பக்கங்கள்

Saturday, September 06, 2014

ஒரு ராஜா..இந்த உலகத்தை வெறுத்தார்...அவர்க்கு அவரது தாய் தந்தையர் வைத்த பெயர் ராஜா,  அவர் நடுத்தர பள்ளியில் மாணவராக படித்துக் கொண்டு இருக்கிறார்.அவர் வீட்டுக்கு ஒரு பிள்ளையாய் இருந்த போதும் ராஜாவுக்கான செல்வாக்கு எதுவும்  கிடைத்தது இல்லை.

அவர் படிக்கும் பள்ளியின் இடைவேளையின்போது ஒவ்வொரு பிள்ளைகளும் தங்களின் பெற்றோர்களின் கொடுத்த காசில் தங்களுக்கு பிடித்தமான திண்பண்டங்களை வாங்கி தின்பதை ஏக்கத்தோடு பார்ப்பார்.

தனக்கும் தன் பெற்றோர்கள் காசு கொடுத்து உதவினால் தானும் தனக்கு பிடித்த திண்பண்டங்களை தின்னலாமே என்று நிணைத்து ஏங்குவார். ஒவ்வொரு முறையும் பள்ளிக்கு வரும்போது தனது தாயிடமும் தந்தையிடமும் காசு கேட்கும்போது திட்டும் வசவுமே கிடைக்கும்,  எப்போதாவது அவரது தாய் அபூவர்மாக காசு கொடுத்தப்போதும் தான் நிணைத்த தின்பண்டங்களை வாங்கித் தினபதற்கு பற்றாக்குறையாகவே இருக்கும்.


வகுப்பில் தனக்கு அருகில் இருக்கும் மாணவர்கள் அவர்களுக்கு பிடித்த திண்பண்டங்களை வாங்கித் தின்னும்போது ராஜாவுக்கு வாயில் எச்சில் ஊறும். கைநீட்ட மாட்டார். எப்போதாவது அவர்கள் தருவதை மறுக்காமல் வாங்கி தின்பார். பல தடவை அவர்கள் கொடுத்தபோது வேண்டாம் என்று மறுத்துவிடுவார். ஏனென்றால் பதிலுக்கு அவர்களுக்கு இவர் வாங்கித் தரமுடியாததால் மறுத்துவிடுவார். ஒரு மாணவர், நாங்களே, உனக்கு கொடுக்குறோம்டா... என்னிக்காவது நீ எங்களுக்கு வாங்கித் தந்து இருக்கியாடா என்று கேட்டு விட்டார்.

தனது தாய் தந்தையர்கள் தன்னை பெற்றார்களா..? அல்லது தத்து எடுத்தார்களா என்று ராஜாவுக்கு கேள்வி எழும். தனக்கு ஏன்? காசு தரமாட்டுகிறார்கள் என்று யோசிப்பார்.

சில வேளைகளில் பள்ளி விடுமுறை நாட்களில் தாயும் தந்தையும் அடித்துக் கொண்டு சண்டையிடுவார்கள். வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை வாங்கியக் கடனுக்கு வட்டி கொடுக்க முடியவில்லை, நீ வேலைக்கும் போகாம...கிடைத்த வேலையின் சம்பளத்தை குடித்து விட்டு வருகிறாய்யா. என்று தாய் சத்தம்போட....... எங்கடீ வேல கிடைக்குது....அப்படி வேலை கிடைத்தாலும் ரெம்ப கஷ்டமா இருக்குதுடி அதால மே ளும் அடித்து போட்ட மாதிரி வலிக்குதுடீ.. ஆஸ்பத்திரிக்கு போனா கொஞ்சோன்னு காசா வாங்குறாங்கே.... அதான்டீ கொஞ்சமா ஊத்துனேன்டிஎன்று தந்தை சொல்ல அன்று இரவு முழுவதும்  ரெண்டு பேரும் முரண்டு பிடித்து சோறும் ஆக்கமா இருந்துவிடுவார்கள்.

 ஒரு நாள் தனது தாயும் தந்தையும் கையில் காசு வைத்திருப்பதை பார்த்து விட்டு  தான் நிணைத்த திண்பண்டத்தை வாங்குவதற்குரிய பணத்தைக் கேட்டு அடம் பிடித்தார் ராஜா. வழக்கம் போலவே, அவருக்கு பத்தாத காசை கொடுத்தார்கள். காசு இருக்கும்போதாவது தர மாட்டுகிறீர்களே என்று கேட்டபோது.. உறவினர் வீட்டு கல்யாணத்துக்கு மொய் செய்வதற்கு வேண்டும் என்று சொல்லி இவரை திட்டி பள்ளிக்கு போகச் சொல்லி அனுப்பி விட்டார்கள்.

அவர்கள் கொடுத்த காசை அவர்களிட்மே தூக்கி எறிந்து விட்டு, புத்தகப்பையை தோளில் சுமந்தக் கையோடு கண்களில் பொல பொல வென்று வழியும் கண்ணீரை  துடைக்க மனமின்றி பரிதாபமாக நடந்து வந்தார்.

ஏங்கி..ஏங்கி அழுததால் வந்த சோர்வைப் போக்குவதற்க்காக  ரயில் வண்டி வரும் பாதையில் உள்ள திண்டில் அமர்ந்து  அழுகையை நிறுத்த முடியாமல் கண்களில் வழியும் நீரை  துடைத்துக் கொண்டு இருந்தார்.

அப்போது விரைவு ரயில் வண்டி ஒலி எழுப்பியபடி வேகமாக வந்து கொண்டு இருந்தது.   வழியும் நீரை துடைப்பதை நிறுத்திய ராஜா சற்றும் தாமதிக்காமல் ரயில் முன் பாய்ந்து இந்த உலகத்தை வெறுத்தார்.


2 comments :

  1. இது சார்லி சாப்ளின் பட கதைப் போல உள்ளதே !
    த ம 1

    ReplyDelete
  2. அவர் படக்கதை மாதிரி இருப்பதால்தான் அவர் படத்தை போட்டு இருக்கேன் ..

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com