பக்கங்கள்

Thursday, May 15, 2014

வாரத்தில் ஒருநாள் சிக்கனமாக இருந்தால்..இந்தியா கருமாதி நடத்தும் தேசமாக மாறுவதை தடுக்க முடியுமா???

படம்.yogam.unblog.இந்தியா என்றொரு தேசம் இன்னும் கொஞ்ச காலங்களில் வல்லராசக  மாறுகிறதோ இல்லையோ... தனியார்மயம்.தாராளமயம் உலகமயத்தால் அதாவது மறு காலனியாதிக்கத்தால் சீக்கிரமே கருமாதி நடத்தும் தேசமாக மாறப்போகிறது.

தனியார் மயத்தால்.தாராளமயத்தால் கல்வி உரிமையும் மறுக்கப்பட்டது. வேலைவா ய்ப்பும் ஒழிக்கப்பட்டது. விலைவாசியும் உயர்த்தப்பட்டது. மருத்துவவசதியும் துண்டிக்கப்பட்டது. விவசாயமும் அழிக்கப்பட்டது.

பொதுப் போக்குவரத்தும் குறைக்கப்பட்டது. இந்த மயங்களின்
புன்னியத்தால் இயற்கையான மழையும் விரட்டப்பட்டது.

சாலைகளில் இரு சக்கர,மூன்று.நாலு சக்கர வாகனத்தின் பெருக்கத்தையும் செல்போன் , கணனியின் ஆதிக்கத்தையும் கொண்டும் இந்திய முதலாளிகளின் லாப வளர்ச்சியைக் கொண்டே இந்தியா வல்லரசாக போகிறது என்று பீத்திக் கொள்ளும் ஊடகங்களும் உள் நாட்டுமுதலாளிகளையும்  வெளிநாட்டு முதலாளிகளையும் பாதுகாக்கும் அரசுகளும் இந்தியா வல்லரசாகிறது என்று பறை சாற்றி வருகின்றன.

இந்த நிலையில். அந்நிய  டலர் மதிப்புக்கு ஈடாக இல்லாமல் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தும் இந்தியாவின் சுய சார்பான பொருளாதாரத்தை அழித்துவிட்டு இறக்ககுமதியை அதிகரித்துவிட்டன.

இயற்கையும் தன் பங்குக்கு தனியார்மயம் தாராளமயம் உலக மயத்தின் வளர்ச்சியால் வறட்சியையும்.புவி வெப்பமாயவாதையும் அதிகரித்துவிட்டது.

உலக வெப்பமயமாவதை குறைக்கும் வகையாக..ஒருநாளில் உலகமே மின்சார பயன் அனைத்தையும் தவிர்ப்பதின் மூலமாக ஒலக வெப்பமயமாவதை தடுக்கு முடியும் என்பது மாதிரி,

இந்தியாவில்வாரத்துக்குஒருநாள்.பெட்ரோல்,டீசல்,மின்சாரம்,சம்பந்தபட்டவைகளுக்கு ஓய்வு கொடுத்தால்...ரூபாயின் மதிப்பு உயர்ந்து விடாது.??? ரூபாயின் மதிப்பு உயர்ந்ததின் பயனாக  ஏறின விலைவாசிகள்  குறைந்து விடாது..??வேலை வாய்ப்பும் பெருகிவிடாது.

வாரத்தில் ஒருநாளோ, மாதத்தில் நான்கு நாளோ. அல்லது மாதம் முழுக்கவோ பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டாலும்.சரி.தனியார்மயம் தாராளமயமான மறுகாலனியாதிக்கத்தை ஒழிக்காமல்  மந்திரத்தாலோ,தந்திரத்தாலோ  வேறு எந்த வழிகளினாலும் இந்தியா என்றொரு நாடு கருமாதி நடத்துவதையோ கருமாதிஆவதையோ தடுக்கவே முடியாது..........

5 comments :


 1. உண்மை, உண்மை 100 க்கு 100 உண்மை நண்பா,,,,
  Killergee
  www.killergee.blogspot.com

  ReplyDelete
 2. உண்மை, உண்மை 100க்கு100 உண்மை நண்பா......
  Killergee
  www.killergee.blogspot.com

  ReplyDelete
 3. அப்படி எல்லாம் அதிசயம் நடக்குமானால் மக்கள் போராட்டமே தேவை இல்லையே ?
  த ம 1

  ReplyDelete
 4. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!திரு. killergee அவர்களே!!

  ReplyDelete
 5. போராடியும் லத்தி அடியும் சிறை கொட்டடியும்தானே கிடைக்கிறது.ஜீ

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com