலுள்ள மேஜை மேல் இருந்த தொலைப்பேசியில் பேசச் சென்றார்.முதலாளி.

தொலைப்பேசியில் பேசி முடித்துவிட்டு வந்தவர். மீண்டும் பசையை போடச் சொல்லி ஒட்ட ஆரம்பித்தவர். அவர் உட்கார்ந்திருந்த இடத்தை சுற்றும் முற்றும் பார்த்தார்.

பசை போட்டுக் கொண்டு இருந்தவரின் பெயரைச சொல்லியபடி “ சிகரெட்டை எங்க வைத்தேன்னு தெரியலயே என்று தேடினார்.

அவரும் பதறிப்போயி பசை போடும் வேலையை நிறுத்திவிட்டு,  முதலாளி புகைத்த சிகரெட்டை வைத்த இடம் மறந்ததை  முதலாளியுடன் சேர்ந்து தேடினார்.

அவர்கள் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றி பேப்பர் பண்டல்களும், அச்சடித்த பேப்பர்களும், அடுத்த பைண்டிங்க்காக அடுக்கி வைக்கப்பட்ட பேப்பர்களும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

ரெண்டு பேரும் உட்கார்ந்து இருந்த இடத்தைச் சுற்றி தே்டு தேடுன்னு தேடிப் பார்த்தும்  புகைத்த சிகரெட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. புகைத்த சிகரெட்டில் இருந்து புகை எதுவும் வருகிறதா என்று  ஆராய்ச்சி பார்த்தும் சிகரெட்டை கண்டுபிடிக்க முடியவில்லை,

 கடைசியாகஅவரின் முதலாளி சோர்ந்து போயி வரவேற்பு மேஜையில் போய் அமர்ந்தவுடன் அவருக்கு குரல் கொடுத்தார்.

முதலாளிக்கு அருகில் போய் பார்த்தபோது தொலைபேசிக்கு அருகில்முதலாளி புகைத்த சிகரெட் முழுவதும் எரிந்து சாம்பலாக கிடந்தது.

அது அவரின்  முதலாளிக்கு ரெம்பவும் அறுதலாகவும் நிம்மதியாகவும் இருந்தது.

தொலைபேசியில் அழைப்பு வந்தவுடன்  சிகரெட்டை வாயில் புகைத்தபடியே  சென்றவர். பேச்சு வாக்கில் புகைத்த சிகரெட்டை தொலைபேசிக்கு அருகிலே வைத்துவிட்டு வந்தது. பிற்பாடுதான் யோசனையில் தெரிந்தது. பதற்றத்தில் இருவருக்குமே தொலைபேசியில் பேசச் சென்றது. நிணைவில் இல்லை.

நல்ல வேளையாக முதலாளியும்  தொழிலாளியும் ஒரு கண்டத்திலிருந்து தப்பித்தார்கள்.

அதிலிருந்து  அவரின் முதலாளி புகைப்பதை மறக்காமல் இருந்தாலும் அச்சகத்திற்குள் புகைப்பதை மறந்துவிட்டார்.

 தொழிலாளியான அவர் அப்பேயிலிருந்து இப்பே வரைக்கும் புகைப்பதே இல்லை...............

4 comments :

 1. அந்த தொழிலாளி நீங்கள்தானே ?
  த ம 1

  ReplyDelete
 2. கண்டு போட்டுடீங்களே! தலைவா......!!

  ReplyDelete
 3. ஆமாமா...அவரு மகா கில்லாடிதான் சார்,

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com