சனி 17 2014

சூது விளையாட்டில் தோற்றுப்போனவர்கள்......

தேர்தல் முடிவு
படம் .வினவு













பாரதம் என்ற தேசத்திலே அந்நாட்டின் மக்கள்  ஒரு பெருச்சாளியை தேர்ந்தெடுத்தார்கள. அந்தப் பெருச்சாளியோ....வீட்டைக் கெடுத்தது பத்தாதென்று நாட்டையே கெடுத்தது.

 பெருச்சாளியின் தொல்லையை பொறுக்க மாட்டாமல் .அந்தப் பெருச்சாளிக்கு மாற்றாக  ஒரு குரங்கை தேர்ந்தெடுத்தார்கள்.

ஏற்கனவே, குரங்கின் சேட்டையை கண்டவர்கள்தான் அதற்கு மாற்றாக பெருச்சாளியை தெர்ந்தெடுத்தார்கள். இப்போது பெருச்சாளியின் தொல்லை தாங்கமாட்டாமல் குரங்கை தேர்தெடுத்துவிட்டார்கள்.

இனி என்ன? குரங்கு தன் செட்டையை விட்ட இடத்திலிருந்து தொடங்குமா..அல்லது முதலிருந்து தொடங்குமா என்பது குரங்கின் மூதாதையர்க்கே வெளிச்சம். இந்த விளையாட்டில் இப்ப தோற்றது பெருச்சாளியோ,முன்பு தோற்றது...குரங்கோ அல்ல

பெருச்சாளியை விட்டால் குரங்கு, குரங்கை விட்டால் பெருச்சாளி இந்த சூது வியைாட்டில்  ஒவ்வொரு தடவையும் தோற்றுப் போனவர்கள் அந்நாட்டு வாக்காளர்களே.

2 கருத்துகள்:

  1. ஒரே ஆளிடம் ஏமாறாமல் ,வேறு ஒரு ஆளிடம் ஏமாறுவதில்தான் இவ்வளவு ஆனந்தம் இந்த வாக்காளர்களுக்கு?
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. ஏமாறுவதில் ஆனந்தம் கொள்வதில் முதலிடத்தை பிடித்தவர்கள்.இந்திய வாக்காளர்கள்தான்.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...