பக்கங்கள்

Saturday, July 19, 2014

ஐ.எஸ.ஐ முத்திரையிட்ட மின்சாரத்தையே பயன்படுத்துங்கள்.!!!


l

சட்டையை  தேய்பத்ற்க்காக தேய்ப்பவரிடம் சென்று, சட்டையை தேய்த்து கையோடு வாங்கி வருவதற்க்காக அவருக்கு அருகில் நின்றேன்.

அப்போது பக்கத்து கடையின் வாசல் திண்டில் அமர்ந்து ஒருவர் செய்திகளை படித்துக் கொண்டு இருந்தார். சிறிது சத்தத்துடன் படித்து கொண்டே வந்த பொழுது...

மின்சாரத்தை சிக்கனப்படுத்த டிப்ஸ் என்று வாசித்துவிட்டு படிக்க ஆரம்பித்தார்.

டிப்ஸ் என்று  அவர் படிக்க ஆரம்பித்தவுடன். நானும் அவர் படிப்பதை காது கொடுத்து கேட்டேன்.

 ஐ.எஸ.ஐ  முத்திரையிட்ட மின்சாரத்தையே பயன் படுத்த வேண்டும். 

சுவிட்சுகள்,பிளக்குகளை எட்டாத உயரத்தில் வைக்க வேண்டும் என்று வாசித்தார்.

கிண்டலுக்கு வாசிக்கிறாரா என்று அவர் முகத்தை பார்த்தால் எந்தவித சலனமும் தெரியவில்லை.

சட்டை தேய்ப்பவரிடம் கேட்டால் அவரைப்பற்றி தனக்கு  தெரியவில்லை.என்றார்.

ஐ.எஸ.ஐ  முத்திரையிட்ட மின்சாரத்தையே பயன் படுத்துங்கள் என்று அவருதான் அப்படி படித்தாரா? அல்லது எனக்குத்தான் அப்படி கேட்டதா??? அல்லது

மின்சாரத்துக்கு ஐ.எஸ,ஐ முத்திரைதான் இருக்கா...ஒரு வெளக்கெண்ணையும் எனக்கு புரியாமல் தவித்த போது...

 காதுல, காது கேட்கும் கருவிய வாங்கி மாட்டுறா வெண்ணெ...என்று ஒரு அசீரீரி  ஒலித்தது.


6 comments :

 1. ஐஎஸ்ஐ முத்திரையிட்ட மின்சார (சாதனங்களையே) பயன் படுத்துங்கள் என்பது இப்படி ஆகிவிட்டது.

  ReplyDelete
 2. கழுத தேய்ஞ்சு கட்டெரும்பு ஆன கதைதாங்கய்யா.......

  ReplyDelete
 3. ISI இல்லா மின்சார சாதனங்களை விற்கவே தடை செய்வதை விட்டுட்டு இப்படி ஒரு வேண்டுகோளா ?
  த ம 1

  ReplyDelete
 4. அது வேண்டு கோளா.... உத்தர வா..ன்னு எனக்கு இன்னும் தெரியலிங்க தலீவா...........

  ReplyDelete

 5. காது கேட்காதவரை வச்சுக்கிட்டு ஒருபதிவா ? பரவாயில்லையே,,,

  ReplyDelete
 6. காது கேட்கலைன்னா...ஐ.எஸ.ஐ முத்திரை மட்டும் எப்படி கேட்டு இருக்கும் சாமீயோவ்......

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com