பக்கங்கள்

Saturday, July 04, 2015

…ஆதலினால் காதல் செய்!

காதல் கவிதை
படம்-வி-னவு

தோழி!
*திவ்யாவைப் போல்
தெளிவாக காதலி.
காதல்தான் விருப்பமெனில்
தாழ்த்தப்பட்டோரை
தயங்காமல் காதலி!
வர்க்கம் பார்த்துதான்
வருகிறது காதலெனினும்,
வர்ணம் பொடிபட
எப்போதாவது துடிக்கும் இதயத்தை
நழுவாமல் ஆதரி!
சேரிக்கு
வாழ்க்கைப்பட்டால்தான் தெரியும்
உன் சொந்த சாதி அசிங்கம்.
சாதிக்கு
எதிராய் போனால்தான் புரியும்
தாய், தகப்பன் பாசம்
கருப்பையை அடக்கி நாறும்
சாதியை விட்டொழி!
சைவப்பிள்ளையும், புதிர வண்ணாரும்
இணையேற்றால்
ஒன்றும், கீரிப்பிள்ளை பிறப்பதில்லை,
ஒழுங்கான மனிதமுகம் மலருமங்கே!
வன்னியப்பெண்ணும், பறையரும்
வாழ்க்கைத் துணையானால்
காடுவெட்டி குருவுக்கு வேண்டுமானால்
மூலம் தள்ளிப் போகலாம்,
ராமதாசு வேண்டுமானால்
நாக்கு வெந்து காயலாம்.
நாடு ஒன்றும் மூழ்கிடாது,
சாதி ஒழியும்படி சமத்துவமாய் காதலி!
கக்கத்தில் பையை வைத்து
பக்கத்து ஊரையெல்லாம்
கந்துக்கு தரிசாக்கி…
அந்நிய செலாவணிக்காக
நொய்யலையும், பவானியையும்
சாயப்பட்டைறையில் கருக்கி…
காசுக்காரன் அழித்திட்ட
‘கவுண்டர் வாழ்க்கை’
நீ… அருந்ததியரைக் காதலித்தால்
அழியுமென்றால்!
அழியட்டும் சாதிவெறி!
பெண்ணே! சமூகம் அழகாக
சக்கிலியரைக் காதலி!
அந்நிய மூலதனத்தோடு
அனைத்து சாதியும் கலப்பு,
அதில் சில்லரை பொறுக்கிக் கொண்டே
சிலருக்கு சாதியோட கொழுப்பு.
பன்னாட்டுக் கம்பெனி
பனிரெண்டு மணிநேரம்
கையை பிடித்து இழுக்கையில்…
அமெரிக்க ‘டேட்டிங்’
ஆளைச் சுற்றி வளைக்கையில்..
அரிவாள் தூக்காத சாதி,
நீ சாதி மாறி காதலித்தால்
ஆர்ப்பரிக்குமென்றால்,
தூக்கிய அரிவாள் துருபிடிக்க
துணை கொள் தோழி!
தாழ்த்தப்பட்டோரையே!
– துரை.சண்முகம்.
(திவ்யா ; தர்மபுரி நத்தம் காலனியில் தாழ்த்தப்பட்ட இளைஞரை காதலித்து மணமுடித்த வன்னியப் பெண்)
______________________________________________________________________________________________________________

14 comments :

 1. துரை.சண்முகம் அன்று எழுதியது இன்றும் பொருந்தும் என்பதற்கு சாட்சி கோகுல்ராஜ் கொலை !

  ReplyDelete
  Replies
  1. அதனால்தான் பதிவிட்டேன் நண்பரே...

   Delete
 2. Replies
  1. சாதி வெறியர்கள் இருக்கும்வரை சாதிவெறி அழியாது நண்பரே.....

   Delete
 3. படத்தில் ஜாதி பாதுகாப்பு பேரவை ஒன்று புலிபடம் போட்டு தனிஅரசு என்று எழுதி இருக்கிறது. இனி ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு தனிஅரசு அமைக்க போகிறர்களோ!
  காதல் திருமணங்களையிட்டு இவர்கள் கலங்குகிறார்கள் என்றால் காதல் திருமணங்கள் ஜாதிவெறியை அழிக்க ஆரம்பித்து விடும் என்பதால்.

  ReplyDelete
 4. தனக்கு கீழ் உள்ள உயிர்களை அடித்து சாப்பிடும் புலியின் குணம்போல அவர்கள் இருப்பதாக வெளிக் காட்டிக் கொள்வதோடு அவர்கள் மட்டும்தான் தமிழர்கள்... மற்றவர்கள் டம்ளர்கள் என்று தெரிவிக்கிறார்கள்..என்றஅர்த்தம் தான் எனக்கு தெரிகிறது.

  ReplyDelete
 5. கவிதையை மிகவும் ரசித்தோம்...

  ஜாதி வெறி என்று தணியுமோ எங்கள் தளத்திலும் அதைத்தான் இப்போது எழுதியுள்ளோம்...ஒரு சினிமாவுடன் தொடர்புபடுத்தி....

  உங்கள் இறுதியான பதில் அருமை....

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்துரைக்கு நன்றியும்.தங்களின் பதிவுக்கு வாழ்த்துக்களும்.....

   Delete
 6. அருமை. துறை. சண்முகம் அருமையாக எழுதி இருக்கிறார்.

  ReplyDelete
  Replies
  1. தோழர் துரை. சண்முகத்திற்கு தங்களின் வாழ்த்துக்கள் ! உரித்தாகட்டும். நன்றி!

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com