படம். |
உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் சந்தித்த நண்பரின் அழைப்ப்பின் பேரில் அவரது வீட்டுக்கு சென்றார் நண்பர்.
நண்பரின் வீட்டுக்கு சென்றபோது நண்பரின் துணைவியார்,தன் வாரிசுகளான மகன்,மகள் மற்றும் குடும்பத்தினரை அறிமுகம் செய்து வைத்தார். நிலவும் சாதி வெறி சமஸ்தானத்தில் நண்பர் உயர் வகுப்பை சேர்ந்தவராக இருந்தாலும் ஏற்றத்தாழ்வுகள் பார்க்க மாட்டார். சம்பிராதயங்களை எதையும் மதிக்க மாட்டார்.
ஆரம்பத்தில் அவர் இடது கட்சியின் பகத்சிங் படத்தை முன்னிலை படுத்திய வாலிபர் சங்கத்தில் சேர்ந்து தீவிரமாக பணியாற்றியவர். அதனால் மார்க்சிய பரிச்சயம் உள்ளவர். அதன் பயனாக .சாதி மறுப்பு திருமணம் செய்தவர்.
அந்த நேரங்களில், வீட்டுக்கு அழைத்து வந்துள்ள நண்பர் . இடதுகளுக்கு எதிர் முகமான பேனா கட்சியான மகஇக ஆதரவாளராக இருந்தவர். வெ்வவேறு முகாம்களில் இருந்தாலும் நண்பர்கள் என்ற முறையில் இருவரும் வாதங்களில் முட்டி மோதிக் கொள்வார்கள்.
கரசாரமாக விவாதம் செய்து கொண்ட போதிலும், நண்பரின் கட்சியில் உள்ளவர்கள். நண்பரிடம் பேச வேண்டாம் என்றும், உத்தரவு போட்டும் நண்பரிடம் பேசினால் போலீஸ் தங்களையும் பிடித்துச் செல்லும் என்று பயமுறுத்திய போதும் நண்பர் பயப்படமால் நண்பரிடம் நட்பு பாராட்டியவர்.
நண்பரும் தன் நண்பரிடம் இடது கட்சியின் அரசியல் பித்தலாட்டத்தை விடாமல் அம்பலத்தியதால். நண்பர். வாலிபர் சங்கத்திலிருந்தும் இடது கட்சியின் செயல்பாட்டிலிருந்தும் முற்றாக விலகி விட்டார்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பே இருவரும் நண்பராக இருந்தாலும் இடையில் அரசியலால் அவர்களுக்குள் எந்த பிணக்குகளும் இருந்ததில்லை.
நண்பரின் வீட்டில் நண்பரின் துணைவியார் வற்புறுத்தி சாப்பிட சொன்ன போது, நிகழ்ச்சியில் சாப்பிட்டதால் மறுத்துவிட்டு, நண்பரிடம் கூச்சத்தாலோ, ஒதுங்கும்போக்காலோ சாப்பிட மறுக்கவில்லை என்று தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.
நீண்டநாள் கழித்து சந்தித்தால், தங்களைப்பற்றியும், தங்களின் வாழ்வா தாரங்களைப் பற்றியும் தெரிவித்துக் கொண்டார். அரசியல் செயல் பாடுகளை பற்றியும் பேசிக் கொண்டனர்.
சிறிது இடைவெளியில் நண்பரின் வீட்டை பார்த்தார்.. வீட்டின் சுவற்றின் பல தலைவர்களின் படங்கள் மாற்றப்பட்டு இருந்தன.அவற்றில் சில படங்கள் நண்பரின் சிநதனைக்கும் செயல்பாடுகளுக்கும், கொண்ட கொள்கைகளுக்கும் விரோதமாக இருந்தன.
நண்பர் திரும்பி வந்தபோது சுவற்றில் மாற்றப்பட்டுள்ள படங்களை குறித்து கேட்டார். நண்பரின் சிந்தனைக்கும் கொண்ட கொள்கைகுளக்கும் எந்த வேறு பாடு இல்லாததால்........
சில தலைவர்களின் மக்கள் விரோத போக்கையும், தீண்டாமை கொடுமைகளுக்கு ஆதரவாக இருந்ததையும் நண்பர்க்கு நிணைவுபடுத்தி, நல்லவர்கள் வீட்டில் நல்லவர்களின் படங்கள்தான் இருக்க வேண்டும் என்றபோது. அவர்கள் எல்லோரும் நல்லவர்கள்தானே என்றார் நண்பர் அப்பாவியாக.....
நண்பரின் நண்பர் ஆதார சுத்தமான விவாத்தாலும் தனக்கு தெரிந்த அரசியல் நிலைப பாட்டாலும், காந்தி, நேரு, சுபாஸ்சந்திரபோஸ், சாதிவெறி குலதெய்வம், இடது கட்சியின் தலைவர் ஆகிய படங்களை கழற்றி அபபுறப்படுத்த செய்துவிட்டார்.
மார்க்சும் ஏங்கெல்சும் சேர்ந்து இருந்த படம், லெனினும் ஸ்டாலினும் ஒன்றாக இருந்த படங்கள் ,பகத்சிங் ,ராஜகுரு,சுகதேவ் மூவரும் இருந்த படங்கள், மருது சகோதரர்களின் வரைந்த படங்கள்,அம்பேத்கார் படங்கள், பெரியார் படங்கள், முதலிய படங்களை நண்பரின் துனைகொண்டு துடைத்து புதுப் பொலிவுடன் மாட்டும்படி செய்துவிட்டார்.
அம்பேத்கர் படத்தை சுவற்றில் மாட்டும் போது நண்பர் சற்று தயங்கினார். அம்பேத்கர் சாதிவெறி தலைவரில்லை, அவர் எல்லா ஒடுக்கப்பட்ட. அடக்கப்பட்ட மக்களுக்குமான தலைவர் , குற்ற பரம்பரை சட்டத்தை முதன்முதலில் நீக்கியவர் இவரே. அக்ராகாரத்து பெண்களான ,பார்ப்பன பெண்களுக்கு முதன்முதலில் விடுதலை வாங்கித்தந்தவர். அம்பேத்கரே. அதற்க்கான ஆதாரங்களை குறிப்பிட்டு , மேலும் தகவலுக்கு வே. மதிமாறன் புத்தகத்தை வாங்கி படிக்குமாறு கூறியபோது, தயக்கம் தெளிந்தவராக, நல்லவர்களின் வரிசையில் அம்பேத்கா் படத்தையும் சேர்த்தார்.
சாதி மறுப்பு மணம் புரிந்த நண்பர். அரசியல் செயல்பாடு இல்லாவிட்டாலும் அரசியல் கோட்பாட்டு தத்துவங்களில் தொடர்ந்து ஈடுபாட்டுடன் இருக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறியபோது நண்பரை நண்பர் தட்டிக் கொடுத்து தன் பாராட்டுதலை தெரிவித்தார்.
நண்பரின் துணைவியாருக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. பாதி படங்களுக்கு மேல் எடுத்துவிட்டதால் வீடு பார்ப்பதற்கு சுத்தமாக இருந்ததென்று. நண்பர்க்கும் திருப்தியாக இருந்தது..
நண்பர் விடை பெறும்போது நண்பரிடமும் அவரது துணைவியரிடமும் வலியுறுத்தி சொன்னார்.
ஆசான்களின் படங்களையும் ,தலைவர்களின் படங்களையும் தப்பித்தவறி பூஜைக்குரிய தெய்வங்களாக மாற்றி விடாதீர்கள். அதாவது ஆசான்களில் படங்களில் சந்தனம் தொளிப்பதோ, குங்குமம் பொட்டு வைப்பதோ, சாம்பிரானி புகை காட்டுவதோ கூடாது, கூடாது. கூடாது என்று.
நண்பர் உறுதியாகவும் நண்பரின் துணைவியார் வியப்பாகவும் இருந்து நண்பர்க்கு விடை கொடுத்தனர். அடுத்த முறை இந்தப்பக்கம் வரும்போது தங்கள் வீட்டுக்கு வந்து தங்களை சந்தித்துவிட்டு செல்கிறேன் என்று உறுதி கூறிவிட்டு ஆசான்களின் படங்களை ஒரு முறை பார்வையிட்டு விடை பெற்றார் நண்பர்.
.
பதிலளிநீக்குநல்ல நண்பர்தான் நண்பரே,,,,
அந்த நல்ல நண்பர்க்கு தங்களின் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
பதிலளிநீக்கு" உடுக்கை இழந்தவன் கைபோல்... ", கொள்கை நெறி விலகும் போதும் நேர்வழி காட்டிய நட்பு.
பதிலளிநீக்குநன்றி
சாமானியன்
தங்களின் கருத்துரைக்கு நன்றி! saamaaniyan saam
பதிலளிநீக்குஅந்த நண்பர் நீங்கள் தானாமே?
பதிலளிநீக்குத ம 1
அந்த நண்பர் நான்தான்னு எங்கும் சொல்லவில்லையே ஜீ
பதிலளிநீக்கு