பக்கங்கள்

Sunday, July 27, 2014

கல்வி தனியார் மயத்தால் ஏற்ப்பட்ட விளைவுகள்,
ஆந்திராவில் பள்ளி  பஸ் மீது  எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 19 குழந்தைகள் உள்பட 21 பேர உடல் சிதறி பரிதாபமாக இறந்த நிகழ்ச்சியானது..

பஸ்ஸை ஓட்டிய ஓட்டுநரின் அவசரத்தாலும் குறுக்கு வழியில் செல்வதை கவனித்து செல்லக்கூடிய பொறுமை இல்லாததாலும் இந்த விபத்து என்று செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதற்குமாறாக..அந்தஓட்டுநரின்அவசரத்தையும்,பொறுமையின்மையையும் ஏற்ப்படுத்தியது  பள்ளி நிர்வாகமா????? அல்லது நாளும் பரபரப்பையும், சிடுசிடுப்பையும் ஏற்படுத்திக்  கொண்டு  இருக்கும்  நிலவும்  சமூகமா..???

எது இந்த விபத்துக்கு காரணம் , முழு முதற்க்காரணம், பரபரப்பையும், அவசரத்தையும் .இயலாமையையும ஏற்படுத்திக் கொண்டு  இருக்கிற தனியார் மயம். தாராளமயம் உலகமயம்தான். இந்த மயங்களை பயபக்தியோடு..மூர்க்கமாய் அமுல் படுத்தி வரும் அரசுகளும் தான் காரணம்

ஆளும் அரசுகளின் பங்கை மறைப்பதற்க்குத்தான் ஆளும் கட்சி ஆளாத கட்சி தலைவர்கள்  ஓரே குரலில் இரங்கல் தெரிவிக்கிறார்கள். ஆளும் கட்சி அதிர்ச்சி தெரிவித்து இழப்பீடு வழங்குகிறார்கள்.  விபத்து பற்றி விசாரனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கைவிட்டு நடிப்பை முடித்துக கொள்கிறார்கள்.

இப்படிபட்ட நடிப்புகளின் ஒன்றுதான். விபத்து பற்றி அறிந்ததுமே.பள்ளியின் பிரின்பாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு.தனியார் மருத்துவமனையில் பாதுகாப்பாக படுத்துக் கொண்டு இருப்பது.

விபத்து நடந்த லெவல் கிராசிங்கில் பலமறை விபத்து நடந்தும் அதை சுட்டிகாட்டி கேட் அமைக்க மனு கொடுத்தும் போராட்டம் நடத்தியும் கேட் அமைக்க மனம் அற்ற வர்கள்  ,இத்தனை குழந்தைகள் பலியானதும் ஓடி வந்து ரயில்வே கேட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள்.

தனியார்மயம்,தாராளமயம்,உலகமயம். இந்த மூன்று மயங்களை பாடை கட்டி அனுப்பாதவரை  இந்த விபத்துகள் போன்ற துன்ப துயரங்களும் தொடர்கதையாக  தொடரும்.

8 comments :


 1. தங்களது கருத்தை நான் வரவேற்கிறேன் நண்பரே...

  ReplyDelete
 2. சரியாகச் சொன்னீர்கள் !
  த ம 1

  ReplyDelete
 3. எனது கருத்தை வரவேற்ற நண்பருக்கு நன்றி!

  ReplyDelete
 4. சொன்னதை சரியாக சொன்னதாக கருத்துரைத்த நண்பருக்கும் நன்றி!!

  ReplyDelete
 5. கல்வியில் தனியார் மயமென்பதே விபத்து.

  ReplyDelete
 6. அந்த விபத்துதான் இப்படி பழி வாங்குகிறது வேகநரி அவர்களே!!

  ReplyDelete
 7. மிகவும் சரி ! இந்த அவலங்கள் நாளுக்கு நாள் கூடுவதுதான் வேதனை !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  ReplyDelete
 8. தனியார் மயத்துக்கு பாடை கட்டாதவரை, அவர்கள் நமக்கு பாடை கட்டுவது தொடர்ந்து கொண்டு இருக்கும் சாமானியன்.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com