பக்கங்கள்

Friday, September 05, 2014

துரோகச்சாரியை..துரோணச்சாரியாக கொண்டாடும் கதை...

படம்--https://www.facebook.com/mathimaranv?fref=photo“ஏகலைவன்” என்ற வேடன் ஒருவர் அவர்.. பாண்டவர்களின் அக்மார்க் குருவான துரோணாச்சரிடம் சென்று தன்னையும் சீடராக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார்.சத்தியர்களுக்கு மட்டுமே நான் குருவாக இருப்பதால், மற்றவர்களுக்கு குருவாக முடியாது என்று மறுத்துவிட்டார். அந்த வேடன் ஏகலைவரோ... குருவாக இருக்க முடியாது என்று மறுத்துவிட்ட அந்த துரோணச்சாரியையே மனதில் குருவாகக் கொண்டு, வில் வித்தையில் தனியாக கற்று சிறந்த மாணவராக வலம் வந்தார்.  

வில் வித்தை விளையாட்டில்  யாராலையும் ஜெயிக்க முடியாதவராக ஏகலைவனைக் கண்ட , பாண்டவர்களின் குருவானவர். தன்னுடைய சத்திரிய மாணவனைவிட எவனும் சிறந்தவனாக இருக்கக்கூடாது என்று மனதில் அழுக்காறு கொண்டு சத்தரியர்களின்  குருவுக்கே உண்டான கைங்கரியத்தால்..................

துரோணச்சாரியார் துரோகச்சாரியாக மாறி துரோக்த்தனமாக, ஏகலைவனின் கட்டை விரலை காணிக்கையாக பலி வாங்கினான். இதனால்  தான் துரோகச்சாரியாக புகழ் பெற்றான்.

 இத்தகைய துரோகச்சாரியின்  நிணைவைப் போற்றும் விதமாககத்தான் சிறந்த விளையாட்டு வீரர்களின் பயிற்சிகளரான வாத்தி மார்களுக்கு துரோகச்சாரி விருது வழங்கப் படுகின்றன. துரோகச்சாரியின் துரோகத்தை மறந்துவிடாமல் இருப்பதற்க்காகத்தான்  ஆண்டுதோறும் குரு- உத்சேவ் கொண்டாடப்படுகின்றன.

 பார்ப்பன வர்ணசிரமமான, நாலு வர்ண நியாயத்தை நிலை நாட்டிய துரோச்சாரியின் தினத்தை போற்றித்தான் இந்தியாவின் பேரரசர், தொலைக்காட்சியில்... இந்தியாவின் பேரரசராக கணவு கண்டதில்லை என்று தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில்  கலந்து உரை ஆடினார்.

4 comments :


 1. இப்படியும் ஒன்று இருக்கிறதா?

  ReplyDelete
 2. புராணம் என்றாலே புரட்டுதான்..அந்தப் புரட்டுகளிலும் துரோகம்தான் நிறைந்துள்ளது.

  ReplyDelete
 3. அந்த புரட்டுக் கதையில் வரும் ஏகலைவன் ,அந்த துரோகக் சாரியாரை தன் மானசீக குரு ஏன் சொல்லிக்கணும் ?கட்டை விரலை இழந்த பின்னும் ?
  த ம 1

  ReplyDelete
 4. கட்டை விரலை இழந்தபின் ஏகலைவன் அந்த துரோகச்சாரியை மனசீக குரு என்று யாரிடமும் சொல்லவில்லை...


  குறிப்பா...பகவான்ஜீயிடம் கூட சொல்லவில்லை....

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com