சனி 26 2014

கலெக்டர் அலுவலகம் பரபரப்பாய் செயல்பட்டது..!!!

படம்--ta.wikipedia.org


என்னாது!! கலெக்டர் அலுவலகம் பரபரப்பாய் செயல்பட்டதா?? நிஜமாகவா?? சத்தியமாய்தான் சொல்றீங்களா?? என்று  ஆச்சரியமாய் கேட்பவர்களுக்கு.....

மதுரை கலெக்டர்ர் அலுவலகத்தில், மக்கள் தொடர்பு அதிகாரி அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்துக்கு எதிரே,  சென்னை  பதிவு எண்ணைக் கொணட ஒரு வெள்ளை நிறக்கார் ஒன்று கடந்த ஐந்து நாட்களாக நின்று கொண்டு இருந்தது.

கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து ஒரு வருசம் ஆகியும் .மனுவைப்பற்றி கேட்டு நடையாய் நடந்தும் கண்டு கொள்ளாத, அல்லது கண்டும் கண் தெரியாத அதிகாரிகளுக்கு, ஐந்து நாட்களாக நின்று கொண்டு இருந்த கார் அவர்களின் கண்ணில் பட்டு உறுத்தோ உறுத்தென்று உறுத்தியது

அந்த மர்ம காரைப்பற்றி சம்பந்தபட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 போனுக்கு மேல் போன் செய்தாலும் சாதரணமானவர்களுக்கு  உதவிக்கு வராத போலீசு, விரைந்து வந்தது. காரை  சோதனை செய்தது. அது பற்றி உயர் போலீசுக்கு தகவல் தெரிவித்தது.

காரை நிறுத்தி இருப்பது கலெக்டர் அலுவலகமாச்சே.......... அலுவலகமே பரபரப்பாய்  செயல்பட்டது உடனே வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

காருக்குள்  வெடிக்கக்கூடிய வெடிபொருள்கள் ஏதும் இல்லை என்று தெரிய வந்தது.

காரின் பதிவு எண்ணை வைத்து விசாரித்தபொது அந்தக்கார் மதுரையைச் சேர்ந்த போலீசுகாரர்க்கு சொந்தமானது என்று தெரிய வந்தது.

அவரிடம் விசாரித்தபோது,உறவினரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துவிட்டு பணி நிமித்தமாக சென்னை சென்று விட்டதாக கூறினார். காரின் ஆவணத்தை காட்டிய பின்பு காரை எடுத்துச் சென்றார்.

இந்த செய்தியை படித்தவர் ஒருவர்.பக்கத்தில் நின்றவரிடம் கேட்டார். “ஏப்பா, கலெக்டர் ஆபிஸில் மருத்துவமனை இருக்காப்பா என்று”

அதற்கு அவர்.பல தடவை போயிருக்கேன் ஆஸ்பத்திரி இருப்பதாக தெரியவில்லையே,.. ஆமா, எதுக்கு கேட்குறிங்கன்னு பதிலுக்கு அவர் கேட்க.

காருக்கு சொந்தக்காரான போலீசு சொன்னதை படித்துகாட்டினார்.

காரு வச்சிருக்கிருவங்க  என்ன இல்லாதவங்களா...என்ன என்று பொருள் பொதிந்தவாறு கேட்டார்.

6 கருத்துகள்:

  1. பார்க்கிங் கட்டணத்தை எங்கே நிறுத்தினாலும் கொடுக்கப் போறதில்லை ,இங்கே ஏன் நிறுத்தனும் ?

    பதிலளிநீக்கு
  2. பாதுகாப்பாய் இருக்குமுன்னு.........

    பதிலளிநீக்கு

  3. இது தெரிஞ்சிருந்தா நானும் அங்கேயே நிறுத்தியிருப்பேனே...

    பதிலளிநீக்கு
  4. அடுத்த சான்ஸ் உங்களுக்குத்தான்.

    பதிலளிநீக்கு
  5. கில்லர்ஜி,நீங்க அங்கே காரை நிறுத்தினா உங்களை பின்னி பெடல் எடுத்திடுவாங்க ,வேண்டாம் இந்த விபரீத ஆசை !

    பதிலளிநீக்கு
  6. கில்லர்ஜீ ...... நம்ம பகவான்ஜீயே போதும் பின்னி பெடல் எடுக்க...அப்படி பயமுறுத்ர்றாரு........

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....