பக்கங்கள்

Saturday, July 19, 2014

இப்படியும் விளம்பரம் செய்து படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தலாம்...

படம்.tamil.thehindu.com


ஏற்கனவே, சூப்பர் ஸ்டார் குசு போட்டதை கண்ணும் காது வைத்து மனம் கமழும் வசனையாக ஊடகங்கள் பரப்பின.

சிங்கப்பூர் சென்று அதி நவீன சிகிச்சை செய்து வாழ்நாளை அதிகப் படுத்திக் கொண்டதால் காலியான கல்லாவை நிரப்புவதற்க்காக கோச்சடையான் படத்தை டூப் போட்டு எடுத்தார்கள்.

டூப் போட்டு நடித்ததினால் அந்தப் படத்தின் மூலமாக கல்லா நிரம்பவில்லை போலும்.

அதனால், மீண்டும் கல்லாவை நிரப்பும் குறியோடு, “லிங்கா”வில் இரட்டை வேடம் ஏற்று.டூப்பு போடாமல் சூப்பர் ஸ்டார் சண்டை காட்சியில் நடித்து கொண்டு இருக்கும் பொழுது மயங்கி விழுந்தார். அல்ல அல்ல மயங்கி சரிந்தார் என்றும்

உடனே.பதற்றமடைந்த படம்பிடித்துக் கொண்டு இருந்தவர்கள். ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ..மருத்துவர்களை சூட்டிங் ஸ்பாட்டுக்கு வரவழைக்கப்பட்டு,வந்த மருத்துவர்கள் சோதித்து பார்த்து “அலர்ஜீ காரணமாக மயங்கியதாக தெரிவித்தார்களாம்.

500 படத்தில் நடித்த ஒருவர் மருத்துவ சிகிச்சைக்கு உதவ வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு காத்துகிடக்கிறார்.

இன்னொரு நடிகருக்கோ, மருத்துவமனையையே வரவழைத்து சிகிச்சை செய்யப்படுகிறது.

படத்தை இயக்குபவரோ, சூப்பர் ஸ்டார் பூரண நலத்துடன் இருப்பதாக மறுப்பு செய்தி வெளியிடுகிறார்.

கல்லாவை நிரப்புவதற்கு ,ஒரு படத்திற்கும் அதில் நடிக்கும் நடிகர்க்கும்  எப்படி எப்படியெல்லாம் விளம்பரம் கொடுத்து எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார்கள். பாருங்கள்.
8 comments :


 1. மனு கொடுத்தவர் தமிழன் ஆயிற்றே நண்பா,,, அதனால்தான்.

  ReplyDelete
 2. ஆனா இதெல்லாம் காது, மண்டையில ஏறாத ரசிகன் பொண்டாட்டி நகையை வித்து கட் அவுட் ரெடிபண்ணிக்கிட்டிருக்கான்... !

  நன்றி
  சாமானியன்

  ReplyDelete
 3. பேசாமே ஒதுங்கிவாலிப பசங்களுக்கு வழிவிடுவதை விட்டுட்டுஇன்னும் கல்லா கட்ட நினைப்பது சரிதானா ?
  த ம 1

  ReplyDelete
 4. அதெப்படி நாங்க நடித்துக் கொண்டே சாவோம்ல.......

  ReplyDelete
 5. ரசிகனா இருப்பவன் நகையை வித்து கட்டவுட்டு கட்டுறான். இன்னொரு ரசிகன் பொண்டாட்டிய கொல்லுறதுக்கே டாஸ்மாக் ரசிகனா இருக்கானே...

  ReplyDelete
 6. மனு கொடுக்காம விதியேன்னு இருக்கிறவுங்களும் தமிழன் தாங்க....

  ReplyDelete
 7. இவர் இன்னுமே ஓய்வு பெறும் நோக்கமில்லையா!!!

  ReplyDelete
 8. செத்த பொணம்கூட சுடுகாட்டுக்கு போக காசு வேணும்போது.... அய்யாவுக்கு நோக்கம் வேறு வருமா?? வேகநரி அவர்களே!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com