செவ்வாய் 23 2014

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற லட்சணம்


Saranya Charu புதிய படமொன்றை இணைத்துள்ளார்.
்தகவல் அறியும்உரிமைச் சட்டத்தின்கீழ் இந்த வழக்குக்கு கர்நாடக
அரசு எவ்வளவு செலவு செய்திருக்கிறது என்பதோடு, கடந்த 10
ஆண்டுகளில்ஜெயலலிதா நீதிமன்றத்துக்கு வராமல்
இருந்ததே பெரும் குற்றம் என்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
நரசிம்ம மூர்த்தி: ''சட்டத்தின் முன்
அனைவரும் சமம். ஆனால்,
அரசாங்கத்தை ஏமாற்றி வருமானத்துக்கு அதிகமாக ரூ.66
கோடி சொத்துகள் சேர்த்ததாகக்
குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா என்ற
ஒரு தனி மனிதருக்கு இந்த அரசாங்கம்
எவ்வளவு செலவு செய்கிறது என்ற
ஆதங்கத்தில்தான் தகவல் அறியும்
உரிமைச் சட்டத்தின் கீழ்
வழக்குக்கு ஆன செலவுகளைப்பெற்றேன்.
இந்த வழக்கு கர்நாடகத்துக்கு மாற்றப்பட்ட
பிறகு, 2004 முதல்
31.3.2014 வரை ஒவ்வோர் ஆண்டும்
ஆன செலவு விவரம்:
2004-05-ம்
ஆண்டு ரூ.20,57,318,
2005-06-ம்
ஆண்டு ரூ.35,07,489,
2006-07-ம்
ஆண்டு ரூ.11,02,878,
2007-08-ம்
ஆண்டு ரூ.16,62,143,
2008-09-ம்
ஆண்டு ரூ.9,99,542,
2009-10-ம்
ஆண்டு ரூ.8,68,891,
2010-11-ம்
ஆண்டு ரூ.19,92,031,
2011-12-ம்
ஆண்டு ரூ.38,96,828,
2012-13-ம்
ஆண்டு ரூ.39,61,506,
2013-14-ம்
ஆண்டு ரூ.86,50,990... என
கடந்த 10 ஆண்டுகளில்
ரூ.2,86,99,616
செலவாகி இருக்கிறது. இன்னும்
இந்த வருடம் மார்ச்
மாதத்திலிருந்து இன்றைய
தேதி வரை கடந்த 6
மாதங்களுக்கான செலவையும்,
சென்னையில் ஏழு ஆண்டுகள்
நடைபெற்றபோது ஆன செலவையும்
சேர்த்தால் ரூபாய் ஐந்து கோடியைத்
தாண்டும்.
கர்நாடகாவில் உள்ள பல
நீதிமன்றங்களில் இன்னும் அடிப்படை வசதிகள்கூட இல்லை.
கர்நாடக ஏழை எளிய மக்கள் சட்ட
விழிப்பு உணர்வு, சட்ட உதவிகள் இல்லாமல் தவிக்கிறார்கள். ஓர்
அரசு துறையில் ஒரு விண்ணப்பப்
படிவம் கேட்டால்கூட, 'போய் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு வா’
என்று ஜெராக்ஸ் எடுப்பதற்கான
ஒரு ரூபாயைக்கூட
மக்களுக்கு அரசாங்கம்
செலவு செய்யத் தயங்குகிறது. ஆனால், ஒரு தனி மனித
வழக்குக்கு அரசாங்கம்
இவ்வளவு பணம்
செலவு செய்திருப்பதை நினைக்கும்போது, ஜனநாயகத்தின்
மீது நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. அதனால் வழக்குக்கு ஆன மொத்த செலவுகளையும்
ஜெயலலிதாவின் சொந்தப் பணத்தின்
மூலமாகவே வசூலிக்கப்பட வேண்டும்.
மேலும் கர்நாடகாவில் உள்ள பல கீழ்
நீதிமன்றங்களிலும் உயர்
நீதிமன்றத்திலும் நீதிபதிகள்
பற்றாக்குறையாக இருக்கின்றனர்.
இதனால் பல்லாயிரக்கணக்கான
வழக்குகள் விசாரணை செய்ய முடியாமல் தேங்கிக் கிடக்கின்றன.
ஆனால், இந்த வழக்குக்காக ஒரு தனி நீதிமன்றத்தையே ஒதுக்கி, அதற்கு ஒரு தனி நீதிபதியையும்
அரசு சிறப்பு வழக்கறிஞர்களையும்
நியமித்து நீதிமன்றத்தின்
முழு வேலை நேரத்தையும்
பயன்படுத்திக்கொள்ளாமல் பல நேரங்களில் 1/2 மணி நேரமும், ஒரு மணி நேரமும் நீதிமன்றம்
நடைபெற்றுள்ளது. இது எந்த விதத்தில் நியாயம்?
சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் உள்ள தலைமை நீதிபதியின்
நீதிமன்றம்கூட சாதாரணமாகஇருக்கிறது
ஜெயலலிதா வழக்கு நடைபெறும்
சிறப்பு நீதிமன்றம் 50, 60
ஸ்பெஷல் இருக்கைகள்
போட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது
இதே மாநிலத்தின் முன்னாள் முதல்வர்
எடியூரப்பா மீது ஒரு நில
அபகரிப்பு புகார் நீதிமன்றத்தில்
நடைபெற்றபோது நீதிமன்றத்தின்
ஒவ்வொரு வாய்தாவுக்கும்
மக்களோடு மக்களாக வந்து வழக்கைச்
சந்தித்தார். முன்னாள் பாரத பிரதமர்
இந்திரா காந்தி மீது கர்நாடக மாநிலத்தில் ஒரு மிகச் சிறிய
சிக்கபல்லாபூர்
தாலுக்கா நீதிமன்றத்தில் எலெக்ஷன்
சம்பந்தமான புகார்
வழக்கு ஒன்று நடைபெற்றது. அந்த
வழக்குக்காக டெல்லியில் இருந்து வந்து ஆஜரானார்.
இப்படி எத்தனையோ தலைவர்கள்
நீதிமன்றங்களுக்குத்
தலைவணங்கி வருகிறார்கள்.
ஜெயலலிதாவுக்கு இந்த நீதிமன்றம்
எந்த மூலையில்
இருக்கிறது என்றுகூட
தெரியாது. நீங்கள் நீதிமன்றத்துக்கு வராமல்
புறக்கணித்ததைப் பலரும்
பின்பற்றுவார்கள்''

6 கருத்துகள்:

  1. வருமானத்திற்கு அதிகமாக் கோடிக்கணக்கில் சேர்த்ததை விசாரிக்கவும் ஆண் செலவும் கோடிக்கணக்கிலா?இது ஜனநாயகமா ,பணநாயகமா ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. கணக்கு வழக்க பார்த்தாலே இது பணநாயகம்தான் என்று அடித்துச் சொல்கிறது.

    பதிலளிநீக்கு

  3. மக்கா, மக்கா, நான் என்னைத்தைச் சொல்ல...
    தலை சுத்துது நண்பா....

    பதிலளிநீக்கு
  4. //ஒரு ரூபாயைக்கூட மக்களுக்கு அரசாங்கம் செலவு செய்யத் தயங்குகிறது. ஆனால், ஒரு தனி மனித வழக்குக்கு அரசாங்கம் இவ்வளவு பணம் செலவு செய்திருப்பதை நினைக்கும்போது, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை இழக்கச் செய்கிறது.//
    உண்மை. ஜெயலலிதா நீதிமன்றத்திற்கு வரமலே இருக்க முடியும் என்ற நிலையும் இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. வழக்குக்கின் மொத்த செலவை ஜெயலலிதாவின் சொந்தப் பணத்தின் மூலமாகவே வசூலிக்கப்பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. தலை சுத்த வேண்டியது டாஸ்மாக் குடிமக்களுக்குத்தான் மக்கா...நமக்கு இல்லை நண்பா.....

    பதிலளிநீக்கு
  6. வழக்குக்கின் மொத்த செலவை ஜெயலலிதாவின் சொந்தப் பணத்தின் மூலமாகவே வசூலிக்கப்பட வேண்டும்.--அதுதான் என்து விருப்பமும் நண்பரே!! எனது விருப்பம் எதுவும் நிறைவேறியதாக சரித்திரம் இல்லை. அதோடு இதுவும் சேராமல இருக்கும்????ஃ

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...