வியாழன் 12 2014

இந்த வழியிலும் வசூலை அள்ளிக் குவிக்கலாம்.




கோச்சடையான் படத்தை அதிக திரையரங்குகளில் ஓரே சமயத்தில் திரையிட்டு, ரசிகமாமணிகளின் கண்களில் மிளகாய் பொடியை தூவி
விட்டு, அந்த ரசிக கண்மணிகள் கண்களை கசக்கி முழிப்பதற்கள் வசூலை வாரி வளச்சு அள்ளுவது இன்றைய மார்க்கெட் முறை.

இந்த மார்க்கெட் முறையை ஒதுக்கி வைத்துவிட்டு,  ஆந்திராவின் வாரிசு நடிகர் ஒருவர். இதற்கு எதிரான் மார்க்கெட் முறையை பின்பற்றி வசூலை குவித்துவிட்டார்.

அப்பன்.மகன்.பேரன் மூவரும் சேர்ந்து நடித்த குடும்ப படத்தை அந்த நடிகர்  வேண்டுமென்றே குறைந்த திரையரங்குகளில் திரையிட்டார். இந்தப் படத்துத்துக்கு ஆந்திரா முழுவதும் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும் அந்த நடிகர்  எதற்கும் அசைந்து கொடுக்காமல் பொறுமை காத்தார்.

அந்த பொறுமைக்கு பிறகு, படம் ஒளியைவிட வேகமாக ஹிட்டாகியது.
 பொறுத்தார் பூமி ஆள்வார் என்று சொல்வது மாதிரி, தியேட்டர் அதிபர்கள்  அந்த நடிகரை மொய்த்தார்கள், அய்யா.சொன்ன விலைக்கு பேரம் பேசாமல் படத்தை வாங்கி வெளியிட்டார்கள்.

படமும் வெற்றி பெற்று வசூலை குவித்து கொண்டு இருக்கிறது.

ஐந்து மாதங்களில் 130 படங்கள் தமிழிலில் வெளியான எந்தப் படமும் குறிப்பிடத்தக்க எந்த வெற்றியையும் அடையவில்லை.  அதனால் கணவு தொழிற்சாலை  முதலாளிகள், எப்படி ரசிக மாமணிகள் மீது மிளகாய் பொடியை துாவி வசூலை அள்ளி குவிக்கலாம் என்று  அடுத்த ரவுண்டில் யோசிப்பார்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...