செவ்வாய் 01 2014

சாப்பிடுவதற்கு முன் என்ன செய்வீர்கள் அப்பா...



படம்.

தமிழ் வழியில் ஒன்னாம்
வகுப்பு படிக்கும் சிறுவர்
ஒருவர் தன் தந்தையிடம்
கேட்டார்............

தாங்கள் சாப்பிடுவதற்கு
முன் என்ன செய்வீர்
அப்பா என்று...............

சிறுவரின் தந்தையோ
தன் மண்டைக்குள்.
பூசனம் படிந்திருந்த
புத்தியில் சொன்னார்.

சாப்பிடுவதற்கு முன்
இறைவனை துதிப்பேன்
 மகனே என்று.................

தந்தை சொன்ன பதிலை
கேட்ட சிறுவரோ உதட்டை
பிதுக்கிவிட்டு............

திரும்பவும் அவரிடம்
கேட்டார்.................

சாப்பிட்ட பின்பு
என்ன செய்வீர்கள்
 அப்பா என்று..............

திரும்பவும் சொன்னார்
சாப்பிட்டவுடன் எழுந்து
விடுவேன் மகனே  என்று.......

உங்களுக்கு எதுவுமே
தெரியவில்லை அப்பா
என்றார் சிறுவர்.....

 பிறகு தந்தையிடம்
சிறுவர் சொன்னார்.

சாப்பிடுவதற்கு முன்
கைகைளை நன்றாக
கழுவ வேண்டும்
அப்பா..............

சாப்பிட்டப்பின்
வாயையும் பற்களையும்
சுத்தம் செய்ய வேண்டும்
 அப்பா என்று......................

தனயனின் தந்தை
என்னைப் பார்த்தார்

தாங்கள் மறந்து
விட்டதை தனயன்
நினைவு படுத்துகிறார்
என்றேன்.நான்.

6 கருத்துகள்:


  1. தற்கால பிள்ளைகள் எல்லோருமே இப்படித்தான் நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. இப்படித்தான் சிலர் திருப்புகழை பாட பாட வாய் மணக்கும்னு பாடிக்கிட்டு திரியிறாங்க ,,கவுண்ட மணி கேட்டது நினைவுக்கு வருகிறது 'பிறகு எதுக்குடா பல்லு தேய்க்றீங்க ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  3. சாபிடும் முன்பு பல்லை தேய்க்கணும் ( தூங்கி எழுந்தவுடன்) சாப்பிட்ட பிறகு தூங்கணும் என்று அந்த தகப்பன் சொல்லாமல் இருந்ததே பெரிய விஷயம். காரணம் இப்படியும் சில பெற்றோர்கள் இருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  4. எப்படி கில்லர்ஜீ.. இந்தக்காலத்து பிள்ளைகள் “உங்களுக்கு ஒன்னுமே தெரியல அப்பா”ன்னு சொல்லுறதா....??

    பதிலளிநீக்கு
  5. எனக்கு இப்பத்தான் தெரியுது பகவான் ஜீ

    பதிலளிநீக்கு
  6. பள்ளிக்கு சென்ற தனயன் பள்ளியில் சொல்லிதை தந்தைக்கு நிணைவு படுத்துகிறார் “மதுரைத்தமிழர் அவர்களே!!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்