பக்கங்கள்

Thursday, August 14, 2014

இராஜ பாளையத்து நாய் என்றாலே..சும்மா அதிருதுல்ல..

rajapalayam dog
படம்-http://www.vallamai.com/


இருக்கப்பட்டவர்கள் செல்லமாக கொஞ்சி வளர்க்கும்  நாய்களிலிலே பிரசித்தி பெற்றது நாலு கால்  நாய்கள்  .

 சீமான்களும் சீமாட்டிகளும் சேர்ந்து அழகி போட்டிகள் நடத்துவது மாதிரி, நாலுகால் நாய் வளர்ப்பவர்களும் தங்களது செல்வாக்கான மட்டங்களில் தங்களின் செல்வச் செழிப்பையும் தாங்கள் வளர்க்கும் இரண்டு நாய்களின் மாதிரியான நால் கால் நாய்களின் விசுவாசத்தையும், கீழ்படிதலையும் “ச்சூ என்றவுடன. பாய்ந்து வந்து கடித்து குதறும்  வீர பராக்கிரமத்தையும் உலகிற்கு காட்டும் விதமாக நாலுகால் நாய்கள் கண்காட்சி நடத்துவார்கள்.

இது நாடுகள் அளவிலும், மாநில அளவிலும்,மாவட்ட அளவிலும் நாலுகால் நாய்களின் அணிவகுப்பு கண்காட்சிகளை நடத்தி தங்களுக்கு பெருமை தேடிக் கொள்வதோடு அதையும்  பெருமையாக பீத்திக் கொள்வார்கள்.. 

இந்த நாலுகால் கண்காட்சிகளில் உயர்ரக நாலுகால் நாய்களான ஆப்கன் ஹைவுண்ட,சவ்சவ்,பொமரேனியன்,சுவாவா,மினியேச்சரபினசர்,பக்காக்சர் ஸ்பெனியல்,ஐரிஷ்செக்டர்,டாபர்மேன் போன்ற வெளி நாட்டு நாய்களும்,...........

ராஜபாளையம்,சிப்பிப்பாறை, கோம்பை போன்ற இந்திய உள்நாட்டு நாலுகால் நாய்களும் கண்காட்சியில் ,தங்களின் மப்பை காட்டுவதற்க்காக உலாவிட்டு அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாலுகால் நாய்களுக்கு  சாப்பிடுவதற்கு கோப்பைகளும், அங்கீகாரத்திற்க்காக  கழுத்தில் மாட்டிக் கொள்ள பதக்கங்களும், நாய் வளர்த்த பெருமகனார்க்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

இப்படியான நாலுகால் நாய்கள் கண்காட்சியில் பங்கு பெற்று உலகப் புகழ் பெற்ற இராஜபாளையத்து நாலுகால் நாய் ஒன்று. இராஜ பாளையத்தில்   சும்மா 62 பேரை கடித்து   அவர்களிடம் தன் வீரத்தை காட்டி, ஓட ஓட, விரட்டி அவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளது.

இதிலிருந்து என்ன தெரிகிறது... “இராஜபாளைத்து நாலுகால் நாய் என்றாலே...சும்மா அதிருதில்ல.”....

10 comments :

 1. பணக்கார வீட்டு நாய்க்கு கறியும் சோறும் கிடைக்கும் ,இது கஞ்சிக்கு இல்லாதவன் வீட்டு நாய் போலிருக்கே !
  த ம 1

  ReplyDelete
 2. பணக்கார வீட்டு நாய் கடிக்காத? இல்லாதவன் சதையை விரும்பாதா..?

  ReplyDelete
 3. வெறி பிடிச்சா இருப்பவன் வீட்டு நாயும் இல்லாதவனையும் கடிக்கதானே செய்யும் ?

  ReplyDelete
 4. அப்படி வெறி பிடிச்சு கடித்த...கடிக்கப் போகிற நாயைப்பற்றித்தான் ஜீ இந்தப் பதிவு.

  ReplyDelete

 5. சரி நண்பரே வெற்றி பெற்ற நாய்க்கு தெரியுமா ? நாம வெற்றி பெற்றோம்னு....
  சினிமாக்காரன் வசனம் நாயைக்கூட விட்டு வைக்கலை.

  ReplyDelete
 6. அந்த கெத்துல தானே சிலரைக் கண்டவுடன் உதார்விட்டு குலைக்குது.
  ...

  ReplyDelete
 7. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete
 8. நாலுகால் நாய்களின் அணிவகுப்பு கண்காட்சிகளை நடத்தி தங்களுக்கு பெருமை தேடிக் கொள்ளும் எங்க நாட்டவரின் அற்ப தனத்தை பதிவின் மூலம் எடுத்து சொன்ன உங்களுக்கு பாராட்டுகிறேன்.

  ReplyDelete
 9. அட, நாய் கூத்து அங்க ரெம்ப ஜேராவுல நடக்கும்...எதுக்கும் கொடுத்து வச்சிருக்கனும்ல......

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com