பக்கங்கள்

Sunday, September 21, 2014

ஆலயப் பிரவேசத்தில் புளுகிய தினமணி....

maruthadi.wordpress.comஆளுகின்ற செயலலிதாவிற்கு பாயிண்டுகள் எடுத்துக் கொடுத்து புவர் சர்குலேசன் என்று பெயர் பெற்ற தினமணி .

1939 ஆண்டு சூலை 8ம்நாள் வைத்தியநாத அய்யர் என்பவர் தலைமையில் தாழ்த்தப்பட்டவர்களோடு மதுரை மீனாட்சி கோயிலுக்குள் பிரவேசம் செய்தார் என்பதை “ எங்க சாதிக்காரருக்கு சாதிய உணர்வே கிடையாது” என்று ஆதிக்க சாதி வெறியர்கள் பெருமையாக சொல்லிக் கொள்வது போல “ உயர் சாதிக்காரர்களும் “ ஆலய பிரவேசத்”தைத் பெருந்தன்மையாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள் ..நடுநிலையாளர்கள் என்று சொல்லிக் கொள்கிற உயர் சாதி வெறியர்கள்.

2007ல் சூலை-8 தேதிய தினமணியில், தாழ்த்தப்பட்டவர்கள் மதுரை மீனாட்சி கோயிலுக்குள் நுழைந்தார்கள் என்பதைவிட,அது ஒரு பிராமனர் தலைமையில் நடத்தப்பட்டது என்ற செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டது தினமணி.

பார்ப்பன சாதி வெறிபிடித்த ராசாசியின் ஆலோசனையோடும் அவரின் ஆதரவோடும் தான் அந்த ஆலயப் பிரவேசம் நடந்திருக்கிறது.


சங்கரராமனை கொலை செய்த செயந்திரனை கைது செய்த செயலலிதாவை, பார்ப்பன எதிர்ப்பாளராக பார்க்க முடியாதோ..அது போலத்தான், மதுரை மீனாட்சி கோவில் பிரவேச மோசடியும், இதில் சாதி வெறியின் குல தெய்வமும்  வராமல் ஆதரவு அளித்தார் என்ற பித்தலாட்டமும்..

நடுநிலை நாளேடு என்று புளுகித் திரியும் தினமணி சந்தடி சாக்கில், மதுரை மீனாட்சி கோயில் நுழைவு பிரவேசம்தான் “முதல் ஆலய பிரவேசம்” என்று வரலாற்று புளுகு மூட்டையை கடை பரப்பிவிட்டது.

இந்த அய்யர்-அய்யங்கார் மற்றும் சாதி வெறி குல தெய்வத்தின் கூட்டுத் தயாரிப்பான  புளுகு மூட்டைகளுக்கு, பத்தாண்டுகளுக்கு முன் சுய மரியாதை இயக்கத்தின் ஆலய பிரவேசம் நடந்திருக்கிறது.

அது ஈரோடு கோட்டை ஈசுவரன் கோயில் தேவஸ்தான கமியிட்டின் தலைவராக இருந்த தந்தை பெரியார் 4-4-1929- அன்று “ஈசுவரன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவரை அனுமதிக்க வேண்டும்” என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்.

அந்தத் திர்மானம் நிறைவேற்றப்பட்ட அன்று மாலையே பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த அ. பொன்னம்பலவானரும்,குத்தூசி குரசாமியும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தோழர்களான ஈரோடு, கச்சேரி வீதி ஈசுவரன்,மஞ்சை மேடு பசுபதி,கிருஷ்ணபாளையம் கருப்பன் ஆகியேரோடு  நுழைந்தனர்.

ஆத்திரமுற்ற ஆதிக்கச் சாதியினர், அவர்களை கோயிலுக்குள்ளே வைத்து பூட்டி விட்டனர்.

இரண்டு நாட்கள் கோயிலுக்குள்ளே இருந்த அவர்களுக்கு பெரியாரின் துணைவியார் நாகம்மையார்தான் உணவு கொடுத்து அனுப்பியிருக்கிறார். வெளியூர் சென்றிருந்த பெரியார் திரும்பிய பிறகுதான் தோழர்கள் கோயில் சிறையில் இருந்து வெளியில் வந்தனர்.

இந்த உண்மைகளை வசதியாக மறைத்துவிட்டு , “மதுரை மீனாட்சி கோயில் ஆலயப் பிரவேசம்தான் முதல் அரிசன ஆலயப் பிரவேசம்” என்று வரலாற்று புளுகு மூட்டையை கடை பரப்பியது.

இந்தப் புளுகு மூட்டையைத்தான் அய்யர்களும்,அய்யங்கார்களும் சாதி வெறி குல தெய்வத்தின் சாதி வெறியர்களும், வரலாறு தெரியாத கூமுட்டைகளும் டாமரம் அடித்துக் கொண்டு திரிகிறார்கள்.


நன்றி!!!.... வே. மதிமாறன். வேர்டுபிரஸ்.காம்.

6 comments :


 1. அறியாத தகவல்கள் தந்தீர் நன்றி நண்பரே....

  ReplyDelete
 2. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! நண்பரே!!

  ReplyDelete
 3. ஏற்கனவே புவர் சர்குலேஷன்,இம்மாதிரி புளுகு செய்திகளால் இன்னும் மோசமாகி விடுவது உறுதி !
  த ம 1

  ReplyDelete
 4. எதிர்ப்பு காட்டுவோர் எப்போதும்
  அதைச் செய்துகொண்டே தான் இருப்பார்கள்..
  தகவல் களஞ்சியம்...
  ==
  என் வலைத்தளம் உங்களை அன்போடு வரவேற்கிறது நண்பரே...

  ReplyDelete
 5. இப்போதே மோசமாகிவிட்டது தினமணி...அது லேடிக்கும்....மோடிக்கும் காவடி தூக்கி கொண்டு திரிகிறது...

  ReplyDelete
 6. வரவேற்கும்போது வராமல் இருப்பேனா
  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு. மகேந்திரன் அவர்களே!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com