வெள்ளி 12 2014

தியாகத்தின் விளைநிலத்தை சாதியத் தலைவராக மாற்றிய சாதி வெறியர்கள்..

http://mathimaran.files.wordpress.com/2008/07/voc11.jpg
  




வ.உசியின் பிறந்த நாள் அன்று இந்தியப் பேரரசரின் குரு-உத்சவ் க்கு கலந்து உரையாடுவதற்க்கான ஏற்பாட்டு பரபரப்பில் பள்ளிகள் முழ்கிவிட்ட நிலையில்.சுதேசிப்போர்க்கப்பல் தளபதி வ.உ.சியை எல்லோரும் மறந்துவிட்ட நிலையில் ஓட்டுக்காக சில அரசியல்கட்சிகள்  வ.உ.சிக்கு சடங்குத் தனமாக மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்துவிட்ட நிலையில்,.. சாதிவெறி குலத் தெய்வத்தின் சாதிய வெறியர்கள் போலவே வெள்ளாள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அணிவகுத்து வந்தது . செக்கிழுத்த செம்மலையும் சாதிய தலைவராக்கிவிட்டார்கள். என்பதையே காட்டியது.

எந்த எதிரிகளை எதிர்த்து வ.உ.சி கப்பல் விட்டாரோ, அந்த எதிரியின் தயவிலேயே கப்பல்விட்டு அதற்கு அவரது பெயரையும் சூட்டி களங்கப்படுத்தியது “சுதந்திர இந்தியா” தன்னுடைய சித்தரவதைகள் மூலம் வ.உ.சியின் உடலிருந்துதான் பிரிட்டீஸ் ஏகாதிபத்தியம் ரத்தம் குடிக்க முடிந்தது. காங்கிரஸ் துரோகிளோ, தேச விடுதலைக்கு துடித்து அடங்கிய அந்த உள்ளத்தையும் உடைத்து ரத்தம் குடித்துவிட்டார்கள்.

இப்படிபட்ட துரோகிகள் நிறைந்த இந்த நாட்டில்தான்.போர்க்குணமுள்ள தலைவராகவும்,இணையில்லா தியாகியாகவும் திகழ்ந்த வ.உ.சியை தியாகத்தையும் துரோகத்தையும் பகுத்து பார்க்காத  கயவர்கள்

சுதேசி போர்க் கப்பல் தளபதியை..வெள்ளாளர் சமூகத் சாதியத் தலைவராக மாற்றிவிட்டார்கள் . வெள்ளாள சமூக சாதிய வெறியர்கள்.

இப்படிபட்ட தியாகித்தின் விளைநிலத்தை சாதியத் தலைவராக மாற்றிதற்கு, சுழி போட்டு வழிகாட்டியாய் இருந்தவர்கள்.சாதி வெறி குலத் தெய்வத்தை சர்வதேச தரத்துக்கு தூக்கி நிறுத்த அயராது பாடுபடும்  ஜாதிய வெறியர்கள்தான்.என்பது  எத்தனை பேருக்கு தெரியும்.

2 கருத்துகள்:

  1. காந்தியைக் கூட 'இங்குள்ள 'ஒரு சாதி சொந்தம் கொண்டாடிய கூத்தும் நடந்தது நம்ம தங்கத் தமிழகத்தில்தான் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. தங்கத் தமிழகம் தப்பு தலைவரே.. சாதியத் தமிழகம்தான் சரி தலைவரே!!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...