ஆலய பிரவேசத்தில் புளுகிய தினமணி..என்ற பதிவை படித்துவிட்டு நண்பர் ஒருவர் இப்படிச் சொன்னார்.
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை, நிலத்தில் அஞ்சாத நெறிகள்” என்று தலையங்க கட்டுரை பக்கத்தில் அச்சடித்திருப்பதை பாத்தீங்களா என்று கேட்டார்.
நான் அதை பார்ப்பதுமில்லை படிப்பதுமில்லை .... அந்த எழுத்துக்கும் தினமணிக்கும் எந்த சம்பந்தமே இல்லீங்க....... அதிமுகவிக்கும் பெரியார் கொள்கைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா....... அதுமாதிரிதாங்க...என்றேன்
நீங்க தினமணி வருட சந்தாவா...? என்று கேட்டார்.
என் நண்பர் ஒருவர் வருட சந்தாராக இருக்கிறார் அவர் இப்படிச் என்று அந்த விபரத்தை சொன்னேன்..
கருவாடு பத்தி செய்தி போட்ட திருவாளர் பத்திரிகை யால... தினமணி காரன் சர்குலேசன் படுத்து விட்டது என்றார்
எப்படி என்று கேட்டபோது .......சொன்னார்.
போன தடவை வருடம் சந்தா தொகை ஆயிரத்துக்கு கொஞ்சம் கம்மியா வாங்கினார்கள்... திருவாளர் இந்து வந்த பிறகு ஏழு நூறுக்குள்ள வருட சந்தாவ.. குறைச்சிட்டான்.
இதோடு இன்னொரு ரகசியத்தையும் அவர் சொன்னார்.. வரவர தினமணி நடுநிலை யிலிருந்து பதவி உயர்வு பெற்று லேடிக்கும் மோடிக்கும் பழனி முருகனின் பக்தர்களை விட காவடி துாக்குறான். அய்யப்பன் பக்தர்களை முந்தி கொண்டு சரணம் போடுறான். அடுத்தத் தடவை தினமணி சந்தாவை நிறுத்திடப் போகிறேன் என்றார்.
நானும் ”ஆமா கட்டெறும்பு வளர்ந்து கழுதையா போச்சு....” கழுதைய வச்சு நீங்க சங்கீதத்தையா கேட்க முடியும்... என்றேன்..
நண்பரும்.. ஆமமா “கழுத கத்தல சகிக்க முடியல”.. நானும் அடுத்தத் தடவை சந்தாவிலிருந்து விலகிடப்போறேன் என்றார்.
நண்பரும்.. ஆமமா “கழுத கத்தல சகிக்க முடியல”.. நானும் அடுத்தத் தடவை சந்தாவிலிருந்து விலகிடப்போறேன் என்றார்.
#“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை, நிலத்தில் அஞ்சாத நெறிகள்”#
பதிலளிநீக்குமனச்சாட்சியே இல்லாமல் இப்படி போட்டுக் கொள்ள எப்படித்தான் மனசு வருதோ ?
த ம 1
பதிலளிநீக்குகழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனகதை தெரியும்,,, இதென்ன புதுசா இருக்கு,,,
நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது என்பது மாதரிதான் இந்த தினமணியின் மனசாட்சியும்.
பதிலளிநீக்குகழுதைதான் தேய்ந்து கட்டெறும்பாக மாறுமா..? ஏன்? கட்டெறும்பு வளர்ந்து கழுதையானதுக்கு சான்றுதான் தினமணி
பதிலளிநீக்கு