செவ்வாய் 15 2014

நிழலை நிஜமென்று காட்டுவது சினிமாக்காரர்களின் குற்றம்.

படம்.nammatamilcinema.com



காக்கி சட்டை படத்தில் வில்லனாக நடித்த சத்யராசின் வசனத்தையே படத்தின் தலைப்பாக வைத்து “தகடு தகடு”என்ற பெயரில் தயாரித்த படத்தின் பாடல் வெளியீட்டில்

பாடல்களை பெற்றுக் கொண்ட சினிமாக்காரர்களின் தமிழன்ஆன நடிகர் பேசியபோது  சினிமாவை அழிக்கும் சக்தியாக திருட்டு வி.சி.டி வளர்ந்து இருக்கிறது. தகடு தகடு என்ற படமும் வி.சி.டியை பற்றியதுதான்.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதுபோல் திருட்டு வி.சி.டியையும் ஒழிக்க முடியாது. ஏனென்றால் இந்தக் குற்றத்தில் மக்களும் ஈடுபடுகிறார்கள் என்றார்.

ஆக.......அவரின் கூற்று படி......பார்த்தால்.............
.
 மக்களின் பொழுது போக்கை காசு பறிக்கும் தொழிலாக மாற்றியது .அந்த மக்களின் சிந்தனையை மழுங்கடித்தது ,நிழலை நிஜமென்று நம்ப வைத்தது போன்றவை சினிமாக்காரர்களின் குற்றம்.

இந்த குற்றத்தை செய்யும்   சினிமாக்காரர்கள் திருந்தாதவரை. நிழலை நிஜமென்று நம்பவதும் ஒழியாது.  நிழலைக்காட்டி காசு பறிப்பதும் ஓயாது.

4 கருத்துகள்:


  1. நம்ம ஏமாந்தால்தானே,,, அவர்கள் வாழமுடியும்.

    பதிலளிநீக்கு
  2. பயனுள்ள கருத்து
    மக்களின் ஆதரவு இல்லையெனின்
    நடிகராகி நிலைக்க முடியாதவர்
    மக்களைக் குற்றவாளி ஆக்கலாமா

    பதிலளிநீக்கு
  3. இப்படியும் கூறலாம் ஜீ ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  4. ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டுல நுழைந்த மாதிரியல இருக்கிறது. இந்த நடிகர்களின் பேச்சு திரு Yarlpavanan Kasirajalingam.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...