பக்கங்கள்

Tuesday, May 20, 2014

போகுமிடத்தை மறந்த அறிவி(ய)லார்........


திரு.ஆல்பர்ட ஐன்ஸ்டீன்ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்த பயணிகளிடம் ரயில் சீட்டு பரிசோதகர் பயண சீட்டை பரிசோதனை செய்து கொண்டு வந்தார்.

பரிசோதகர் ஒவ்வொரு பெட்டியாக பரிசோதித்துக் கொண்டு வரும்பொழுது ஒரு பெட்டியிலுள்ள ஒரு பயணி. தன் பயணசீட்டை தன் மேல் சட்டைப் பையிலும், கால்சட்டைப் பையிலும் தேடிக்கொண்டு இருந்தார்.

அந்தப் பயணி .பயணசீட்டை தேடிக் கொண்டு இருப்பதை கவனித்த ரயில் பயணசீட்டு பரிசோதகர். அந்த பயணியின் அருகில் வந்து.“நீங்கள் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்ய மாட்டீர்கள் என்பது எனக்கும் உங்களோடு பயணம் செய்து கொண்டு இருக்கும் பயணிகளுக்கும் நன்றாகவேத் தெரியும். என்று சொல்லிவிட்டு அந்தப் பயணிடம் பயணச்சீட்டை கேட்காமல் அடுத்தப் பெட்டிக்கு சென்றுவிட்டார்.

பயணசீட்டு பரிசோதகர் அடுத்த பெட்டிக்கு சென்ற பிறகும் அந்தப் பயணி தன்னுடைய பயணசீட்டை விடாமல் தேடிக் கொண்டு இருந்தார்.

அருகில் இருந்த பயணி ஒருவர்.“ நீங்கள் பயணசீட்டு வாங்கியிருப்பது அவருக்கு தெரியும் என்று சொல்லிவிட்டு அடுத்த பெட்டிக்கு போய்விட்டாரே” பின்ன எதுக்கு பயணசீட்டை தேடுகிறீர்கள் என்று கேட்டார்.

பயணசீட்டை விடாமல் தேடிக் கொண்டு இருந்த அந்தப் பயணியோ,அந்தப் பயணிடம் சொன்னார்.

நான்,பயணசீட்டு வாங்கியது உண்மைதான். எங்கே போவதற்கு வாங்கினேன் என்று தெரியவில்லை.. போகுமிடத்தை தெரிந்து கொள்வதற்குத்தான் அந்தப் பயணசீட்டைதேடுகிறேன் என்றார். அந்தப்பயணி.

போகுமிடத்தை மறந்த அந்தப்பயணிதான்..

மதங்களையும் கடவுள்களையும் அருங்காட்சியகத்துக்கு மட்டுமே அனுப்ப வேண்டும்  என்று தன் கண்டுபிடிப்பால்  வலியுறுத்திய  ஆல்பர்ட்ஐன்ஸ்டீன் என்ற அறிவியலார்.

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com