பக்கங்கள்

Wednesday, May 21, 2014

அந்த காலத்து சாதனை தியேட்டரும் சாதனை படமும்.

52 ஆயிரம் சதுர அடி கொண்டதும் 2,563 இருக்கைகள் கொண்டதும் அக்கம் பக்க கிராமத்திலிருந்து வண்டி கட்டிக் கொண்டு வந்த பெருமை உடையதும். ஹவுஸ்புல் போர்டே மாட்டாத அதிசியமுள்ளதுமான இந்தியாவின் பெரிய என்ற பெருமையை தாண்டி ஆசியாவின் பெரிய என்ற பெருமையை பெற்றது


படம்poonaikutti.blogspot.comஆசியாவிலே பெரிய தியேட்டரான இது கட்டி முடிக்கப்பட்டு முதன்முதலாக தீபாவளியன்று திறப்பு விழா வைத்து.அந்தத் திறப்பு விழா அன்றே. தெய்வங்களை வணங்கி அதனைப்போற்றும் விதமாக புராணபடங்களை வெளியிடாமல்.

கடவுளை நிந்தித்து, சாதியத்தை எதிர்த்த ஒரு சமூகப்படத்தை,அந்தச சமூகப்படத்தின் வசனங்களை கேள்விப்பட்டு, அன்று  தமிழ்நாட்டில் முதலமைச்சராகஇருந்த, குலக்கல்வியினை கொண்டு வந்த ராஜாஜி என்பவரை எதிர்த்தும் வெளியிடப்பட்டது.

17.10.1952ல் தீபாவளி வெளியீடாகவும் ஆசியாவின் பெரிய தியேட்டரின் முதல் திரைப்படமாகவும்.தமிழ்சினிமாவின் தலை எழுத்தை புரட்டி போட்ட படமாகவும் இருந்தது.

அந்த திரையரங்கத்தின் முதல் படமே நூறு நாட்களுக்கு மேலாக ஓடி சாதனை புரிந்தது.

முதன்முதலாக கடவுளை  நிந்தித்த படமாக வெளியிட்டு “ஆசியாவின் தங்கம்  என்ற பெருமையை பெற்ற.. அந்தத் தியேட்டரில் வெளியான படம்தான் “பராசக்தி”

2 comments :

  1. அண்ணே... தூறல் நின்னுபோச்சு என்ற படத்திற்கு பல நாட்கள் ஹவுஸ்புல் போர்ட் மாட்டினார்கள். அதுவும் நூறாவது நாள் அன்று சுத்தமாக உள்ளே நுழையமுடியவில்லை.

    …எங்கள் தந்தை இந்த தங்கம் தியேட்டடரைப் பத்தி பெருமையாக எப்போதும் கூறுவார்.

    ReplyDelete
  2. எல்லாரும் பெருமையா பேசியதை கேட்டுதான் இந்த பதிவ போட்டேன் அண்ணா.... அவுக... தூறல் நின்னு போச்சு படத்திற்கு ஹவுஸ்புல் போர்டு மாட்டியதை பத்தி சொல்லவில்லை. இதையும் அந்த தியேட்டரின் சாதனை சேர்த்துக் கொள்ளலாம். தகவலுக்கு நன்றி!

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com