பக்கங்கள்

Thursday, September 11, 2014

பட்டையை கிளப்பும் தேர்தல் அதிகாரியும்..துாள் பரப்பும் பாஜக கட்சியினரும்

election logo
http://tamil.webdunia.com/


மதுரை மா...நகராட்சி வார்டு 85-ல் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக ஹரிகர சுதன் போட்டியிடுகிறார். அவருக்கு மாற்று வேட்பாளராக  கர்த்திகேயன் மனு செய்தார்.

வேட்பு மனு வாபஸ் பெறும் நாளில் ஹரிகரசுதனுக்கு மன்மொழிந்தவர்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதாக தகவல் பரவியது.

தேர்தல் அதிகாரி பழனிச்சாமியும் இதை உறுதிப்படுத்தும் விதமாக  அதிமுக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிப்பு நோட்டீஸ் போர்டில் ஒட்டினார்.

தகவல் அறிந்து வந்த பாஜ வேட்பாளர் ஹஹரிகரசுதனும் கட்சியினரும் விரைந்து வந்து தேர்தல் அதிகாரி அறையை முற்றுகையிட்டனர்.

ஹரிகரசுதனுக்கு முன்மொழிந்த பாஸ்கரன், மாற்று வேட்பாளரான காத்திகேயனுக்கு முன்மொழிந்த சரவணக்குமார் இருவரும், மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து கையெழுத்துட்டு  மனுக்களை வாபஸ் பெற்று சென்று விட்டதாக கூறி,அவர்கள் கையெழுத்திட்ட ஆவணங்களை காட்டினார் தேர்தல் அதிகாரி.

பாஸ்கரன், சரவணக்குமார் இருவரும் தன்னுடன் தேர்தல் பிரசாரத்தில் இருக்கும்போது, அவர்கள் வந்து கையெழுத்து போட்டு மனுவை வாபஸ் பெற்றதாக சொல்வது பொய் என்றும் இது அவர்கள் கையெழுத்து இல்லை. போலி கையெழுத்துகளை போட்டு, அதிகாரிகளும், அதிமுகவினரும் சேர்ந்து நாடகம் நடத்தி இருப்பதாக குற்றம் சாட்டி கோஷமி்ட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

மாநகராட்சி கமிஷனர்., இவர்களுக்கு பதில் சொல்ல மறுத்து, காரில் ஏறும்போது, காரை மறித்து எதிர்ப்பைக் காட்டினர். அங்கு இருந்த போலிசார் பாதுகாப்பாக கமிஷனரை அனுப்பி வைத்தனர்.

பாஜக வேட்பாளரோ.. எங்களில் யாரும் கையெழுத்து போட்டு வாபஸ் வாங்கவில்லை. ஒரு நாடகத்தை நடத்தியிருக்கிறார்கள். இந்த நாடகம் தேர்தல் ஜனநாயகத்துக்கே எதிரானது. அதிமுகவின் அராஜகம் எல்லை மீறி போகிறது என்றார்.

பாஜவின் நகர் மாவட்ட தலைவர் முத்தனசாமி என்பவரோ..“ எங்கள் ஆட்கள் வாபஸ் பெற வந்திருந்தால், இங்குள்ள சிசிடிவி கேமாராவில் பதிவாகி இருக்குமே? அதைக் காட்டச் சொல்லுங்கள் என்று தன் கண்டுபிடிப்பை வெளிப்படுத்தினார்.

பாஜ பிரச்சார அணியின் மாநிலத் துணைத் தலைவர் சசிராமன். “தேர்தல் நடத்தும் அதிகாரி பழனிச்சாமியின் ராஜினாமா கடிதத்தை தெருவில் போகிற ஒருவர் கொடுத்தால் அவரை ராஜினாமா செய்யச் சொல்வார்களா? என்றும் இந்த அநியாயத்துக்கு (அ)நியாயம் வேண்டும் என்று தூள் பரப்பினார்.

4 comments :

 1. இந்த வாரம் முழுவதும் பட்டையைக் கிளப்பும் வாரமா ?
  த ம +1

  ReplyDelete
 2. அவரவர்கள் பட்டையை கிளப்பி கொண்டு இருக்கும்போது..ஏதோ என்னால முடிஞ்சதை கிளப்புகிறேன் ஜீ

  ReplyDelete

 3. சிசிடிவி கேமரா கண்டுபிடிச்சு இதுக்கும் பயன்படுதா ? நான்கூட நினைச்சேன் குத்தியானந்தாவுக்குனு.

  ReplyDelete
 4. குத்தியனாந்தாவுக்கு வச்சிருந்த குத்தியானந்தா உடச்சு பிட்டாருங்கோ... அதனாலதான் இம்புட்டு வேலை........

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com